ஊழல் குற்றச்சாட்டு – 17 : நூலகத்துறையில் ஊழல்

இந்தியாவிலேயே கல்வித்துறையில்  தமிழகம் முதன்மை மாநிலமாக இருந்த அதேநேரத்தில்,  நூலகத்துறையிலும்  அத்தகைய பெருமையைப் பெற்றிருந்தது. தமிழகத்தின் நூலகத்துறை இந்தியாவிற்கே முன்மாதிரியாகவும் வழிகாட்டியாகவும் இருந்தது. அத்தகைய நூலகத்துறை கடந்த சில ஆண்டுகளாகச் சீரழிந்து வருவது மிகுந்த வேதனையைத்  தருகிறது. நூல்களைப் பணம் கொடுத்து வாங்கிப் படிக்க வசதியில்லாத  கிராமப்புற ஏழை  மக்கள், புதிய  நூல்களை வாசிக்கச் செல்லும் ஒரே இடம், உள்ளூர் கிளை நூலகங்கள்தான்.  தமிழ்நாட்டில் சுமார் 4,000 கிளை நூலகங்கள் பொது நூலகத் துறையின்கீழ் பெயரளவில் செயல்பட்டுக் […]

ஊழல் குற்றச்சாட்டு – 18 : மருத்துவத்துறை ஊழல்

அரசு மருத்துவமனைகளில்  பெரியோர் முதல்  பச்சிளம் குழந்தைகள் வரை உரிய சிகிச்சை  இல்லாமல் உயிரிழப்பு செய்திகள் நாள்தோறும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தருமபுரியில் 13 பச்சிளம் குழந்தைகளும்,  விழுப்புரத்தில் 8 பச்சிளம் குழந்தைகளும் என நூற்றுக்கணக்கான  பச்சிளம் குழந்தைகள் மாவட்ட மருத்துவமனைகளில் உரிய சிகிச்சை  இல்லாமல் இறந்துவிடுகிற கொடுமை  நடந்து வருகிறது. மருத்துவமனையில் சிகிச்சை தருகிற மருத்துவர்கள்  தரமான கல்வியை பெற்றவர்களாக இருக்கவேண்டும். ஆனால், அந்த  வாய்ப்பு தமிழகத்திலே மிக அரிதாகவே  இருந்து வருகிறது.  தனியார் மருத்துவக் கல்லூரி […]

ஊழல் குற்றச்சாட்டு – 19 : பத்திரப் பதிவுத் துறை ஊழல்

தமிழ்நாடு அரசின் பத்திரப் பதிவுத் துறை என்பது  ஊழல் துறையாக நீண்டகாலமாக இருந்து வருகிறது. பத்திரப்பதிவு அலுவலகங்களில் அனைத்துமே ஊழலை அடிப்படையாக வைத்துத்தான் காரியங்கள் நடைபெற்று வருகின்றன. பத்திரப்பதிவுத் துறையில் பதிவாளர் பதவி என்பது ஏலம்விடப்பட்டு அதன்மூலமாகத்தான் வழங்கப்பட்டு  வருகிறது. ஊழலில் ஊறிப்போன  ஒரு துறையாகப் பத்திரப் பதிவுத் துறை  செயல்பட்டு வருகிறது.பத்திரப் பதிவுத் துறையின் ஊழலை ஊடகங்களோ, அரசியல்  கட்சிகளோ அம்பலப்படுத்துவதைவிட இந்தியக் கணக்கு மற்றும் தணிக்கைத் துறையே ஆதாரத்தோடு வெளியிட்டுள்ளது. 2012-&13ஆம் ஆண்டுக்கான இந்தியக் கணக்கு […]

ஊழல் குற்றச்சாட்டு – 20 : ரியல் எஸ்டேட் துறை ஊழல்

வீட்டுமனைப் பிரிவுகள் வீட்டுமனைப் பிரிவு சார்ந்த   உள்ளூர் திட்டக் குழுமத்திற்கு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம்  ஞிஜிசிறிக்குத்  தரவேண்டும். சிவிஞிகி அலுவலகத்திற்கு ஏக்கருக்கு  ஒரு லட்சம் தரவேண்டும். இதைத் தவிர ஏக்கருக்கு ரூ.5 லட்சம் தரவேண்டும். ஒப்புதல் கிடைத்தவுடன் சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து / நகராட்சித் தலைவருக்கு ஏக்கருக்கு  ஒரு லட்சம் கொடுத்தால்தான் அங்கீகாரம் கிடைக்கும்.  இதில்தான் ஆளுங்கட்சியினர் கொழுத்து வருகிறார்கள். நஞ்சை நிலத்தை வீட்டுமனை பிரிவாக மாற்ற லஞ்சம் நஞ்சை நிலத்தை வீட்டுமனைப் பிரிவாக   மாற்ற  ஒன்பது துறைகளிடம் […]

ஊழல் குற்றச்சாட்டு – 21 : வணிக வரித்துறை ஊழல்

தமிழக அரசு துறைகளிலேயே அதிக அளவில் வரி  வருவாயைத் தரக்கூடிய  துறை இதுதான். அதேபோல, இதில் மெகா  ஊழல்கள் நடைபெறுவதற்கும்  நிறைய வாய்ப்புகள் உள்ளன. வணிக வரித்துறை அமைச்சரை  நியமிக்கும்போதே சர்வவல்லமை படைத்தவராக  இருக்கிறாரா எனப்  பார்த்துதான் முதலமைச்சர் தேர்வுசெய்து நியமிப்பார். ஏனெனில், வணிக  வரித்துறை ஆட்சியாளர்களுக்கு  ஒரு தங்கச்சுரங்கம். வணிக வரித்துறையில்  அனைத்து நிலைகளிலும் ஊழல் செய்வதற்கு வாய்ப்புகள் கணக்கில்  அடங்காதவை. அங்கு நடப்பது எல்லாமே ஊழல்தான்.  லஞ்சம் கொடுத்தால்தான்  எதுவுமே நடக்கும். அந்த  வகையில் […]

ஊழல் குற்றச்சாட்டு – 22 : கிரானைட்- ஊழல்

பூமிக்குக் கீழேயுள்ள கனிம வளங்கள் அரசுக்குச் (சமூகத்துக்குச்) சொந்தம் என்பது பொது நியதி. இந்த   விதிக்கு உட்படாமல், பூமிக்கு அடியில் கிரானைட், லைம்ஸ்டோன் போன்றவை இருக்குமானால், அவை நிலத்தின் உரிமையாளருக்குச் சொந்தம் என்று சட்டம்  அங்கீகரிப்பதால், ஒரு  நிலத்தை வாங்கி, தனக்குச் சொந்தமான அந்த  நிலத்தில் அரசு அனுமதிக்கின்ற அளவுக்கான ஆழத்துக்குக் குவாரி வெட்டி கிரானைட்டுகளை  எடுத்து விற்பது சட்டபூர்வ  நடவடிக்கையாக அங்கீகரிக்கப்படுகிறது. இதன்படி, பாமர   விவசாயிகளுடைய நிலங்களை ஏமாற்றி வாங்குவது, தரமான கிரானைட் உள்ள நிலத்தை […]

ஊழல் குற்றச்சாட்டு – 23 : மீனவர்களுக்கு வழங்கப்படும் டீசலில் ஊழல்

மீனவர்களுக்கு மானியத்தில் வழங்கப்படும் டீசலில், ஈவுஇறக்கமில்லாமல் ஊழல்  செய்வதில் அ.தி.மு.க.வினர்  வல்லவர்களாக உள்ளனர். மீனவர்களுக்கு மானியத்தில் வழங்கப்படும் டீசலில் 100 கோடி  வரை ஊழல்  நடைபெற்றுள்ளது. இதில் அமைச்சரின் உதவியாளர் ஒருவருக்கும் அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளது. இதை சி.பி.சி.ஐ.டி.   போலிஸார் விசாரிக்கவேண்டுமென மீனவர்  சங்கங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தமிழக மீன்வளத்துறையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன. விசைப்படகு, பாரம்பரிய நாட்டுப்படகு, கண்ணாடி  நார்படகு, கண்ணாடி  நார் கட்டுமரம், இயந்திரம் பொருத்தப்பட்ட மரக்கட்டுமரம்,  வல்லம் ஆகியவற்றுக்கு விற்பனை வரி  […]

ஊழல் குற்றச்சாட்டு – 24 : இ.எஸ்.ஐ. மருத்துவமனை ஊழல்

அரசு தொழிலாளர் காப்பீட்டுக் கழக மருத்துவமனை தொடங்கப்பட்டு 63 ஆண்டுகள் ஆகிறது. தொழிலாளர்களுக்கு  மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு மருத்துவ  வசதிகள் செய்துதருவதற்காகவே உருவாக்கப்பட்டதுதான்  இ.எஸ்.ஐ. மருத்துவமனைகள். சமீபத்தில் மத்திய பா.ஜ.க. அரசு, இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரிகளை நடத்துவதிலிருந்து விலகிக்கொள்ள வேண்டும் என்ற கொள்கை முடிவை எடுத்தது. இதை எதிர்த்து இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியதோடு, இதைத் தமிழக அரசு ஏற்று  நடத்தவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். இந்த   கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாக அறிவித்த தமிழக […]

ஊழல் குற்றச்சாட்டு – 25 : பொது விநியோகத் துறையில் ஊழல்

தமிழகத்தில் மொத்தம் ஒரு கோடியே 61 லட்சம் குடும்ப அட்டைகள் புழக்கத்தில் இருக்கின்றன. 33,973 ரேஷன் கடைகள் மூலமாக உணவுப்பொருள்கள் விநியோகிக்கப்படுகின்றன.  இந்தக் கடைகளுக்குப் பொது விநியோகத் துறை மூலமாகக் குடும்ப அட்டைதாரர்களுக்கு  இலவசமாக அரிசி வழங்கப்படுகின்றன. நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படவேண்டிய அரிசி  கடத்தப்படுவது குறித்து அதிர்ச்சியூட்டும் செய்திகள்  அடிக்கடி வெளிவருகின்றன. பொது விநியோகத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் அரிசியில் 15 சதவிகிதத்துக்கும் கூடுதலாகக் கடத்தப்படுகிறது என்கிற செய்தி மிகுந்த அதிர்ச்சியைத் தருவதாகும். இதை தேசிய […]

மோடி அரசின் முதல் ஆண்டு வெளியுறவுத்துறை அணுகுமுறை, சறுக்கல்கள் மற்றும் திருப்பங்கள்

நிதிச்சுமை மற்றும் பாதுகாப்பை கருத்தில்கொண்டு பொதுவாக எல்லா நாடுகளின் பிரதமரோ அல்லது ஜனாதிபதியோ அனைத்து நாடுகளுக்கும் அரசு முறை பயணம் மேற்கொள்வது இல்லை. ஆனால் முக்கியமான பயணங்களை தவிர்ப்பதுமில்லை. தங்கள் வெளியுறவுத்துறை அமைச்சரகத்தை பலமிக்கதாக வைத்துக் கொள்ள முயற்சி செய்வார்கள். அனுபவம் உள்ள மற்றும் வெளியுறவுக் கொள்கையைப் பற்றி விபரம் அறிந்தவரை வெளியுறவுத்துறை அமைச்சராக நியமிப்பார்கள். கண்டிப்பாக எல்லா நாடுகளுக்கும் பயணம் கண்டிப்பாக மேற்கொள்வேன் என்று பிரதமர் தீர்மானித்தால் தன் நாட்டின் கருவுலத்தைச் சுரண்டித்தான் ஆக வேண்டும். […]