தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 26.9.2016
அறிக்கை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் திரு.ராகுல் காந்தி அவர்கள் உத்திரப் பிரதேச மாநிலத்தில் சுற்றுப் பயணம் செய்து விவசாயிகளையும், மக்களையும் சந்தித்து வருகிறார். திரு.ராகுல்காந்தி அவர்களின் வாகனத்தை நோக்கி யாரோ ஒரு காட்டுமிராண்டி ஏதோ ஒரு பொருளை வீசி அநாகரீகமாக நடந்து கொண்ட நாகரீகமற்றசெயலை தமிழக காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.

திரு. ராகுல்காந்தி அவர்கள் மக்கள் தலைவர். வரலாற்றுச் சிறப்புமிக்க காங்கிரஸ் கட்சியின் துணைப் பெருந்தலைவர். மக்கள் செல்வாக்கு நிறைந்தவர். மக்களுக்காக தன்னை அர்பனித்து பாடுபடுகிற தலைவர். அவரிடம் அநாகரீகமாக நடந்து கொள்ள முயற்சித்த நாகரீகமற்ற இம் மனிதனின் செயலைக் கண்டிக்கிறேன்.

இதுபோன்ற இழி செயல்களால் திரு.ராகுல் காந்தி அவர்களை அச்சுறுத்தவோ, பயணத்தை தடுக்கவோ முடியாது. துணிச்சலும், மக்கள் நலனில் அக்கறையும் உள்ள நாகரீகம் நிறைந்த தலைவர் திரு.ராகுல் காந்தி அவர்களின் வெற்றிப் பயணம் தொடரும்.

14457395_568319676688495_3320639222366035894_n

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *