இன்று 11.12.2015 மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 134வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரை ரோட்டில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள்.

இன்று 11.12.2015 மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 134வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரை ரோட்டில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள்.
டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் நினைவு நாளான இன்று (6.12.2015) சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் தலைமையில் திரு.சு.திருநாவுக்கரசர், திருமதி.குஷ்பு சுந்தர், திரு.கு.செல்வ பெருந்தகை, திரு.ராயபுரம் மனோ, திரு.என்.ரங்கபாஷ்யம், ஆகியோர் அவரது திருவுருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை மாநில மாவட்ட செயற்குழு கூட்டம் மற்றும் இணையதளம் வெளியீட்டு விழா இன்று (28.11.2015) சனிக்கிழமை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் இன்று நடந்தது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் கலந்து கொண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை இணையதளத்தை தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தென் சென்னை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டிருக்கும் விருகம்பாக்கம் திரு.ஏ.வி.எம்.ஷெரீப், தி.நகர் பகுதி திரு.விவேகானந்தன், சைதாப்பேட்டை பகுதி திரு.செஞ்சி ராஜேந்திரன், வேளச்சேரி பகுதி திரு.டி.செல்வம், ஆயிரம் விளக்கு பகுதி திரு.டன்லப் ராமசுந்தரம் ஆகியோர் இன்று 26.11.2015 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களிடம் வாழ்த்துப்பெற்றார்கள்.
தமிழ் மாநில காங்கிரஸ் மீனவர் அணி மாநில செயலாராக இருந்த திரு.ஹென்றி அவர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் முன்னிலையில் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அப்போது டி. சபீன் தலைவர் தமிழ்நாடு மீனவர் அணி, கடல் தமிழ்வாணன் தலைவர் சென்னை மாவட்டம் மீனவர் அணி, கே.பி.கோசல்ராம் தலைவர் தலைவர் காஞ்சி மாவட்ட மீனவர் அணி மற்றும் பலர் உடனிருந்தனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் வர்த்தக பிரிவின் தலைவர் திரு.திரவியம் அவர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களிடம் வாழ்த்துப்பெற்றார்.
பாரத முன்னாள் பிரதமர் அன்னை இந்திராகாந்தியின் 98வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று சென்னை யானைக்கவனி, வால்டாக்ஸ் சாலையில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் அதன்பின் சென்னை சத்யமூர்த்தி பவனில் அலங்கரிக்கப்பட்ட அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். PLEASE CLICK HERE FOR PRESS MEET VIDEO