புத்தாண்டு வாழ்த்துச் செய்தி – 31.12.2016

img_8892மதம், மொழி, இனம் ஆகிய வேறுபாடுகளின்றி நாட்டு மக்கள் அனைவரும் ஆங்கில புத்தாண்டு தினத்தினை மகிழ்வோடு கொண்டாடி வருகின்றனர்.

வரும் இப் புத்தாண்டில் தீவிரவாதம், வன்முறை, வறுமை, அறியாமை போன்ற தீமைகள் அகன்று, பண மதிப்பு நீக்க நடவடிக்கை எனும் சுனாமியில் சிக்கித் தத்தளிக்கும் மக்கள் விரைவில் மீண்டு கரை சேரவும், மத்திய அரசின் போலி வாக்குறுதிகளால் இனியும் ஏமாறாமலும், நற் சிந்தனையோடு வாழ்ந்திடவும், 2016ல் நிகழ்ந்த வேதனைகள், சோதனைகள், இழப்புகள் அகன்று இப்புத்தாண்டில் (2017) அனைவரின் வாழ்விலும் வளமும், நலமும், மகிழ்வும் பெருகிடவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை மகிழ்வுடன் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.


Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *