



மதுரை மாவட்டம், சோழவந்தான் தொகுதி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர்கள் த.மா.கா.விலிருந்து விலகி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் முன்னிலையில் காங்கிரஸ் பேரியக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
மதுரை மாவட்டம், சோழவந்தான் தொகுதி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை சார்ந்த தேர்தல் பணிக்குழு செயலாளர் திரு. ஏ. சந்திரசேகரன், Ex.MLA தலைமையில் மாநில விவசாய அணி செயலாளர் திரு. முள்ளை மு. செல்வம், மாவட்ட விவசாய அணி தலைவர் திரு. ஜி. ராமகிருஷ்ணன், மாவட்ட ஐ.என்.டி.யு.சி. தலைவர் திரு. எம்.எஸ். பழனிச்சாமி மற்றும் வட்டார, நகர நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் த.மா.கா.விலிருந்து விலகி இன்று சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. […]

தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் திரு. க.அன்பழகன் மற்றும் முன்னாள் அமைச்சமான திரு.ஆற்காடு வீரசாமி அவர்களையும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் திரு. க.அன்பழகன் அவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் இன்று (6.10.2016) வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு கீழ்பாக்கம், ஆஸ்ப்பிரான் தோட்டம் 2 வது தெரு, எண்.58 இல் உள்ள அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து பொன்னாடை அணிவித்து அவரிடம் வாழ்த்து பெற்றார். மாலை 7 மணியளவில் தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினரும் முன்னாள் அமைச்சமான திரு.ஆற்காடு வீரசாமி அவர்களையும் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.


தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 05.10.2016
விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் தலைவர் திரு.பி.கே.தெய்வசிகாமணி மற்றும் நிர்வாகிகள் இன்று நண்பகல் சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களை சந்தித்து காவிரி பிரச்சனையில் தமிழகத்தின் நலன்காக்க அனைத்து கட்சிகளும், இயக்கங்களும் ஒன்றுகூடி அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நாளை (6.10.2016) வியாழக்கிழமை சென்னை எழும்பூரில் காலை 11 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். அவர்களின் அழைப்பினை ஏற்று இக்கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக முன்னாள் நாடாளுமன்ற […]

தஞ்சை மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் அக்கட்சியிலிருந்து விலகி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.திருநாவுக்கரசர் அவர்கள் முன்னிலையில் காங்கிரஸ் பேரியக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
தஞ்சை மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாவட்ட இலக்கிய அணி தலைவர் திரு.வி.கனகராஜ், மாவட்ட பிரச்சாரக்குழு தலைவர் திரு. பால குலோத்துங்கன், மாவட்ட செயலாளர் திரு.ஜி.லெட்சுமி நாராயணன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் திரு.ப.ஆண்டவர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட பொதுச்செயலாளர் திருமதி. இந்திரா முத்துவிஜயன் மற்றும் திரு.முத்து விஜயன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தமாகா நிர்வாகிகள் தொண்டர்கள் 01.10.2016 அக்கட்சியிலிருந்து விலகி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.திருநாவுக்கரசர் அவர்கள் முன்னிலையில் காங்கிரஸ் பேரியக்கத்தில் தங்களை இணைத்துக் […]

01.10.2016 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமையகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் வழக்கறிஞர் அணி மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் தற்போது நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது. அந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் கலந்துக்கொண்டு பேருரை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்.
01.10.2016 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமையகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் வழக்கறிஞர் அணி மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் தற்போது நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது. அந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் கலந்துக்கொண்டு பேருரை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்.

01.10.2016 நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமையகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் அலங்கரிக்கப்பட்ட அவரது திருவுருவப்படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமையகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் அலங்கரிக்கப்பட்ட அவரது திருவுருவப்படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் திரு. குமரி அனந்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு. சா. பீட்டர் அல்போன்ஸ், திரு. ஜே.எம். ஆரூண், டாக்டர் வள்ளல்பெருமான், திரு. பெ. விஸ்வநாதன், மாநில நிர்வாகிகள் திரு. கே. சிரஞ்சீவி, […]
