தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி காங்கிரஸ் தேர்தல் அறிக்கை நிகழ்ச்சி இன்று (27.4.2016) புதன்கிழமை காலை 11 மணியளவில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் தலைமையில் வெளியிடப்பட்டது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளர் திரு.முகல் வாஸ்னிக் அவர்கள் வெளியிட முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர் இ.எம்.சுதர்சன நாச்சியப்பன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

பின்னர் தமாகவிலிருந்து முன்னாள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராணி அவர்களும் மற்றும் அவருடைய நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களும் தங்களை காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைத்துக் கொண்டார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகள், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

???????????????????????????????????? ????????????????????????????????????

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *