2வது மண்டல காங்கிரஸ் நிர்வாகிகள் மாநாடு

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு..வெ.கி..இளங்கோவன் அவர்கள் தலைமையில் 2வது மண்டல காங்கிரஸ் நிர்வாகிகள் மாநாடு (தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி)

நாள்: 17.10.2015 சனிக்கிழமை
காலை 9 மணி
இடம்: .வி.எம்.கமலவேல் மஹால், தூத்துக்குடி

வணக்கம். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் இரண்டாவது மண்டல காங்கிரஸ் நிர்வாகிகள் மாநாடு நாளை (17.10.2015) சனிக்கிழமை காலை 9 மணியளவில் தூத்துக்குடியில் அமைந்துள்ள கமலவேல் மஹாலில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. .வெ.கி.. இளங்கோவன் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் திரு. ஆர். தனுஷ்கோடி ஆதித்தன் மாநாட்டை கொடியேற்றி தொடக்கவுரை நிகழ்த்துகிறார். முன்னாள் சட்ட மன்றி உறுப்பினர் திரு. பி. வேல்துரை வரவேற்புரை ஆற்றுகிறார்.

இம்மாநாட்டில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் திரு. முகுல் வாஸ்னிக், செயலாளர்கள் டாக்டர் ஜி. சின்னா ரெட்டி, திரு. சு. திருநாவுக்கரசர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் டாக்டர் நாசே ஜெ. ராமச்சந்திரன், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. குமரி அனந்தன், முன்னாள் மத்திய அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான டாக்டர் .எம். சுதர்சன நாச்சியப்பன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செய்தித் தொடர்பாளர் திருமதி.குஷ்பூ சுந்தர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. கே. கோபிநாத், திருமதி. எஸ். விஜயதரணி, எம்.எல்.., திரு. ஜே.ஜி. பிரின்ஸ், எம்.எல்.., திரு. கு. செல்வப்பெருந்தகை, திரு. வி. இராஜசேகரன், திரு. .பி.சி.வி. சண்முகம், திரு. எச். வசந்தகுமார், திரு. நாசே ஆர். ராஜேஷ், திரு. ஜே. அஸ்லம் பாஷா, திரு. டி. சபீன், திரு. பி. பாபு ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் திரு. .டி.எஸ். அருள், திரு. பி. சிவசுப்பிரமணியன், திரு. ஆர். காமராஜ், திரு. எஸ்.வேலாயுதம், திரு. கே. ராம்நாத், திரு. . தமிழ்செல்வன், திரு. எஸ்.கே.டி.பி. காமராஜ், திரு. அசோக் சாலமன், திரு. வி. பாலையா ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். இம்மாநாட்டில் நடைபெறும் கருத்தரங்களில் . கோபண்ணா, என். நஞ்சப்பன், ஆலடி சங்கரய்யா, எஸ்.ஆர். பால்துரை, குமரி மகாதேவன், சிங்கை தருமன், எஸ். ராமச்சந்திரன், பி. ராஜூ, குணா பரமேஸ்வரி ஆகியோர் கருத்துரை வழங்குகிறார்கள். திரு. வி. பொன். பாண்டியன் நன்றியுரை வழங்குகிறார்.

மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர்களாக திரு.கே.தணிகாசலம், திரு.சி.டி.மெய்யப்பன், திரு. டி.செல்வம் ஆகியோர் செயல்படுகிறார்கள்.

12074643_445123042341493_3925942762767514368_n12108274_445123039008160_8285316883579857969_n

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *