ஊழல் குற்றச்சாட்டு – 7 : லேப்&டாப் ஊழல்

மாணவர்களுக்கு இலவச லேப்&டாப் வழங்கும் திட்டத்தை அ.தி.மு.க. அரசு செயல்படுத்தி  வருகிறது. லேப்&டாப் ஒன்றுக்கு ரூ.1,500   அதிகம் கொடுத்து வாங்கிக்கொண்டு வருகிறார்கள் என்று ஜிளிமி  கூறுகிறது. மாணவர்களுக்கு வழங்கக் கூடிய லேப்&டாப்பில்  அ.தி.மு.க.  அரசு ஊழல் செய்து வருகிறது. 3900 கோடி  ரூபாய் மடிக்கணினி ஊழல் அ.தி.மு.க.  ஆட்சியில் ரூ.3,900   கோடியில் கொள்முதல்  செய்யப்பட்ட மடிக்கணினிகள் விநியோகத்தில் பயனாளிகள்  பற்றிய விளக்கப்  பட்டியல் எதுவுமே இல்லாத நிலையில் அரசு நிர்வாகம் நடைபெற்றிருக்கிறது.  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் ‘தி  இந்து’   […]

ஊழல் குற்றச்சாட்டு – 8 : நெடுஞ்சாலைத்துறை ஊழல்

தமிழக நெடுஞ்சாலைத் துறையால் மொத்தம் 57,043 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில் முதல்  கட்டமாக, பொள்ளாச்சி கோட்டத்திற்கு உட்பட்ட  377 கிலோ மீட்டர் சாலையை ஐந்தாண்டுகளுக்குப் பராமரிக்க 275 கோடி  ரூபாய் ஒதுக்கப்பட்டு, அருப்புக்கோட்டையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் பணி ஒப்படைக்கப்பட்டுவிட்டது. இந்தப் பராமரிப்புப் பணிகளை இதுவரை சாலைப் பணியாளர்கள்தான்  செய்து வந்தார்கள். இவர்களே இந்தப் பணியைத் தொடர்ந்து செய்தால், ஏறத்தாழ 70 கோடி ரூபாய்தான் செலவாகும்.  இதனால் அரசுக்கு 200 கோடி  […]

ஊழல் குற்றச்சாட்டு – 9 : பாதாள சாக்கடை ஊழல்

நகரங்களில் மக்கள்தொகை நாளுக்கு நாள் அதிகரித்து  வருகிற சூழலில் அதை எதிர்கொள்ள 50க்கும் மேற்பட்ட நகரங்களில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், ஆட்சியாளர்கள்,  அந்தத் திட்டத்தை முறையாகச் செயல்பட விடுவார்களா? ஊழல் செய்தே பழக்கப்பட்ட அதிகாரவர்க்க அமைச்சர்களின் உதவியோடு கொள்ளையடிக்கத் திட்டம் தீட்டுவது தமிழகத்தில் நடந்துகொண்டிருக்கிற ஒன்றுதான். உதாரணமாக ஈரோடு மாநகராட்சியை  எடுத்துக்கொண்டால் 2008இல் பாதாள சாக்கடை திட்டம் கொண்டுவரப்பட்டது. ஈரோடு முழுவதும் தெருத்தெருவாக 500 சதுர கிலோ மீட்டர் சுற்றளவில் அமையும் இந்த   பாதாள […]

ஊழல் குற்றச்சாட்டு – 10 : ஊழலால் ரத்து செய்யப்பட்ட உடன்குடி மின் திட்டம்

உடன்குடி மின் உற்பத்தித் திட்டத்தைத் தொடங்கப் போவதாக அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா 24.02.2012  அன்று  அறிவிப்பு வெளியிட்டதோடு, அதற்காக டெண்டர் விடும் பணிகள் 2013ஆம் ஆண்டு ஏப்ரலில் தொடங்கப்பட்டு அக்டோபர்  மாதத்தில் தொழில் நுட்பப் புள்ளி ஒப்பந்தம் திறக்கப்பட்டு &    அதற்குப்பின் ஆறுமாத காலத்திற்குள் திறக்கப்படவேண்டிய விலைப்புள்ளி அவ்வாறு திறக்கப்படாமல், காலம்  தாழ்ந்து  2014ஆம் ஆண்டு நவம்பரில் திறக்கப்பட்டது. ஆனால், நான்கு மாதங்கள் கழித்து அந்த டெண்டரையே ரத்துசெய்து மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு வெளியிட்டார். […]

ஊழல் குற்றச்சாட்டு – 11 : டாஸ்மாக் ஊழல்

தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி  எப்படியிருந்தாலும் மதுபான விற்பனையும், வரி  வருவாயும் ஆண்டுக்காண்டு கூடிக்கொண்டே வருகிறது. தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கும் இல்லை; பூரண மது விற்பனையும் இல்லை. கள், சாராயம் போன்றவற்றுக்கு  அனுமதி  மறுத்துவிட்டு,  இந்தியாவில்தயாராகும் அன்னிய  மதுபான வகைகளான பீர், விஸ்கி, பிராந்தி, ரம், ஜின் ஆகியவற்றை மட்டுமே வரம்பின்றி அனுமதிக்கும்  கொள்கை கடைப்பிடிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் தயாராகும் அன்னிய ரக  மதுபானங்களை விற்பதற்கென்றே அரசு உருவாக்கிய சந்தைப்படுத்தும் விநியோக அமைப்புதான் ‘டாஸ்மாக்’.  ரூ.15 கோடி  முதலீட்டில் தொடங்கப்பட்ட […]

ஊழல் குற்றச்சாட்டு – 12 : நெல் மூட்டைகளில் கலப்பட ஊழல்

ஆவின் பாலில்  தண்ணீர் கலந்து மோசடி செய்ததில்  சாதனை படைத்த அ.தி.மு.க. ஆட்சியில், நெல்லில் மண்ணைக் கலந்து விற்பனை செய்யும் மோசடி சமீபத்தில் அரங்கேற்றியுள்ளது. சிவகங்கை  மாவட்டத்தில் தனியார் செங்கல்  சேம்பரிலிருந்து 650 கலப்பட நெல் மூட்டைகளையும், லாரியையும் உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இதுதொடர்பாக  அ.தி.மு.க.வினர் மூன்றுபேர்  கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஈடுபட்ட அ.தி.மு.க. வியாபாரிகள் இரண்டுபேரை  போலீஸார் தேடி வருகின்றனர். இந்த மோசடியில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. வியாபாரிகள் […]

ஊழல் குற்றச்சாட்டு – 13 : தொழில்துறை ஊழல்

அ.தி.மு.க.  ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறபோது, தொழில்துறை மட்டும் விலக்காக இருக்கமுடியாது? இந்தியாவிலேயே சேலம் மாவட்டத்தில்தான் விலைமதிப்புமிக்க ‘மேக்னசைட்’ என்கிற கனிமவளம்  நிரம்பக் கிடைக்கிறது. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் மேக்னசைட் கனிமம் தமிழகத்தில்தான் மிக  அதிகமாகும். சிமெண்ட் தொழிற்சாலைகள், இரும்புத் தொழிற்சாலைகள் மெக்னீசியம் கார்பனெட் பவுடர் கம்பெனிகள்,  சுடு கற்கள் தயாரிப்பு நிறுவனங்கள்  ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் கனிமப் பொருள்தான் ‘மேக்னசைட்’.இந்தத் தொழிலில் வருடத்திற்கு  ரூ.5,000   கோடிகளுக்கும்மேல் புழங்கும். ‘மேக்னசைட்’ பிசினசை நடத்தி வருபவர்கள் தொழில்துறையின்  அனுமதி பெற்றும் பெறாமலும் செய்து […]

ஊழல் குற்றச்சாட்டு – 14 : மின்வாரிய ஊழல்

‘எங்கும் ஊழல்; எதிலும்  ஊழல்; எதற்கும் ஊழல்; எல்லாமே ஊழல்’  என்று சொல்லக்கூடிய துறைதான் தமிழ்நாடு மின்சார வாரியம். தமிழகத்தின் பெருநகரங்களில் வீடுகளிலுள்ள பழைய மீட்டர்களைக் கழட்டிவிட்டு, புதிய மீட்டர்களைப் பொருத்துவது என 2011இல் ஜெயலலிதா முடிவெடுத்தார். இந்த   முடிவினை நிறைவேற்ற மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பம்பரம்போல் செயல்பட்டார். பழைய மீட்டர்களுக்குப்  பதிலாகப்  பல்வேறு நவீன தொழில் நுட்பம் கொண்ட ‘ஸ்டேட்டிக்’ மின் மீட்டர்களைப் பொருத்தவேண்டுமென மத்திய மின்சார ஆணையம் 2010இல் ஆணையிட்டது. இதனைப் புறந்தள்ளிவிட்டு, […]

ஊழல் குற்றச்சாட்டு – 15 : செய்தித் துறையில் ஊழல்

தமிழ்நாட்டின் செய்தித்துறை  அமைச்சரான ராஜேந்திர  பாலாஜி, இதுவரை  ஒருமுறைகூட பத்திரிகையாளர்களைச்  சந்திக்கவில்லை. பத்திரிகையாளர்களோடு நெருக்கமாகத் தொடர்பு வைத்துக்கொண்டு அரசு திட்டங்களை விளம்பரப்படுத்த வேண்டிய இவர், அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பல காரணங்கள்  கூறப்பட்டு வருகின்றன. ‘மடியில் கனமிருப்பதால் பத்திரிகையாளர்களைச்  சந்திக்க அஞ்சுகிறார்’ என்று கோட்டையில் உள்ள ஊடகவியலாளர்கள் முனுமுனுத்து வருகிறார்கள். சிறந்த  திரைப்படங்கள், சிறந்த  நடிகர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் எனத்  தமிழ்த் திரைப்படங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசின் சார்பில்  விருதுகளைச் செய்தித்துறைதான் வழங்குகிறது. ஆனால், […]

ஊழல் குற்றச்சாட்டு – 16 : போக்குவரத்துத்துறை ஊழல்

தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத் துறைக்குப்  போட்டியாகச் செயல்பட்டு நஷ்டத்தை உண்டாக்குவதற்காகவே படுஜோராகச் செயல்படுவது,  ‘ஆம்னி பஸ்’ போக்குவரத்து. பயனாளிகளுக்குப் பல்வேறு தொல்லைகளைத்  தருகிற நிறுவனமாக அரசுப் போக்குவரத்துத் துறை மாறிவிட்டதால், வசதிவாய்ப்புள்ள மக்கள் ஆம்னி பஸ்களை நாடிச் செல்கின்றனர். தமிழக ஆட்சியாளர்களும் ஆம்னி  பஸ் துறையைப் பணம் கொழிக்கும் துறையாகப் பயன்படுத்தி வருகிறார்கள். தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 1000 ஆம்னி பஸ்கள் ஓடுகின்றன. அனைத்தும் ஒப்பந்த ஊர்திகளாகவே ஓடுகின்றன. எதற்கும் நிரந்தர பர்மிட் கிடையாது. அனைத்து ஆம்னி […]