மருது சகோதரர்கள் நினைவுநாள் நிகழ்ச்சி

ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நாட்டின் பல பகுதிகளில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. 1857 இல் மீரட்டில் நடைபெற்றதை முதல் இந்திய சுதந்திரப் போர் என்று ஆங்கில வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்துள்ளனர். ஆனால் அதற்கு முன்பாக 1800 ஆம் ஆண்டுகளில் தமிழகத்தில் ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்து மருது சகோதரர்கள் போராடி வரலாற்றுப் பெருமை பெற்றுத் திகழ்கிறது.
மருதுபாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் தமிழ்நாட்டில் ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டத்தை 1785 முதல் 1801 வரை அனைத்து மக்களையும் திரட்டி போராடியுள்ளனர். இவர்களது களம் சிவகங்கைச் சீமையைச் சேர்ந்த காளையார்கோவில் ஆகும். மருது சகோதரர்களின் எழுச்சியை ஒடுக்க ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியினரால் 1801 அக்டோபர் 24 இல் திருப்பத்தூரில் இவ்விருவரும் தூக்கிலிட ஆணையிடப்பட்டது. ஆனால் காளையார்கோவிலில் இவர்கள் கட்டிய கோவிலுக்கு எதிராக எங்களை புதைத்து விடுங்கள் என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க அக்டோபர் 27 அன்று மருது சகோதரர்கள் புதைக்கப்பட்டு, அங்கு நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டது. அங்குதான் நினைவுநாள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு கூடி விடுதலைப் போராட்ட மாவீரர்களான மருது சகோதரர்களுக்கு வீர அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களுக்கு இன்று (27.10.2016) காலை 11 மணியளவில் மதுரை விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினரால் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மதுரை தெப்பக்குளத்தில் உள்ள மருது சகோதரர்களின் சிலைக்கு மாலை அணிவித்தார். தொடர்ந்து காளையார்கோவிலில் உள்ள நினைவகத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு, திருப்பத்தூரில் மருது சகோதரர்களின் சிலைக்கும் மாலை அணிவித்தார்.
மேற்கண்ட நிகழ்வுகளில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. கே.ஆர். ராமசாமி மற்றும் திரு. மாணிக்கம் தாகூர், காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவர்கள் சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் தலைவர்; சத்தியமூர்த்தி, இராமநாதபுரம்; மாவட்ட காங்கிரஸ் தலைவர் குட்லக் ராஜேந்திரன், மதுரை மாநகர் மாவட்ட காங்கிரஸ் பொறுப்பு தலைவர் திரு. கார்த்திகேயன், மதுரை வடக்கு மாவட்டத் தலைவர் திரு. கே.வி.வி. ரவிச்சந்திரன், மதுரை தெற்கு மாவட்டத் தலைவர் திரு. ஜெயராமன், விவசாய அணி தலைவர் திரு. சங்கரபாண்டி மற்றும் பலர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *