About Tamilnadu Congress Committee

Tamilnadu Congress Committee www.facebook.com/SanjaiGandhi

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக திரு. கே.எஸ். அழகிரி அவர்கள் நியமனம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக திரு. கே.எஸ். அழகிரி அவர்கள் நியமனம்

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களின் ஒப்புதலுடன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக முன்னாள் எம்பி திரு. கே.எஸ். அழகிரி அவர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார். இவருடன் திரு. H. வசந்தகுமார் அவர்கள், திரு. S. ஜெயக்குமார் அவர்கள், டாக்டர் விஷ்ணு பிரசாத் அவர்கள் மற்றும் திரு. மயூரா ஜெயக்குமார் அவர்கள் ஆகியோர் செயல் தலைவர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். 

பத்மவிபூஷண் விருது பெற்ற இசைஞானி திரு.இளையராஜா அவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் இன்று காலை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

25 ஆம் ஆண்டு தேசிய அளவிலான வலு தூக்கும் போட்டி மகாராஷ்டிரா மாநிலம் வாசிமில் நடைபெற்றது. இப்போட்டியில் 20க்கும் மேற்பட்ட மாநிலங்கள் கலந்து கொண்டன. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 55 மாணவ-மாணவிகள் பங்கேற்று 49 பதக்கங்களை வென்றனர். வரும் ஏப்ரல் மாதம் இந்தோனேஷியால் நடைபெறும் போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்க 29 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ-மாணவிகள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களை இன்று சத்தியமூர்த்தி பவனில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை

தமிழகத்தில் அரசு பேருந்து கட்டணம் 67 சதவீத உயர்வு ஒரே அறிவிப்பின் மூலம் செய்யப்பட்டிருக்கிறது. நகர, மாநகர பேருந்துகளின் குறைந்தபட்ச கட்டணம் 66 சதவீதமாகவும், அதிகபட்ச கட்டணம் 58 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல புறநகர் பேருந்து கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக மாநகர போக்குவரத்து கழகத்தில் குறைந்தபட்ச கட்டணம் ரூபாய் 3 ஆக இருந்தது, ரூபாய் 5 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.14 ஆக இருந்தது ரூ.23 ஆகவும் உயர்த்தப்பட்டிருக்கிறது. இத்தகைய பேருந்து கட்டண உயர்வு நடுத்தர, சாதாரண […]

முன்னாள் மத்திய அமைச்சரும், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவருமான திரு. வாழப்பாடி ராமமூர்த்தி அவர்களின் 78வது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று (18.1.2018) காலை 11 மணிக்கு ஆர்.ஏ. புரத்தில் அமைந்துள்ள ராஜீவ்காந்தி – வாழப்பாடியார் அறக்கட்டளை அலுவலக வளாகத்தில் உள்ள திருஉருவச்சிலைக்கும், தொடர்ந்து 11.30 மணிக்கு சத்தியமூர்த்தி பவனில் அவரது திருவுருவப் படத்திற்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நியூயார்க்கில் ராகுல் காந்தி உரை | 20.09.2017

நியூயார்க்கில் ராகுல் காந்தி உரை | 20.09.2017

காங்கிரஸ் துணைத் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களின் உரை. இடம் : டைம் ஸ்கொயர், நியூயார்க் நாள் : 20.09.2017 மொழி பெயர்ப்பு : சஞ்சய் காந்தி , கோவை www.facebook.com/SanjaiGandhi , www.twitter.com/SanjaiGandhi அனைவருக்கும் வணக்கம். சாம் பிட்ரோடா பல வருடங்களுக்கு முன்பு இந்தியாவிற்கு வந்து, பிரதமர் இந்திரா காந்தி தன்னுடைய ப்ரசண்டேஷனை ( Presentation ) கவனித்த நிகழ்வை சொன்னார். சாம், அது 1982 என்று நினைக்கிறேன். ஆம், 1982 தான். அப்போது […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை

  கடந்த மூன்றாண்டுகளாக மத்தியில் நடைபெற்று வரும் பா.ஜ.க. ஆட்சி சிறுபான்மை மக்களுக்கு எதிராக அச்சுறுத்தும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. சில நாட்களாக நமது அண்டை நாடான மியான்மரில் ரோஹிங்கியா மக்களுக்கு எதிராக ராணுவத்தினரும், சில தீவிரவாத சக்திகளும் இணைந்து குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என்று கொஞ்சம் கூட கருணை காட்டாமல் மிக கொடூரமான தாக்குதல்களை அரங்கேற்றி வருகிறார்கள். ஆயிரக்கணக்கான ரோஹிங்கியா அகதிகள் வங்க தேசத்திற்கு அடைக்கலம் தேடி சென்றிருக்கிறார்கள். இந்தியாவில் மட்டும் ஏறக்குறைய நாற்பதாயிரம் […]

பொருளாதார வளர்ச்சியை தவறாக கையாண்ட மோடி – Mismanagement Economic

‘அருமையான நாட்கள், நல்ல நிர்வாகம், வணிகவளர்ச்சி முறைகளை எளிதாக்குதல், GDPல் 10% வளர்ச்சி, ஐந்து ஆண்டுகளில் 10 கோடிப்பேருக்கு வேலை, டிஜிட்டல் இந்தியா, விவசாயிகள் விளைபெருட்களுக்காக செலவிடப்பட்ட தொகையை விட 50% அதிகமாக வைத்து லாபகரமாக விலையை நிர்ணயித்தல், பணவீக்கத்தை குறைத்தல், புதியதோர் பொருளாதார நோக்கு’ என்றெல்லாம் வாக்குறுதிகளை அள்ளி வீசி அதன் பயனாக 2014 ஆட்சியில் கைப்பற்றினார் நரேந்திர மோடி. Dr. மன்மோகன் சிங் தலைமையிலான முந்தைய காங்கிரஸ் அரசு வலுவானதோர் பொருளாதார அடிப்படையை அமைத்திருக்கிறது. […]

‘நேஷனல் ஹெரால்டு வழக்கு’ இதுபற்றி அடிக்கடி எழுப்பப்படும் கேள்விகளும், அவைகளுக்குரிய பதில்களும்.

1. கேள்வி: ‘யங் இந்தியா’ அமைப்பிலிருந்து திருமதி சோனியா காந்தியோ அல்லது ராகுல்காந்தியோ ஏதாவது ஆதாயம் பெற்று வந்தனரா? பதில்: இல்லவே இல்லை! லாபநோக்கில்லாத, 25வது பிரிவின்படி துவக்கப்பட்ட யங் இந்தியா நிறுவனத்தின் இயக்குனர்களோ, பங்குதாரர்களோ, எந்த விதமான நிதி ஆதாயங்களையும் பெற்றிடக்கூடாது என்று சட்டப்படி தடை இருக்கிறது. எனவே சோனியா காந்தியும், ராகுல்காந்தியும் இதனால் எந்த விதமான நிதி ஆதாயங்களை பெற்றிடும் வாய்ப்புகளே இல்லை. 2. கேள்வி: ஏதாவது சொத்துக்கள், ‘அசோசியேடட் ஜர்னல் லிமிடெட்’ (அசோசியேடட் […]