அஞ்சல் தலையில் அரசியல் நடத்தும் பி.ஜே.பி. அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்.

அஞ்சல் தலையில் அரசியல் நடத்தும் பி.ஜே.பி. அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க:- சென்னை-அண்ணாசாலை ஈரோடு திண்டுக்கல் கோயம்புத்தூர் விழுப்புரம் திருவண்ணாமலை திருவள்ளூர் கன்னியாகுமரி அரியலூர் காஞ்சிபுரம் தூத்துக்குடி திருவாரூர் வேலூர் திருப்பூர் நாகப்பட்டிணம் மற்றும் சில மாவட்டங்களில், தமிழ்நாடு முழுவதும் அஞ்சல் தலையில் அரசியல் நடத்தும் பி.ஜே.பி. அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

இன்று (17.9.2015) வியாழக்கிழமை தந்தை பெரியார் அவர்களின் 137வது பிறந்த நாள் விழா

இன்று (17.9.2015) வியாழக்கிழமை தந்தை பெரியார் அவர்களின் 137வது பிறந்த நாள் விழா

ஈரோடு-கோபியில் உள்ள தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்களின் திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள்.

அன்புத் தலைவர் ராகுல்காந்தி திருச்சிக்கு வருகிறார்

அன்புத் தலைவர் ராகுல்காந்தி திருச்சிக்கு வருகிறார்

பேரன்புமிக்க தேசிய நெஞ்சங்களே.. நரேந்திர மோடியின் நில அபகரிப்பு சட்டத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயிகளை சந்தித்து தன் ஆதரவை தெரிவிக்கவும், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும் , ஜெயலலிதா அரசின் ஊழல் முகத்தை கிழித்தெறியவும் நம் அன்புத் தலைவர் ராகுல் காந்தி அவர்கள்  ஜூலை 23ஆம் தேதி அன்று திருச்சி மாநகரத்திற்கு வருகிறார், திருச்சியில் நடைபெற இருக்கும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு சிறப்பிக்க தேசிய நெஞ்சங்கள் அனைவரும் அணி திரண்டு வர வேண்டும் என தன்மானத் […]

ராகுல் காந்தி பிறந்தநாள் விழாவில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் பங்கேற்றார்

ராகுல் காந்தி பிறந்தநாள் விழாவில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் பங்கேற்றார்

இன்று (19.06.2015) சத்தியமூர்த்தி பவனுக்கு புதிய தமிழகக் கட்சியை நிறுவனர் டாக்டர் கிருஷண்சாமி வருகை தந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவருடன், ராகுல் காந்தியின் பிறந்த நாளான இன்று மரம் நடுவிழாவில் கலந்து கொண்டார்.

புரட்சி பாரதம் கட்சியினர் காங்கிரசில் இணைந்தனர்

புரட்சி பாரதம் கட்சியினர் காங்கிரசில் இணைந்தனர்

           தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன், தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி.துறைத் தலைவர் திரு.கு.செல்வப் பெருந்தகை ஆகியோர் முன்னிலையில் புரட்சி பாரதம் கட்சியை சேர்ந்த ஆர்.டார்ஜன், எஸ்.பி.மணி ஆகியோர் தலைமையில் ஏராளமானோர் இன்று (8.5.2015) காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

தலைவர் இளங்கோவனுடன் தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சந்திப்பு

தலைவர் இளங்கோவனுடன் தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சந்திப்பு

           தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் கே.வி.ராஜ்குமார் மற்றும் நிர்வாகிகள் எஸ்.வெங்கடேசன், எஸ்.பி.சுப்பிரமணியம், வழக்கறிஞர் பாண்டியன், டி.ராமமூர்த்தி, தனபால், வி.வெங்கடபதி, ப.சென்னியப்பன், தர்மலிங்கம், நல்லசிவம், பொன்.செல்வகுமார், காந்தி, கே.நடராஜன், ரவிகுமார் ஆகியோர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களை இன்று (07.05.2015) பகல் 11 மணியளவில் சத்தியமூர்த்தி பவனில் சந்தித்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர். அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இலக்கிய இமயம் ஜெயகாந்தன் நினைவு அஞ்சலி கூட்டம் – அழைப்பிதழ்

இலக்கிய இமயம் ஜெயகாந்தன் நினைவு அஞ்சலி கூட்டம் – அழைப்பிதழ்

இலக்கிய இமயம் ஜெயகாந்தன் நினைவு அஞ்சலி கூட்டம் நாள்: 09-05-2015 சனிக்கிழமை – காலை 9.30 மணி இடம்: சத்தியமூர்த்தி பவன், சென்னை தலைமை: திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் வரவேற்புரை: திரு.கோபண்ணா முன்னிலை: இராயபுரம் திரு.ஆர்.மனோ, திரு.என்.ரங்கபாஷ்யம், கராத்தே திரு.ஆர்.தியாகராஜன், திரு.வி.ஆர்.சிவராமன், பூவை திரு.ஜேம்ஸ், திரு.ஏ.ஜி.சிதம்பரம் நினைவுரை: திருமதி.கனிமொழி எம்.பி தோழர் டி.கே.ரங்கராஜன் எம்.பி தோழர் கே.சுப்பராயன் எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன் ஜேகே.நண்பர்.திரு.பி.ச.குப்புசாமி

அதிமுக ஊழலுக்கு எதிரான பேரணி தொடர்பான பத்திரிக்கை செய்திகள்

அதிமுக ஊழலுக்கு எதிரான பேரணி தொடர்பான பத்திரிக்கை செய்திகள்

  தமிழ்நாட்டில் ஊழல் ஆட்சி நடத்தும் அதிமுக அரசுக்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி நடத்திய மாபெரும் பேரணி தொடர்பாக பல்வேறு பத்திரிக்கைகளில் வெளிவந்த செய்திகள்.. Courtesy : Dinamalar Courtesy : The Hindu Courtesy : Tamil Hindu Courtesy : Dinakaran  Courtesy : Dinakaran Courtesy : Deccan Chronical  

ஆளுநருடன் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு

ஆளுநருடன் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு

அதிமுக ஆட்சிக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் அடங்கிய பட்டியலை 02.05.2015 சனிக்கிழமை அன்று மாலை 5.30 மணியளவில் மேதகு தமிழக ஆளுநர் திரு. ரோசைய்யா அவர்களிடம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் வழங்கினார்.