Scan0002

முழு தேர்தல் அறிக்கையை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.

இது அறிக்கை அல்ல, ஆவணம் !

.வெ.கி..ங்கோவன்

தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி

தமிழகத்தில் நடைபெறவுள்ள 15வது சட்டப்பேரவை தேர்தலுக்குக் காங்கிரஸ் கட்சியின் சார்பாகத் தேர்தல் அறிக்கை தயாரிக்க நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் இ.எம்.சுதர்சன நாச்சியப்பன் தலைமையில் 14 உறுப்பினர்கள் கொண்ட குழுவை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் அன்னை சோனியா காந்தி அவர்களின் பரிந்துரையின் பேரில் அமைக்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள முன்னணி காங்கிரஸ் தலைவர்கள், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் உள்ளிட்ட பலருக்குத் தேர்தல் அறிக்கைக்குத் தேவையான கருத்துக்களை வழங்குமாறு கடிதம் மூலம் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதையொட்டி பெறப்பட்ட பல்வேறு பரிந்துரைகள் மற்றும் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு பலமுறை கூடி விவாதித்து திரட்டப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் வரைவு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டது. இந்த வரைவு தேர்தல் அறிக்கை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு அனுப்பப்பட்டு ஒப்புதல் பெறப்பட்ட பிறகு, காங்கிரஸ் தேர்தல் அறிக்கை இறுதி வடிவத்தைப் பெற்றிருக்கிறது. இந்தத் தேர்தல் அறிக்கையில் ஏறத்தாழ 55 தலைப்புகளின்கீழ் தமிழகத்தில் எதிர்கொள்ளவேண்டிய பல்வேறு பிரச்சினைகள் குறித்து காங்கிரஸ் கட்சியின் கருத்துக்களைத் தெளிவாகக் கூறியிருக்கிறோம்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு கட்சி எத்தகைய அணுகுமுறையை ஆட்சிமுறையில் கையாளவேண்டும் என்பதற்குக் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை மிகச்சிறந்த வழிகாட்டியாக அமையும் என்று நம்புகிறோம். இதன்மூலம் பல்வேறு பிரச்சினைகளில் நமது நிலை என்ன என்பதை மிகத்தெளிவாக அறுதியிட்டுக் கூறியிருக்கிறோம். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை மற்ற கட்சிகளின் தேர்தல் அறிக்கையிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகவே அமைந்திருக்கிறது. எங்களது புதிய பார்வை தமிழக வாக்காளர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெறும் என்று உறுதியாக நம்புகிறோம்.

இந்தத் தேர்தல் அறிக்கையில் விரிவாகக் கூறப்பட்டுள்ள கருத்துக்களை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள், முன்னணி அமைப்புகள், சொற்பொழிவாளர்கள், காங்கிரஸ் வேட்பாளர்கள் தங்களது பிரச்சாரத்தில் மிகப்பெருமளவில் பயன்படுத்தவேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

2016 சட்டமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவில் இடம்பெற்று மிகச்சிறப்பான கருத்துக்களைக் கூறி, இது அறிக்கை அல்ல, ஆவணம் என்று சொல்லுகிற அளவில் அமைவதற்குக் காரணமான குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை மனதார பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்.

 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு 

 

டாக்டர் இ.எம்.சுதர்சன நாச்சியப்பன், எம்.பி., தலைவர்

உறுப்பினர்கள்

 

திரு. உ.பலராமன்                                                       திரு. மாணிக்கம் தாகூர்

திரு. ஆ.கோபண்ணா                                               திரு. சி.ஆர்.கேசவன்

திரு. எம்.ஜோதி                                                             திரு. கு.செல்வப்பெருந்தகை

திரு. சி.டி.மெய்யப்பன்                                            திரு. எஸ்.சோலையப்பன்

திரு. எம்.எஸ்.திரவியம்                                            திரு. கோ.சூரியமூர்த்தி

திருமதி. ஜான்சிராணி                                             திரு. பெருமாள்சாமி

திருமதி. இமயா கக்கன்

பொருளடக்கம்

  • மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் மகத்தான பத்து சட்டங்கள் : 2004-2014
  • அராஜக .தி.மு.. ஆட்சியை ஏன் அகற்ற வேண்டும் ?
  • காங்கிரஸ் தேர்தல் அறிக்கை - சிறப்பு அம்சங்கள்

 

 

  1. ஊழலை ஒழிப்போம்; நல்லாட்சி அமைப்போம்
  2. பூரண மது விலக்கை அமல்படுத்துவோம்
  3. விவசாயக் கொள்கையை விரிவாக வகுப்போம்
  4. புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவோம்
  5. தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவோம்
  6. மின் உற்பத்தியைப் பெருக்குவோம்
  7. அரசு நிர்வாகத்தில் சீர்திருத்தம் செய்வோம்
  8. உள்ளாட்சியில் நல்லாட்சி அமைத்திடுவோம்
  9. இயற்கை வளங்களைப் பாதுகாப்போம்
  10. நதிநீர்ப் பிரச்சினைகளைத் தீர்ப்போம்
  11. சமூக நீதியைப் பாதுகாப்போம்
  12. நீதித்துறையைச் சீரமைப்போம்
  13. பொது சுகாதாரக் கொள்கையைப் புனரமைப்போம்
  14. பொது விநியோக திட்டத்தைச் சீரமைப்போம்
  15. சமூக நலக் கொள்கை விரிவாக்குவோம்
  16. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் நலன்                                            
  17. மீனவர் பிரச்சினைகளும் தீர்வுகளும்
  18. தொழிலாளர் நலன்
  19. அமைப்புச்சாரா தொழிலாளர் நலன்
  20. நெசவாளர் நலன்
  21. அரசு ஊழியர் - ஆசிரியர் - ஓய்வூதியர் நலன்
  22. வணிகர் நலன்                         
  23. மாற்றுத்திறனாளிகள் நலன்
  24. சிறுபான்மையினர் நலன்      
  25. மகளிர் நலன்                            
  26. முதியோர் நலன்                      
  27. திருநங்கையர் நலன்              
  28. பால் உற்பத்தியாளர் - நுகர்வோர் நலன்
  29. அரசு நிதிக் கொள்கையை மேம்படுத்துவோம்
  30. காவல் துறையைச் சீரமைப்போம்
  31. இந்துசமய அறநிலையத் துறையை மேம்படுத்துவோம்
  32. போக்குவரத்துத் துறையில் சீர்திருத்தம் செய்வோம்
  33. நுகர்வோர் நீதிமன்றங்களைச் செம்மைப்படுத்துவோம்
  34. சுற்றுலாத் துறையை விரிவுபடுத்துவோம்
  35. சுற்றுச்சூழல் பாதுகாப்பைப் பேணிக் காப்போம்
  36. கூவம் சீரமைப்புத் திட்டம்      
  37. மெட்ரோ ரயில் திட்டத்தை விரிவுபடுத்துவோம்
  38. மரபு சாரா எரிசக்தியை ஊக்கப்படுத்துவோம்
  39. காஞ்சிபுரம் பட்டுப் பூங்கா    
  40. நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்கு மணிமண்டபம்
  41. சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வோம்
  42. திரையரங்குகளில் கட்டணக் கொள்ளையைத் தடுத்திடுவோம்
  43. தமிழ் வளர்ச்சி                                                                                            
  44. நதிகளை இணைப்போம்                                                                         
  45. வேலைவாய்ப்பைப் பெருக்குவோம்                                                     
  46. இலங்கைத் தமிழர் உரிமை காத்திடுவோம்
  47. தகவல் அறியும் ஆணையத்தைச் சீரமைப்போம்
  48. சேதுசமுத்திரத் திட்டம் ; சென்னை - மதுரவாயல் திட்டம்
  49. இயற்கை பேரிடர் மேலாண்மையை உறுதிசெய்வோம்
  50. கூட்டுறவு தேர்தல்                                                                                      
  51. பொது நூலகத்துறையைச் சீரமைப்போம்                                           
  52. தமிழகத்தில் மீண்டும் மேலவை அமைப்போம்                                  
  53. பத்திரிகையாளர் நலன்                                                                           
  54. திரைப்படத்துறையைச் சீர்செய்வோம்                                                
  55. கிராமியக் கலை - ஜல்லிகட்டு                                                                 

மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின்

மகத்தான பத்து சட்டங்கள் : 2004-2014

 

இந்திய விடுதலைக்காக 60 ஆண்டுகாலம் போராடி விடுதலை பெற்றுத்தந்த பிறகு, கடந்த 68 ஆண்டுகளில் 55 ஆண்டுகள் இந்தியாவை ஆட்சிசெய்த பெருமை காங்கிரசுக்கு உண்டு.  இந்தியாவை ஆள்வதற்குத் தகுதியுள்ள கட்சியாகக் காங்கிரஸ் கட்சியினையே  மக்கள் நம்பினார்கள்.   ஆதரித்தார்கள், வாக்களித்தார்கள், ஆட்சியில் அமரவைத்து அழகு பார்த்தார்கள்.

கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியைச் சந்தித்தாலும், ஜனநாயகத்தின் அடிப்படையில் இத்தீர்ப்பைக் காங்கிரஸ் கட்சி ஏற்றுக்கொண்டது. அந்தத் தேர்தலில் மொத்தம் பதிவான 53 கோடி வாக்குகளில், பா.ஜ.க.வுக்குக் கிடைத்தது 17 கோடி வாக்குகள், பெற்ற இடம் 283. காங்கிரஸ் கட்சி பெற்ற வாக்குகள் 11 கோடி, மக்களவையில் கிடைத்த இடங்கள் 44.  பா.ஜ.க.வுக்கு 29 சதவிதக வாக்குகளும் காங்கிரசுக்கு 19 சதவிகித வாக்குகளும் கிடைத்துள்ளன.  பா.ஜ.க.வுக்கும் காங்கிரசுக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 6 கோடி. இதைத் தோல்வியாக ஏற்றுக்கொண்ட காங்கிரஸ் கட்சி, பொறுப்புள்ள எதிர்கட்சியாக அன்னை சோனியாகாந்தி தலைமையில், இளந்தலைவர் ராகுல்காந்தி வழிகாட்டுதலில் மிகச்சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

2004இல் தொடங்கி 2014 வரை டாக்டர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வரலாறு காணாத வகையில் பல வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறது.  சுதந்திர இந்தியாவில் என்றுமே காணாத வளர்ச்சி விகிதமான 9 சதவிகித வளர்ச்சியைத் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் காண நேர்ந்தது மிகப்பெரிய சாதனையாகும்.

நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை உருவாக, தகவல் அறியும் உரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டடது. இதன்மூலம் ஆட்சியில் நடைபெறும் அனைத்து விவரங்களையும் சாதாரணக் குடிமகன்கூட அறிந்துகொள்ள உரிமை வழங்கப்பட்டது.  இது ஒரு புரட்சிகரமான நடவடிக்கையாகும்.

மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு அமைந்ததும் புரட்சிகரமான சட்டங்களை நிறைவேற்றுவதில் ஈடுஇணையற்ற சாதனைகளைப் படைத்தது. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளைப் புனிதமாகக் கருதுகிற ஒரே கட்சி இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிதான். கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவை வளர்ச்சி பாதையில் அழைத்துச்செல்ல சிறப்பான பத்து சட்டங்களை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நிறைவேற்றியுள்ளது.

மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் மகத்தான சட்டங்கள் - சாதனைகள் :

உணவு பாதுகாப்புச் சட்டம் : அன்னை சோனியா காந்தியின் கனவுத் திட்டம்தான் உணவு பாதுகாப்புச் சட்டம். கடந்த சில வருடங்களாக இச்சட்டத்தை நிறைவேற்றுவதற்கு அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் ஏராளம். இச்சட்டத்தை நிறைவேற்றியதற்காக அன்னை சோனியாவை „மணிமேகலை…, „அன்னபூரணி… என்று வாய்மணக்க அழைத்து, நாட்டுமக்கள் மகிழ்ச்சியடைந்து வரவேற்றனர்.

காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் உணவு பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டு. 81 கோடி மக்களுக்கு ஒரு கிலோ கோதுமை ரூ.2, ஒரு கிலோ அரிசி ரூ.3, ஒரு கிலோ பருப்பு வகைகள் ரூ.1 என்கிற அளவில் ஒருவருக்கு மாதம் ஒன்றுக்கு ஐந்து கிலோ வீதம் உணவு தானியங்கள் வழங்குவது சட்டப்பூர்வமாக உறுதிசெய்யப்பட்டது. இதற்குத் தேவைப்படும் உணவு தானியங்களின் அளவு 72.6 மில்லியன் டன் ஆகும். இதற்காக மத்திய அரசு 2013-14ஆம் ஆண்டு விலைகளின்படி, மானியத் தொகையாக ரூபாய் 1 லட்சத்து 27 ஆயிரத்து 747 கோடி ஒதுக்கியது. ஆனால், மத்திய பா.ஜ.க. ஆட்சியில் 2003-04இல் உணவு மானியம் ரூ.25,160 கோடியாகத்தான் இருந்தது என்பது நினைவுகூரத்தக்கது.

விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்கிற ஒரு கிலோ அரிசிக்கு மத்திய அரசு வழங்குகிற விலை ரூ.23.80. இந்த உணவு பாதுகாப்புச் சட்டடப்படி, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு ரூ.3 என்கிற விலையில் வழங்குகிறது. இதற்காக மத்திய அரசு ஒரு கிலோ அரிசிக்கு வழங்குகிற மானியம் ரூ.20.80. அதேபோல, லெவி சர்க்கரையை மத்திய காங்கிரஸ் அரசு ரத்துசெய்தபிறகு, ஒரு கிலோ சர்க்கரையைப் பொது சந்தையில் ரூ.34 விலைக்கு வாங்கி, ரூ.13.50 விலையில் மாநில அரசுகளுக்கு அளித்து வருகிறது. இதனால் ஒரு கிலோ சர்க்கரைக்கு மத்திய அரசு ஏற்றுக்கொள்கிற மானியம் ரூ.20.50. ஏழை எளிய மக்களுக்காக இத்தகைய சுமையைச் சுமந்துக்கொண்டு, இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்கிற காங்கிரஸ் ஆட்சியை நாட்டுமக்கள் நன்றியோடு இன்றும் நினைத்துப் பார்க்கிறார்கள்.

நிலம் கையகப்படுத்துதல் சட்டம் : விவசாயிகளுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட அநீதியைத் துடைத்தெறிய இளந்தலைவர் ராகுல்காந்தி மேற்கொண்ட தீவிர முயற்சியின் காரணமாகக் கொண்டுவரப்பட்டதுதான் நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்த்துதல் சட்டம் - 2013. இந்தப் புதிய சட்டத்தின்படி கிராமப்புறங்களில் நிலம் கையகப்படுத்தப்படும்போது சந்தை மதிப்பைவிட நான்கு மடங்கு அதிகமாகவும், நகர்ப்புறங்களில் இரண்டு மடங்கு அதிகமாகவும் இழப்பீடு வழங்கப்படவேண்டும். நிலம் கையகப்படுத்துவதால் பாதிக்கப்படும் விவசாயத் தொழிலாளர்கள் மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வுக்குச் சட்டத்தில் விரிவாக வகைசெய்யப்பட்டிருந்தது.

இச்சட்டம் 2011ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் முன்தேதியிட்டு அமல்படுத்தப்பட்டது. எந்தவொரு நிலம் கையகப்படுத்தும்போதும், கையகப்படுத்தும் நடவடிக்கைகளிலும் உள்ளாட்சி அமைப்புகளின் ஒப்புதல் அவசியம் பெறவேண்டும். கிராம சபைகளின் அனுமதியில்லாமல் நிலம் கையகப்படுத்த முடியாது. நில உரிமையாளர்களுக்கு முழு இழப்பீட்டுத் தொகையும் வழங்கி, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு நடவடிக்கைகள் முழுமையாக முடிந்தபின்னரே, நில உரிமையாளர்களை நிலம் கையகப்படுத்தப்பட்ட பகுதியிலிருந்து வெளியேறுமாறு கூறமுடியும்.

அரசு மற்றும் தனியார் துறை இணைந்து செயல்படுத்தும் இத்திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்த 70 சதவிகித நில உரிமையாளர்களிடமிருந்து ஒப்புதல் பெறவேண்டும். தனியார் திட்டங்களுக்கு 80 சதவிகித உரிமையாளர்களிடம் ஒப்புதல் பெறவேண்டும். இத்தகைய  உரிமைகளை விவசாயிகளுக்கு வழங்கிய நில உரிமைச் சட்டத்திற்கு மாற்றாக, விவசாயிகளின் உரிமைகளைப் பறிக்கிற வகையில் மத்திய பா.ஜ.க. அரசு அவசரச் சட்டம் கொண்டுவந்தது. இச்சட்டத்திற்கு எதிராக ராகுல்காந்தி தலைமையில் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் கிளர்ந்தெழுந்த காரணத்தால் அந்த அவசரச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் பா.ஜ.க.வால் நிறைவேற்ற முடியாமல் காலாவதியாகிற நிலை ஏற்பட்டது. இது விவசாயிகளின் வெற்றி, இளந்தலைவர் ராகுல்காந்தியின் வெற்றி, காங்கிரசின் வெற்றி.

வறுமையை ஒழித்த மகத்தான சட்டம் : கிராமப்புற மக்களிடையே நிலவுகிற வேலையில்லா திண்டாட்டத்தைப் போக்குகிற வகையில் 2006ஆம் ஆண்டு மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு கொண்டுவந்ததுதான் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம். ஒரு நிதியாண்டில் நூறு நாள்கள் வேலைவாய்ப்பு வழங்கி, கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை வளர்த்து வருகிறது.

மகாத்மா காந்தி தேசிய ஊரகவேலை வாய்ப்பு உறுதித் திட்டம் ஆண்டுதோறும் சராசரியாக 5 கோடி குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது. 2006ஆம் ஆண்டில் 65 ரூபாயாக இருந்த ஒரு நாள் ஊதியம், இன்று ரூ.193 ஆக உயர்ந்திருக்கிறது. விலைவாசி உயரும்போது இந்த ஊதியமும் உயருகிற வகையில் மத்திய காங்கிரஸ் அரசு வழிவகை செய்திருக்கிறது.

கல்வி உரிமைச் சட்டம் : குழந்தைகளுக்கான இலவசம் மற்றும் கட்டாய கல்விபெறும் உரிமைச் சட்டம் 2009இல் நிறைவேற்றப்பட்டு, நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கப்பட்டது. 6 முதல் 14 வயதுடைய ஒவ்வொரு குழந்தைக்கும் இலவசக் கட்டாய கல்வி வழங்க இச்சட்டம் வழிசெய்கிறது. இச்சட்டத்தினால் இடைநிலை மற்றும் உயர்கல்வி அளவில் பள்ளியிலிருந்து மாணவர்கள் பாதியிலேயே விலகிவிடுவது பெருமளவு தடுக்கப்பட்டுள்ளது.

பத்தாண்டுகளுக்குமுன்பு வங்கிகளில் கல்விக்கடன் என்பது எவரும் எளிதில் பெறமுடியாத, அரிதிலும் அரிதாக இருந்தது. மத்திய காங்கிரஸ் அரசு அறிமுகம் செய்த கல்விக்கடன் டிசம்பர் 2013 நிலவரப்படி, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் 25 லட்சத்து 70 ஆயிரத்து 254 மாணவர்கள் பெற்ற கடன் நிலுவைத்தொகை ரூபாய் 57 ஆயிரத்து 700 கோடியாக உள்ளது. இந்தக் கடனுதவி மூலம் ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய சமுதாயத்தைச் சார்ந்த, குறிப்பாகக் கிராமப்புறங்களில் வாழ்கிற குடும்பத்தைச் சார்ந்தவர்கள், மருத்துவர்களாகவும் பொறியாளர்களாகவும், மேலும் உயர்கல்வி படித்து பட்டம் பெற்று, வாழ்க்கையில் மிகப்பெரிய வளர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்று சொன்னால் அது மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் சாதனையாகும்.

அன்று பெருந்தலைவர் காமராஜர் தொடக்கிவைத்த கல்விப் புரட்சி, இன்று மிகப்பெரிய பலனைத் தந்துகொண்டிருக்கிறது. தமிழகத்தில் மட்டும் ஒரு ஆண்டில் 2 லட்சம் பொறியியல் பட்டதாரிகள் படித்து முடிக்கிறார்கள் என்று சொன்னால் இதைவிட மக்கள் நலனில் அக்கறையுள்ள அரசு, வேறு ஏதாவது இருக்கமுடியுமா என்பதை மனசாட்சியுள்ளவர்கள் சிந்திக்கவேண்டும்.

குற்றவியல் சட்ட (திருத்த) மசோதா - 2013 : பணியிடங்களில் பாலியல் தொல்லைகளிலிருந்து மகளிரைப்  பாதுகாப்பதற்கான சட்டம் - 2013 - மகளிரின்  உரிமைகளைப் பாதுகாப்பதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க சீர்திருத்தத்தைக் காங்கிரஸ் கட்சிதான் தலைமையேற்று கொண்டுவந்தது. நமது பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்வதற்குரிய வலிமையை நமது நிர்வாக அமைப்புக்கு இந்தச் சட்டங்கள் அளித்தன.  இச்சட்டங்களின்படி பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு விதிக்கப்படும் தண்டனையின் அளவு அதிகரிக்கப்பட்டதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிறப்பான முறையில் இச்சட்டம் செயல்படுவதை உறுதிசெய்வதற்காக, மகளிருக்குச் சாதகமான வகையில் புதிய குற்றங்கள் இச்சட்டத்தில் சேர்க்கப்பட்டன.

கம்பெனிகள் நிர்வாக நடைமுறையில் தெளிவை ஏற்படுத்துவதற்காகப் புதிய கம்பெனிகள் சட்டத்தைக் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கொண்டுவந்து நிறைவேற்றியது.  இதில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருடனும் விரிவான முறையில் ஆலோசனை நடத்தப்பட்டு கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டம், புதிய வணிகங்கள் தொடங்குவதை எளிதாக்குவதுடன், பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்புகளையும் ஊக்குவிக்கிறது.

இந்தியாவின் குடிமக்கள், குறிப்பாக நமது மூத்த குடிமக்களுக்கு அவர்களின் ஓய்வூதிய நிதி தொடர்பாக முழுமையான பாதுகாப்பு  அளிக்கவேண்டும் என்பதை கருத்தில்கொண்டு ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணைய சட்டம் - 2013 என்ற சட்டத்தைக் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கொண்டுவந்து நிறைவேற்றியது.  மனசாட்சியற்ற தனிநபர்களிடமிருந்து ஓய்வூதிய நிதி பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்வதற்காக, ஓர் ஒழுங்குமுறை அமைப்பு ஏற்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காகவே இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

நிர்வாக ஊழலுக்கு எதிராகக் கண்காணிப்பை மேற்கொள்வதற்காக வலிமையான, சுதந்திரமான ஆணையத்தை மக்களுக்கு ஏற்படுத்தித் தரவேண்டும் என்ற நோக்கத்தின் காரணமாகக் கொண்டுவரப்பட்டதுதான், லோக்பால் மற்றும் லோக் அயுக்தா சட்டம் - 2013 ஆகும். நிர்வாகம் மற்றும் அரசியல் அமைப்பில் நிலவும் ஊழலைக் கட்டுப்படுத்துவதற்காக ஓர் அமைப்பை ஏற்படுத்துவதன்மூலம் இந்தச் சட்டம் மக்களுக்கு மிகப்பெரிய அதிகாரத்தை வழங்குகிறது.

நமது நாட்டின் வனம் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காகத் தன்னையே அர்ப்பணித்துக்கொண்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி, தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் - 2009 என்ற சட்டத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றியுள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் வனம் சார்ந்த பிரச்சினைகளை விசாரிப்பதற்காக விரைவு நீதிமன்றங்களை அமைக்க இச்சட்டம் வகைசெய்கிறது.

தெரு வணிகர்கள் (வாழ்வாதாரப் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம் - 2004 இந்திய தேசிய காங்கிரஸ் கொண்டுவந்து நிறைவேற்றியுள்ளது. லட்சக்கணக்கான தெரு வணிகர்களின் வாழ்வாதாரத்தை இச்சட்டம் பாதுகாக்கிறது.

மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளுவதைத் தடைசெய்தல் மற்றும் ஒழுங்குமுறை சட்டம் - 2013 என்னும் புரட்சிக்கரமான சட்டம் காங்கிரஸ் கட்சி கொண்டுவந்து நிறைவேற்றியது. மனித கழிவுகளை அள்ள மனிதர்களைப் பயன்படுத்துவோருக்குக் கடுமையான தண்டனைகளை விதிக்கவும், கழிவுகளை அகற்றும் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும் இச்சட்டம் வகைசெய்கிறது. இதன்மூலம் காலம்காலமாக நமது சமுதாயத்தின்மீது படிந்திருந்த கறை ஒருவழியாக அகற்றப்படும்.

விவசாயக் கடன் : 2003-04இல் பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசால் வழங்கப்பட்ட விவசாயக்கடன் ரூபாய் 83 ஆயிரம் கோடி. 2015-16இல் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு நிர்ணயித்த கடன் இலக்கு ரூபாய் 8 லட்சத்து 50 ஆயிரம் கோடி. விவசாயிகள் நலனில் மத்திய காங்கிரஸ் அரசுக்கு அக்கறை இருக்கிறதா? பா.ஜ.க. அரசுக்கு அக்கறை இருக்கிறதா? என்பது விவசாயிகளுக்குப் புரியாமல் இல்லை.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கடந்த பத்து ஆண்டுகளில் 14 கோடி மக்களை வறுமையின் பிடியிலிருந்து மீட்டிருக்கிறது. முந்தைய பத்து ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, கடந்த பத்தாண்டுகளில் வறுமை ஒழிப்பு வேகம் மும்மடங்கு அதிகரித்திருக்கிறது. இது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் மிகப்பெரிய சாதனையாகும்.

செல்பேசி புரட்சி : இந்தியாவில் தற்போதைய செல்பேசிகளின் எண்ணிக்கை 100 கோடியைத் தாண்டிவிட்டது. பத்தாண்டுகளுக்குமுன்பு இது வெறும் 3.36 கோடியாக இருந்தது. ஊரகப் பகுதிகளில் தொலைபேசி இணைப்புகளின் எண்ணிக்கை கடந்த பத்தாண்டுகளில் 26 மடங்கு அதிகரித்திருக்கிறது. தொலைத்தொடர்புத் துறையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இத்தகைய சாதனையைப் புரிந்து மிகப்பெரிய புரட்சியைச் செய்திருக்கிறது. ஆனால், இதை மூடிமறைக்க எதிர்கட்சிகள் 2ஜி பூச்சாண்டி காட்டி, அவதூறு பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இதை நாட்டுமக்கள் நிச்சயம் ஏற்க மாட்டார்கள்.

2004 முதல் 2014 வரை அன்னை சோனியா காந்தியின் வழிகாட்டுதலோடு, டாக்டர் மன்மோகன்சிங் தலைமையில் பத்தாண்டு காலம் பல்வேறு துறைகளில் வரலாறு காணாத சாதனைகளை நிகழ்த்திக் காட்டியதை எவரும் மறுத்திட இயலாது. ஆனால், நாட்டுமக்கள் மாற்றம் வேண்டுமென்று விரும்பியதால் நரேந்திரமோடி தலைமையில் ஆட்சி, பொய்ப் பிரச்சார - மாயாஜால வேலைகளால் அமைந்திருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில் பா.ஜ.க.வின் சாயம் வெளுத்துவருவதை நாட்டுமக்கள், குறிப்பாக வாக்களித்து ஆதரித்த இளைஞர்கள் கவனித்து வருகிறார்கள். இந்நிலையில், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசின் சாதனைகளை நினைவுகூர்ந்து ஆதரவு தரவேண்டிய பொறுப்பு தமிழக மக்களுக்கு இருக்கிறது.

அராஜக .தி.மு.. ஆட்சியை ஏன் அகற்ற வேண்டும்?

கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது பல்வேறு வாக்குறுதிகளைக் கொடுத்து தமிழகத்தின் முதலமைச்சராக ஆட்சியில் அமர்ந்த ஜெயலலிதா, கொடுத்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றவில்லை. இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக ஆக்குவேன் என்று பலமுறை கூறினார். மத்தியப் புள்ளியல்துறை அறிக்கையின்படி மாநிலங்களுக்கான வளர்ச்சி வரிசையில் ஐந்தாவது இடத்தில் இருந்த தமிழகம் 18வது இடத்திற்குத் தள்ளப்பட்டுவிட்டது.

தமிழகத்தில் மின்வெட்டு கட்டமைப்பு வசதிகள் இல்லாத நிலை, ஊழலை நோக்கமாகக்கொண்ட அணுகுமுறை, முதலமைச்சரை எவரும் சந்திக்க முடியாதநிலை போன்ற காரணங்களால், தொழில் முனைவோர் யாரும் தொழில் தொடங்க ஆர்வம் காட்டவில்லை. துறைமுகம், விமானப் போக்குவரத்து, நெடுஞ்சாலை வசதிகள் இருந்தும், தமிழகத்தில் தொழில் வளர்ச்சி ஏற்படவில்லை. ஆண்டுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் பொறியியல் பட்டதாரிகள் படித்து வெளிவருகின்ற மாநிலத்தில் ஏன் தொழில் வளர்ச்சி ஏற்படவில்லை? இதற்கு யார் காரணம்?

தமிழகத்தில் தொழில் வளர்ச்சி 2009-2010இல் 20.93 சதவிகிதமாக இருந்தது. 2013-14இல் அது 1.61 சதவிகிதமாகக் குறைந்தது. அதேபோல, தமிழக உற்பத்தி வளர்ச்சி 2009-10இல் 29.18 சதவிகிதமாக இருந்தது, அது 2012-13இல் 1.31 சதவிகிதமாகக் குறைந்தது. இதனால்தான்  தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் தற்போது  94 லட்சம் படித்த பட்டதாரிகள் பதிவுசெய்து காத்திருக்கிற அவலம் ஏற்பட்டுள்ளது.

இந்த அவலத்தை மூடிமறைக்கவே  ரூ.100 கோடி செலவில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை ஜெயலலிதா நடத்தினார்.  கடந்த நான்காண்டுகளாகத்  தூங்கிவிட்டு தேர்தல் நெருங்குகிற நேரத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்துவது அவசியம்தானா? மக்கள் வரிப் பணத்தை விரயமாக்கலாமா?

தமிழகத்தின் நிதிநிலைமை :

தமிழகத்தின் இன்றைய நிதி நிலைமை அதலபாதாளத்தில் வீழ்ந்து கிடப்பதை எவறும் மறுக்க முடியாது. இதை இல்லை என்று எவரும் சாதித்துவிட முடியாது. 2015-16ஆம் ஆண்டிற்கான தமிழகத்தின் மொத்த பட்ஜெட் தொகை ரூபாய் 1 லட்சத்தது 47ஆயிரத்து 297 கோடி. இதில் இலவசங்களுக்கும், மானியங்களுக்கும் வழங்கப்படுகிற தொகை ரூபாய் 59ஆயிரத்து 185 கோடி.  அரசு ஊழியர்களுக்கு  ஊதியம்,  ஓய்வூதியம் ரூபாய் 59 ஆயிரத்து 882 கோடி. தமிழக அரசின் மொத்த வரி வருவாய் ரூபாய் 29 ஆயிரத்து 672 கோடி.  தமிழகத்தின் அவலத்தைப் பார்த்தீர்களா?

தமிழக அரசின் மொத்தக் கடன் :

தமிழக அரசின் நேரடிக் கடன் ரூபாய் 2 லட்சத்து 7 ஆயிரம் கோடி. பொதுத்துறை நிறுவனங்களின் கடன் ரூபாய் 2 லட்சம் கோடி. மொத்தக் கடன் ரூபாய் 4 லட்சத்தது 7 ஆயிரம் கோடி. தமிழக அரசின் நேரடிக் கடனுக்கு வட்டி  ரூபாய் 17 ஆயிரத்து 446 கோடி. ஆண்டுக்குச் செலுத்தவேண்டிய மொத்த வட்டித்தொகை ரூபாய் 35 ஆயிரத்து 391 கோடி. திவாலாகும் நிலையில் இருக்கிற தமிழக அரசின் நிதி நிலைமையைப் பார்த்தீர்களா? இதற்கு ஜெயலலிதாதான் பொறுப்பேற்க வேண்டும்.

2011-12இல்  தமிழக அரசின் மொத்தக் கடன் ரூபாய் 1 லட்சத்து 14 ஆயிரத்து 470 ஆக இருந்தது.  அது 2015-16இல்  ரூபாய் 1 லட்சத்து 95 ஆயிரத்து 290 கோடி என்று உயர்ந்திருக்கிறது.  இத்தகைய கடன் உயர்வுதான் ஜெயலலிதாவின் ஐந்தாண்டு சாதனையா? தமிழக மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

தமிழக அரசின் மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் கடன் நிலுவை 2013-14இல் ரூபாய் 73 ஆயிரத்து 541 கோடி.  அந்தக் கடன் 2012-13இல் ரூபாய் 58 ஆயிரத்து 883 கோடியாகத்தான் இருந்தது. 2013-14இல் ஒரே ஆண்டில் கடன் சுமை ரூபாய் 14 ஆயிரத்து 631 கோடி.  ஏன் உயர்ந்தது?  எதற்காக உயர்ந்தது? தமிழக மின்வாரிய வல்லுநர்களின் ஆலோசனையை மீறி தனியாரிடம் அதிக விலை கொடுத்து மின்சாரத்தைக் கொள்முதல் செய்ததால்தான் ரூபாய் 15 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டது. இதை ஜெயலலிதாவால் மறுக்க முடியுமா? இதனால்தான் மின்சார வாரியத்தின் கடன்பெறும் தகுதியைத் தர நிர்ணய அமைப்பு நான்காம் இடத்தில் தள்ளிவைத்துள்ளது. இந்த அவலநிலை தமிழகத்தில் நீடிக்கலாமா?

வீழ்ந்து வரும் வேளாண்மை :

தமிழ்நாட்டில் 56 சதவிகித மக்கள் விவசாயத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால், தமிழகத்தில் மொத்த உற்பத்தியில் 10 முதல் 13 சதவிகிதம் மட்டுமே வேளாண்மை துறைமூலம் உற்பத்தியாகிறது. அதாவது, மாநிலத்தின் மொத்த வருவாயில் 13 சதவிகிதம் மட்டுமே கிராமங்களில் வசிக்கும் மக்களுக்குக் கிடைக்கிறது. இதனால்தான் கிராமப்புறங்களில் வசிக்கின்ற மக்களின் வருவாய் மிகவும் குறைவாக இருந்து வருகிறது.

தமிழ்நாட்டின் மொத்த உணவு தானிய தேவை 125 லட்சம் டன். ஆனால், உற்பத்தியாவதோ 80 லட்சம் டன். ஏறத்தாழ 45 லட்சம் டன் பற்றாக்குறை இருக்கிறது. ஆகவே, தமிழ்நாட்டின் தேவையைச் சந்திக்க வெளி மாநிலங்களிலிருந்து வாங்கவேண்டிய அவலநிலையில் இருந்து வருகிறோம்.

தலித்துகளுக்கு எதிரான தாக்குதல் :

தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிரான தாக்குதல்கள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாகத் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் புள்ளிவிவரங்களோடு வெளியிட்டுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டில் வடஇந்திய மாநிலங்களைவிட, தமிழகத்தில் தலித்துகள் அதிக அளவில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். 2013இல் தமிழகத்தில் 28 ஆக இருந்த தலித் படுகொலைகள் 2014இல் 72ஆக உயர்ந்திருக்கிறது. ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளைப் பறித்துவருவதில் அ.இ.அ.தி.மு.க. அரசு ஆட்சிக்கு இணையான இன்னொரு ஆட்சி இந்தியாவில் இல்லை.

பூரண மதுவிலக்கே நமது நோக்கம் :

நமது நாடு சுதந்திரம் பெறுவதற்குமுன்பே 1937இல் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக ராஜாஜி பதவி வகித்தபோது மதுவிலக்கை அமல்படுத்திய பெருமை காங்கிரஸ் கட்சிக்கு உண்டு. விடுதலைப் போராட்டக் காலத்திலேயே காந்தியடிகளால் மிகுந்த முக்கியத்துவம் தரப்பட்டது மதுவிலக்கு கொள்கைக்குத்தான். 1937இலிருந்து 1967வரை தமிழகத்தில் மதுவிலக்கை தொடர்ந்து நடைமுறைப்படுத்திய பெருமையும் காங்கிரஸ் ஆட்சிக்கு உண்டு.

1946இல் ஓமந்தூரார் முதல்வராக இருந்தபோது, சென்னை மாகாணத்தின் வருவாய் ரூ.25 கோடியாக மட்டுமே இருந்தது. குறைந்த வருவாய் உள்ளநிலையில் மதுவிலக்கை ஓமந்தூரார் அமல்படுத்தியதைப்போல, இன்று தமிழகத்தின் வருவாய் ரூபாய் 1 லட்சத்து 47 ஆயிரம் கோடியாக இருக்கிறபோது மதுவிலக்கை அமல்படுத்த ஜெயலலிதா முன்வராதது ஏன்? மதுவிலக்குக்கு எதிராக ஜெயலலிதா இருப்பதன் மர்மம் என்ன? அதற்குப் பின்னாலே இருக்கிற ஆதாயம் என்ன? நாட்டுமக்கள் கேட்கிறார்கள், ஜெயலலிதா பதில் கூறுவாரா?

தாழ்ந்த தமிழகமாக மாறியது ஏன்?

இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக ஆக்கிக் காட்டுவேன். அதற்காக ஒரு நாளில் 24 மணிநேரத்தில் 18 மணி நேரம் உழைப்பேன் என்று கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது சூளுரைத்து, மக்களை நம்பவைத்து, அரியணையில் அமர்ந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சியின் அவலமான நிதி நிலைமைதான் இங்கே எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. தாங்கமுடியாத கடன் சுமையோடு இருக்கிற அ.தி.மு.க. ஆட்சியாளர்களை நம்பி உலக முதலீட்டாளர்கள் அல்ல, இந்திய முதலீட்டாளர்கள் அல்ல,  தமிழக முதலீட்டாளர்கள்கூட முதலீடுசெய்ய முன்வருவார்களா?

நாட்டோரே! நல்லோரே!! நிமிர்ந்து நடைபோடவேண்டிய தமிழகம் தாழ்நிலைக்குச் சென்றுகொண்டிருப்பதைத் தடுத்துநிறுத்த வேண்டாமா? வளர்ச்சிப் பாதையில் தமிழகம் பயணம் செய்யவேண்டாமா?  மதுவிலக்கை அமல்செய்து வளமான தமிழகத்தை உருவாக்க வேண்டாமா?

பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிக்காலத்தில் நடத்திக்காட்டப்பட்ட பொற்கால ஆட்சியைப்போல மீண்டும் ஒருஆட்சி அமையவேண்டாமா? அத்தகைய ஆட்சி தமிழகத்தில் அமையவேண்டும் என்பதே காங்கிரசின் குறிக்கோள். இதற்காகக் கடந்த 15 மாதங்களாகத் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைமையில் காங்கிரஸ்; கட்சியினர் பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், மறியல்கள், சிறைவாசங்கள் எனப் பல்வேறு முனைகளில் அ.தி.மு.க. ஆட்சிக்கு எதிராகப் பலமுனை தாக்குதல்கள் தொடுக்கப்பட்டது. இதன் விளைவாக மக்கள் விரோத ஜெயலலிதா ஆட்சி அகற்றப்படுகிற சூழல் இன்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்று கலைஞர் தலைமையில் அமையவிருக்கிற மக்கள் நலன்சார்ந்த ஆட்சியின்மூலமே தமிழகம் இழந்த பெருமையை மீட்கமுடியும் என்று காங்கிரஸ் கட்சி நம்புகிறது.

இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்து வருபவர்கள் அன்னை சோனியா காந்தியும், இளந்தலைவர் ராகுல்காந்தியும் என்பதை நாட்டுமக்கள் புரிந்துகொண்டு காங்கிரசை ஆதரிக்க முடிவு செய்திருக்கிறார்கள். கடந்த காலத்தில், 2004 இல் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு அமைய அன்னை சோனியா காந்தி எடுத்த முயற்சிகளுக்கு முதலில் ஆதரவு குரல் கொடுத்தவர் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் டாக்டர் கலைஞர். 2004இல் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி ஏற்பட்டு, தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் வெற்றிபெற முடிந்தது. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் அதே கூட்டணி வெற்றிபெற்று தி.மு.க. தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைந்தது.

மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நிலையான ஆட்சியை வழங்க தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி மிகச்சிறப்பாகச் செயல்பட்டது. 2013இல் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து தி.மு.க. வெறியேறினாலும், 2016இல் மீண்டும் கூட்டணியில் இணைந்து தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்கிற மகத்தான பயணம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக மக்கள் பேராதரவோடு 2016 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அராஜக அ.தி.மு.க. ஆட்சி அகற்றப்பட்டு, மீண்டும் மக்கள் நலன்சார்ந்த நல்லாட்சி தி.மு.க. தலைமையில் அமைந்திட ஆதரவு கேட்பதே காங்கிரஸ் கட்சியின் தலையாய நோக்கமாகும். தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியை ஆதரிப்பதன் மூலமாகத் தாழ்ந்த தமிழகம் தலைநிமிர்ந்து பீடுநடைபோடுவதற்கான பயணம் தொடங்கிவிட்டது. மாற்றத்தை வழங்க மக்கள் தயாராகிவிட்டார்கள். மாற்றத்தை வழங்க முடியாதவர்களை மக்கள் புறக்கணித்து வருகிறார்கள். எனவே, மாற்றம் உறுதியாகிவிட்டது. தி.மு.க. தலைமையில் மக்கள் நலன்சார்ந்த நல்லாட்சி காங்கிரஸ் ஆதரவோடு அமைந்திட தமிழக மக்கள் ஆதரிப்பார்கள் என்று உறுதியாகக் காங்கிரஸ் கட்சி நம்புகிறது.

தமிழகத்தில் ஊழலற்ற நல்லாட்சி அமைந்து...

மதுவை ஒழித்து... மக்கள் நலன்காக்க ஆதரவு தாரீர்!

காங்கிரசின் சின்னம் கை சின்னம்!

வாக்குறுதிகள்  கைகூட  வாக்களிப்பீர்  கை சின்னம்!

காங்கிரஸ்  தேர்தல்  அறிக்கை – 2016

சிறப்பு அம்சங்கள்

  1. ஊழலை ஒழிப்போம்- நல்லாட்சி அமைப்போம்
  2. லோக் அயுக்தா அமைப்போம்
  3. பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம்
  4. விவசாயக் கொள்கையை விரிவாக வகுப்போம்

*          விவசாயிகள் உற்பத்தி செய்கிற விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்க டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் குழுவின் பரிந்துரையை அமல்படுத்துவோம்.  இதன்படி நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்களுக்கு உற்பத்தி செலவைவிட 50 சதவிகிதம் அதிக விலை கிடைக்க உறுதி செய்யப்படும்.

*          உழவர் சந்தைகளை விரிவுபடுத்துவோம்

*          சொட்டு நீர் பாசனத்திற்கு 100 சதவிகிதம் மானியம் வழங்கப்படும்.

*          விவசாயிகள் உற்பத்தி செய்கிற காய்கறிகள், கனிகள் ஆகியவற்றிற்குக் குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யப்படும். விவசாயிகளுக்குக் குளிர்;பதனக் கிடங்குகள் வசதி வட்டார அளவில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

*          காய்கறிகள், கனிகள் ஆகியவற்றிலிருந்து மதிப்புக்கூட்டுப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் கிராமப்புறங்களில் உருவாக்கப்படும்.

*          மூன்றுபோக சாகுபடி செய்யும் விளைநிலங்கள் வீட்டுமனைகளாகக் கிராமப்புறங்களில் மாறுவது தடைசெய்ய முயற்சி செய்வோம்.

*          கடும் வறட்சி, வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்டட பாதிப்பு காரணங்களால் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் கூட்டுறவு வங்கிகளில்; விவசாயிகள் பெற்ற அனைத்துக் கடன்களும் ரத்து ஆவன செய்வோம்.

*          தேசிய வேளாண் பயிர் காப்பீடுத் திட்டத்திற்குத் தனிநபர் மற்றும் தனிநிலம் பாதிப்பிற்கு இழப்பீடு கிடைக்கும் வகையில் திட்டத்தை மாற்றியமைக்க ஆவன செய்யப்படும்.

*          அ.தி.மு.க ஆட்சியில் கரும்பு விவசாயிகள் சந்தித்த இன்னல்களைப் போக்கும் வகையில் கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.3,500, குவிண்டால் நெல் ஒன்றுக்கு ரூ.2,000 என விலை நிர்ணயிக்கப்படும்.

*          புதிய மின் திட்டங்களை வகுத்து வேளாண்மைக்கு இலவசமாக மின்சாரம் தடையின்றி நாள்முழுவதும் கிடைக்க உறுதி செய்யப்படும். பயிர்களின் நீர்ப்பாசன முறைக்கேற்ப மின்சாரம் வழங்க ஆவன செய்யப்படும்.

*          சிட்டா, அடங்கல் கேட்டு விவசாயிகளை அலையவிடாமல், விவசாயக் கடன் அட்டை (உசநனவை உயசன) ஆதாரமாகக்கொண்டு வேளாண் நகைக்கடன் 4 சதவிகித வட்டியில் வழங்க ஆவன செய்யப்படும். விவசாயிகளுக்கு மின் இணைப்பு உடனடியாகக் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

*          கூட்டுறவுச் சங்கங்களின்மூலம் விவசாயிகளுக்கு வட்டியில்லாக் கடனாகப் பயிர்கடன் வழங்க ஆவன செய்யப்படும்.

*          கிராமப்புறங்களில் நீர்ஆதாரங்களைச் செழுமைப்படுத்த பண்ணைக்குட்டைகள் அமைக்க பாடுபடுவோம்.

*          தேங்காய் கொப்பரைக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க ஆவன செய்யப்படும்.

*          சூரிய சக்தி மின்சாரத்தை விவசாயிகள் பயன்படுத்த 100 சதவிகித மானியம் வழங்க செய்யப்படும்.

*          தமிழக மக்களின் அடையாளச் சின்னமாகக் கருதப்படுகிற பனைமரங்கள் பாதுகாக்கப்படும்.

*          விவசாயத் தொழிலாளர்களுக்கு நியாயமான தினக்கூலி வழங்குவது உறுதிசெய்யப்படும்.

*          வனவிலங்குகளிடமிருந்து பயிர்கள் பாதுகாக்கப்படும்.

*          மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை விரிவுபடுத்தி, விவசாயப் பணிகள் பாதிக்காத காலங்களில் செயல்படுத்தப்படும். விவசாய வேலையோடு இணைக்க முயற்சி செய்வோம்.

*          அறுபது வயதிற்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு மாதம் ரூ.2,000 ஓய்வூதியம் வழங்கப்படும்.

*          ஏரி, குளம், குட்டைகள் தூர்வாரப்படும். அங்குள்ள வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக எடுத்துச்சென்று அவர்களது நிலத்தில் பயன்படுத்த அனுமதிக்கப்படும்.

*          இயற்கை விவசாயத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும்.

  1. புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவோம்

*          Pre KG  முதல்  P.G  வரை அனைத்து மாணவர்களுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லாமல் இலவசக் கல்வி வழங்கப்படும்.

*          கல்வி வணிகமயமாக்குவதைத் தடுக்கப்படும்.

*          தாய்மொழிக் கல்விக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

*          மாவட்டந்தோறும்  நவோதயா பள்ளிகள் தொடங்கப்படும்.

*          கல்வித்துறைக்கான ஒதுக்கீடு உயர்த்தப்படும்.

*          பிற்படுத்தப்பட்ட, தலித் மாணவர்கள் தங்கிப்படிக்கும் விடுதிகளில் அடிப்படை வசதிகள் முழுமையாக செய்துத்தரப்படும். தரமான உணவு வழங்கப்படும்.

*          மொழி சிறுபான்மையினர் உரிமைகளைப் பாதுகாக்கின்ற வகையில் அவர்களது தேவைகளுக்கு ஏற்ப வகுப்புகள் தொடங்கப்படும்.

*          தனியார் பள்ளிகளில் அதிகக் கட்டணம், நன்கொடை வசூலிப்பதைத் தடைசெய்யப்படும்.

*          உயர் கல்வியை உலகத்தரத்திற்கு ஈடாக அமைக்கப்படும்.

*          காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2006இல் கொண்டுவந்த கல்வி உரிமைச் சட்டத்தின் பயன்கள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும். தனியார் பள்ளிகளில் ஏழை எளிய மாணவர்களுக்கான 25 சதவிகிதம் ஒதுக்கீடு தமிழகத்தில் முழுமையாக நிறைவேற்றப்படுவதில்லை. அதை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

*          தமிழகத்தில் சீரழிந்து வரும் கல்வித்துறை சீரமைக்கப்படும். அனைத்து மாவட்டங்களிலும் தரமான நூலகங்கள் அமைக்கப்படும். மாணவர்களுக்குத் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும்.

*          ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும்.

*          IIT, IIM போன்ற மத்திய கல்வி நிறுவனங்களுக்கு ஈடாகத் தமிழகத்தில் தரம் உயர்ந்த கல்வி நிறுவனங்கள் அமைக்கப்படும்.

*          தமிழக மாணவர்கள் அனைவரும் ஒரு கட்டாயப் பாடமாகத் தமிழ்மொழியைக் கற்க அரசாணை பிறப்பிக்கப்படும்.

*          விளையாட்டிற்கு முக்கியத்துவம் வழங்கப்படும்.

*          மதிய உணவுத் திட்டம் மற்றும் அங்கன்வாடி ஏழைக் குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்ற முட்டை, வாழைப்பழத்துடன் பாலும் சேர்த்து வழங்கப்படும்.

  1. தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவோம்

*          கடந்த சில வருடங்களாக அ.தி.மு.க. ஆட்சியாளர்களின் தவறான அணுகுமுறை காரணமாகத் தொழில் வளர்ச்சி மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.   இந்நிலையில் இருந்து தமிழகத்தை மீட்டு தொழில் வளர்ச்சி ஏற்பட புதிய தொழில் கொள்கை வகுக்கப்படும்.

*          தொழில் தொடங்க ஒற்றைச்சாரள முறையில் அனுமதி வழங்கப்படும். சிறு, குறு தொழில்கள் சந்திக்கும் பிரச்சினைகளைப் போக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

  1. மின் உற்பத்தியைப் பெருக்குவோம்

*          தமிழகத்தில் தொடர்ந்து மின் பற்றாக்குறை நிலவி வருவதால், தொழில் வளர்ச்சி பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் உற்பத்தி செய்ய முதலீடுகள் ஊக்கப்படுத்தப்படும்.  மின் உற்பத்தி செய்ய புதிய மின் திட்டங்கள் தொடங்கப்படும்.   காற்றாலைகள், சூரியசக்தி வாயிலாக மின் உற்பத்தி செய்ய திட்டங்கள் ஊக்கப்படுத்தப்படும். குறிப்பாக, ஓராண்டில் ஒன்பது மாதத்தில் உற்பத்தி செய்ய வாய்ப்புள்ள சூரிய மின்சக்திக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

  1. அரசு நிர்வாகத்தில் சீர்திருத்தம்

*          தமிழகத்தில் சில ஆண்டுகளாக அரசு நிர்வாகத்தில் ஆளுங்கட்சியினரின் தலையீட்டின் காரணமாக நிர்வாகம் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருகிறது. அரசு நிர்வாகம் வெளிப்படைத்தன்மையோடு செயல்படுவதற்குச் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படும்.

*          பொதுமக்களின் மனுக்கள்மீது 15 தினங்களுக்குள் பதில் அளிப்பது கட்டாயமாக்கப்படும். அரசு சேவைகள் உரிய காலத்தில் கிடைக்க சேவை உரிமைச் சட்டம்  நிறைவேற்றப்படும்.

  1. உள்ளாட்சியில் நல்லாட்சி அமைத்திடுவோம்

*          முன்னாள் பாரத பிரதமர் ராஜிவ்காந்தி கொண்டுவந்த பஞ்சாயத்துராஜ் சட்டத்தின் அனைத்து அம்சங்களையும் செயலுக்குக் கொண்டுவர தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்படும். தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் அதிக அதிகாரமோ, நிதி ஒதுக்கீடோ இல்லாமல் அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இது மக்கள் பங்கேற்கும் ஜனநாயகத்திற்கு விரோதமாக உள்ளது.

*          தன்னாட்சியுடன் கூடிய பஞ்சாயத்து அமைப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது உள்ள ஆளும்கட்சி கட்டுப்பாட்டில் இருந்து உள்ளாட்சி அமைப்புகள் விடுவிக்கப்பட்டு சுதந்திரமாகச் செயல்பட வழிவகுக்கப்படும்.

*          உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல் சுதந்திரமாகச் செயல்பட தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் சீரமைக்கப்படும்.

*          பெண்களுக்கான இடஒதுக்கீடு 33 சதவிகித்தில் இருந்து 50 சதவிகிதமாக உயர்த்தப்படும்.

  1. இயற்கை வளங்களைப் பாதுகாப்போம்

*          தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தபிறகு இயற்கை வளங்கள் தனியாருக்குத் தாரைவார்க்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. இதை ஐ.ஏ.எஸ். உயர் அதிகாரி சகாயம் தலைமையிலான குழு உறுதி செய்துள்ளது.  இந்நிலையிலிருந்து மீட்டெடுக்க இயற்கை வளங்களைப் பயன்படுத்துவதை வெளிப்படைத்தன்மையான புதிய கொள்கை வகுக்கப்படும்.

  1. நதிநீர்ப் பிரச்சினைகளைத் தீர்ப்போம்

*          காவிரி, முல்லை பெரியாறு, பாலாறு ஆகியவற்றில் நமது உரிமைகளைப் பறிக்கிற வகையில்   அண்டை மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.   இந்நிலையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட தமிழக காங்கிரஸ் கட்சி அனைத்து நிலைகளிலும் குரல் கொடுத்து போராடும்.

  1. சமூக நீதியைப் பாதுகாப்போம்

*          மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27 சதவிகித இடஒதுக்கீடு  வழங்கும்  வகையில்  மத்திய காங்கிரஸ் அரசு 2006இல்  கொண்டுவந்த சட்டத்தின் பயன்களை அனைவருக்கும் கிடைக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

*          தனியார் துறையில் இடஒதுக்கீட்டிற்கு வழிவகை செய்யப்படும்.

  1. பொது சுகாதாரக் கொள்கை

*          பொது சுகாதாரத் துறைக்கான நிதி ஒதுக்கீடுகள் உயர்த்தப்படும். மருத்துவமனைகளில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் அதிகரிக்கப்படும்.

  1. பொது விநியோகத் திட்டத்தைச் சீரமைப்போம்

*          குடும்ப அட்டை கோருபவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் மாதந்தோறும் வழங்கவேண்டிய அனைத்துப் பொருள்களும் ஒரே நாளில் கிடைக்க வழிவகை செய்யப்படும்.

  1. அரசு ஊழியர் நலன்

*          மத்திய அரசின் ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரையின்படி ஊதியத்தைத் தமிழக அரசு ஊழியர்களுக்குக் குறைபாடு இல்லாமல் ஊதியம் வழங்கப்படும். மத்திய அரசுக்கு இணையான சலுகைகள் தமிழக அரசு ஊழியர்களுக்கும் கிடைக்க ஆவன செய்யப்படும்.

*          சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள், சமையல் உதவியாளர்கள், குடிநீர் தேக்கத்தொட்டி பணியாளர்கள், அரசுத்துறைகளில் பணிபுரியும் தொகுப்பூதிய, குறைந்த காலமுறை ஊதிய பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டு அரசு ஊழியர்களுக்கான ஊதியம் மற்றும் சலுகைகள் வழங்கப்படும்.

*          அரசு ஊழியர் நல வாரியம், காவலர் நல வாரியம் அமைக்கப்படும்.

  1. சிறுபான்மையினர் நலன் காக்கப்படும்

*          சிறுபான்மையினரின் மதம் சார்ந்த சொத்துக்களைப் பாதுகாக்கவும், பராமரிக்கவும்,  சீரமைக்கவும் உரிய உதவிகள் செய்துதரப்படும்.

*          சிறுபான்மையினரின் மத ரீதியான ஆன்மிகப் பயணங்களுக்கு உரிய உதவிகள் செய்துதரப்படும்.

  1. தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் நலன்

*          தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்குச் சட்டப்படி ஒதுக்கவேண்டிய பின்னடைவு காலி பணியிடங்களை (டீயஉமடழப ழக எயஉயnஉநைள) சிறப்புத் தேர்வு மூலமாக நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

*          இந்தியாவில் 12 மாநிலங்களில் தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் நல ஆணையங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. அதேபோல தமிழ்நாட்டிலும் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

*          தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் மக்களுக்குத் தனியார் துறையில் இடஒதுக்கீடு வழங்க ஆவன செய்யப்படும்.

*          ஆங்கிலேயர் காலத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலம் சட்டவிரோதமாக மற்ற சமூகத்தினரால் அபகரிக்கப்பட்டு உடமை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதை ரத்துசெய்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

*          தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் சுய வேலைவாய்ப்பை வழங்க மானியங்களை வழங்கும் தாட்கோ நிறுவனம் கடனையும் சேர்த்து வழங்க „தாட்கோ வங்கி… தொடங்க ஆவன செய்யப்படும்.

*          தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்களுக்கு நிதிநிலை அறிக்கையில் எவ்வளவு ஒதுக்கப்பட்டதோ அந்த நிதியை வேறு எந்த வகையிலும் செலவழித்தால் தண்டனைக்குரிய குற்றம் என்று ஆந்திர மாநிலக் காங்கிரஸ் அரசு ஏற்கெனவே சட்டம் நிறைவேற்றியது. அதேபோல தமிழகத்திலும் சட்டம் நிறைவேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

*          பழங்குடியினர் உரிமைகளைக் காக்க, மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு 2006இல் நிறைவேற்றிய பழங்குடியினர் வன உரிமைச்சட்டத்தின்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

*          ஒவ்வொரு கிராமத்திலும் வாழ்கிற தலித் மக்கள் சுடுகாட்டிற்குச் செல்கிற பாதை அமைக்க உரிய  நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

*          தாழ்த்தப்பட்ட மக்கள் குடியிருக்கும் பகுதிகளைச் சேரி, காலனி என்று இழிவாகத் தனிமைப்படுத்தி அழைப்பதைச் சட்டப்படி தடைசெய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

  1. மீனவர் பிரச்சினைகளும் தீர்வுகளும்

*          தமிழகத்தில் உள்ள மீனவர் சமுதாயத்தினரைப் பழங்குடியினரின் பட்டியலில் சேர்க்க ஆவன செய்யப்படும்.

*          மீன்பிடி தடை காலத்தில் ஒரு நாளைக்கு ரூ.150 வீதம் 40 நாள்களுக்கு ரூ.6,500 வழங்கப்படும்.

*          ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு ஊக்கப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதற்கு ஏற்ற வகையில் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மூக்கையூர் மீன்பிடி துறைமுகம் உருவாக்கப்படும். குளச்சல் துறைமுகத்தை இணையம் பகுதிக்குக் கொண்டுசெல்ல பா.ஜ.க.வினர் முயற்சி செய்வதை மீனவச் சமுதாயத்தினர் கடுமையாக எதிர்க்கின்றனர். திட்டமிட்டபடி குளச்சல் வர்த்தகத் துறைமுகம் அமைய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

  1. தொழிலாளர் நலன்

*          அனைத்து வகை தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.15,000 கிடைக்க ஆவன செய்யப்படும்.

*          கல் உடைக்கும் தொழிலாளர்கள் நலன் பாதுகாக்கப்படும்.

*          தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம் சீர்திருத்தம் செய்யப்படும்.

*          உப்பள தொழிலாளர்களுக்கு மழை காலங்களில் மாதம் ரூ.3,000  வாழ்வூதியமாகவும்,  வீடு அற்றோருக்கு இலவச வீடுகளும் நியாயமான கூலி கிடைக்க ஆவன செய்யப்படும்.

  1. அமைப்புச்சாரா தொழிலாளர் நலன்

*          அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கென அமைக்கப்பட்ட 17 நல வாரியங்களும் ஜெயலலிதா அரசால் முடக்கப்பட்டு செயலிழந்த நிலையில் உள்ளன. இதைச் செயல்படுத்த ஆவன செய்யபப்படும்.

*          விபத்தில் இறக்கும் அனைத்துத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கும் ரூ.5 லட்சம் நஷ்டஈடு வழங்கப்படும். விபத்தில் சிக்கியவர்களுக்கு இலவச சிகிச்சை வழங்கப்படும்.

*          ஆட்டோ ரிக்ஷா மற்றும் வாடகை ஊர்தி ஓட்டுநர்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிபடுத்தும் வகையில் சொந்த வாகனம் வாங்க குறைந்த வட்டியில் கடன் வழங்க ஆவன செய்யப்படும். வாடகை முறைகள் ஒழுங்குபடுத்தப்படும்.

  1. நெசவாளர் நலன்

*          விவசாயிகளுக்கு வழங்குவதைப்போல நெசவாளர்களுக்கும் இலவச மின்சாரம் வழங்க ஆவன செய்யப்படும்.

*          நெசவாளர்கள் உற்பத்தி செய்த பொருள்களை விற்க கைத்தறி சந்தை அமைக்கப்படும்.

*          நெசவாளர்கள் பயன்பட நெசவாளர் கூட்டுறவு வங்கி அமைக்கப்படும்.

  1. மாற்றுத்திறனாளிகள் நலன்

*          மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் சீரமைக்கப்படும்.

*          மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 3 சதவிகித இடஒதுக்கீடு அமல்படுத்த ஆவன செய்யப்படும்.

*          வேலைவாய்ப்பு இல்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர தொகை ரூ.1,500 வழங்கப்படும்.

  1. சிறுபான்மையினர் நலன்

*          பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம்பெற்றுள்ள முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 3.5 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்குவதில் நிலவுகிற குறைபாடுகள் களையப்படும்.

*          சிறுபான்மையினரின் மதம் சார்ந்த சொத்துக்கள் பாதுகாக்கப்படும்.

  1. முதியோர் நலன்

*          முதியோர் உதவித்தொகை குறைந்தபட்ச ரூ.2,000ஆக உயர்த்தப்படும். அனைத்து முதியோர்களுக்கும் பேருந்தில் இலவசக் கட்டணச் சலுகை வழங்கப்படும். முதியோர் மதிய உணவுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

  1. மகளிர் நலன்

*          நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் 33 சதவிகித இடஒதுக்கீடு வழங்குகின்ற வகையில் அரசியல் சட்டம் திருத்தம் செய்யப்படும்.

  1. திருநங்கையர் நலன்

*          திருநங்கையருக்கு அரசுப் பணிகளில் 2 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்படும்.

  1. இந்துசமய அறநிலையத் துறை

*          திருக்கோயில் சொத்துக்களைப் பாதுகாக்கவும், பராமரிக்கவும் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்படும்.

  1. கூவம் சீரமைப்புத் திட்டம்

*          கூவம்  சீரமைப்புத் திட்டம் நிறைவேற நடவடிக்கை எடுக்கப்படும்.

  1. மெட்ரோ ரெயில் திட்டத்தை விரிவுபடுத்துவோம்

*          காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சிசெய்த காலத்தில் ரூபாய் 14 ஆயிரம் கோடி முதலீட்டில் சென்னை மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

*          மெட்ரோ ரயில் திட்டத்தை கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய நகரங்களுக்கு விரிவுபடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

  1. மரபு சாரா எரிசக்தியை ஊக்கப்படுத்துவோம்

*          சூரிய மின்சக்தி உற்பத்தியை ஊக்குவிக்க தெளிவான கொள்கை வகுக்கப்படும்.  காற்றாலை மின் உற்பத்தியாளருக்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

  1. காஞ்சிபுரம் பட்டுப் பூங்கா

*          கடந்த மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசில் காஞ்சிபுரத்தை அடுத்த கீழ்க்கதிர்பூர் கிராமத்தில் 75 ஏக்கர் பரப்பளவில்  ரூபாய் 266 கோடி மதிப்பில் பட்டுப்பூங்கா அமைய நடவடிக்கை எடுக்கப்பட்டது.  இப்பூங்கா விரைவில் அமைய நடவடிக்கை எடுக்கப்படும்.

  1. நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்கு மணி மண்டபம்

*          நடிகர் திலகம் சிவாஜி பிறந்தநாளான அக்டோபர் 1ஆம் தேதியைக் கலை எழுச்சி நாளாகக் கொண்டாட ஆவன செய்யப்படும்.  சிவாஜிக்கு மணி மண்டபம் கட்டப்படும்.

*          சென்னைக் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள சிவாஜி சிலையை நீதிமன்ற ஆணையின்படி காந்தியடிகள் சிலைக்கும் பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கும் இடையில் அமைக்க ஆவன செய்யப்படும்.

  1. சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்புதல்

*          ஆந்திரம், மகாராஷ்டிரா, பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில் சட்;டப்பேரவை நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.  ஆனால், தமிழகத்தில் சட்டமன்றம் துதிபாடும் மன்றமாக ஜெயலலிதாவால் மாற்றப்பட்டதால்  சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்ப அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் பல தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

*          கடந்த காலங்களில் தமிழக சட்டமன்ற விவாதங்களில் கரைபுரண்டோடிய கருத்து மோதல்களை நாளேடுகளில் படித்து அறிந்ததைப்போல, தொலைக்காட்சிகளின் மூலமாக நேரடி ஒளிபரப்பு செய்து ஜனநாயகத்தைத் தழைக்கச்செய்ய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

  1. தமிழ் வளர்ச்சி

*          தமிழகத்தில் அனைத்துப் பள்ளிக்கூடங்களிலும் தமிழை ஒரு பாடமாக மாணவர்கள் கட்டாயம் கற்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

*          நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாகத் தமிழ்மொழியைக் கொண்டுவரப்படும்.

*          வரலாற்றுச் சிறப்புமிக்க மாமல்லபுரத்தில் சிற்பக் கலை வளர்சியை மேம்படுத்தும் வகையில் சிற்பக் கலை பூங்கா அமைக்கப்படும்.

*          உலகத்தில் சிறந்த பல்கலைக்கழகமாக 380 ஆண்டுகளாக இயங்கிவரும் ஹார்வேர்ட் பல்கலைக் கழகத்தில் தமிழுக்கு என்று ஓர் இருக்கை (ஊhயசை) உருவாக்கப்படும்.

  1. நதிகளை இணைப்போம்

*          விவசாயத்திற்கு நீர்ப்பாசனத்தை வழங்குகின்ற வகையில் பல்வேறு திட்டங்கள் தொடங்க ஆவன செய்யப்படும்.  அதில் குறிப்பாக, அத்திக்கடவு - அவிநாசி திட்டம்,  செண்பகவல்லி அருவி நீர்த்தேக்கத் திட்;டம், எலுமிச்சை ஆறு அணை திட்டம்,  நொய்யல் நதி மீட்பு திட்டம், தாமிரபரணி நீர் திட்டம், தாமிரபரணி, நம்பியாறு, கருமேனியாறு, வெள்ளைநீர் கால்வாய் திட்டம், பம்பா, அச்சன்கோயில் வைப்பாறு இணைப்புத் திட்டம் ஆகியவற்றிற்குக் காலவரையறை நிர்ணயம் செய்து நிறைவேற்றப்படும்.

  1. வேலைவாய்ப்பைப் பெருக்குவோம்

*          கடந்த ஆகஸ்ட் 2015 வரை தமிழகம் முழுவதும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 92 லட்சத்தைத் தாண்டியிருக்கிறது. 2011இல் 67 லட்சமாக இருந்தது, தற்போது 92 லட்சமாக உயர்ந்திருக்கிறது.  இதுதான் அ.தி.மு.க. ஆட்சியின் சாதனை.

*          வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்த அனைவருக்கும் ஐந்தாண்டுகளுக்குள் வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

  1. இலங்கைத் தமிழர் உரிமை காத்திடுவோம்

*          முன்னாள் பாரதப் பிரதமர் ராஜிவ்காந்தி உடன்படிக்கையின் அடிப்படையில் உருவான 13வது அரசமைப்புச் சட்டத்திருத்தப்படி இலங்கைத் தமிழர்களுக்குச் சமஉரிமை,  சமவாய்ப்பு கிடைக்க ஆவன செய்வோம்.

*          இலங்கைத் தமிழர்களுக்குக் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு நிறைவேற்றிய பல்வேறு நலத் திட்டடங்கள் மீண்டும் தொடர ஆவன செய்வோம்.

  1. தகவல் அறியும் ஆணையத்தைச் சீரமைப்போம்

*          அரசு நிர்வாகம் குறித்து அனைத்துத் தகவல்களையும் ஒவ்வொரு குடிமகனும் அறிந்துகொள்ளவே தகவல் அறியும் உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதனடிப்படையில் அமைக்கப்பட்ட தமிழக தகவல் அறியும் ஆணையம் அ.தி.மு.க. அரசின் கைப்பாவையாகச் செயல்பட்டு வருகிறது. இந்நிலையைப் போக்கி தகவல் அறியும் ஆணையத்தைச் சீரமைக்க ஆவன செய்வோம்.

  1. சேதுசமுத்திரத் திட்டம்

*          தமிழக மக்களின் நீண்டகால கனவான சேதுசமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற ஆவன செய்வோம்.

*          அ.தி.மு.க. ஆட்சியாளர்களால் முடக்கி வைக்கப்பட்டுள்ள சென்னைத் துறைமுகம் -மதுரவாயல் 19 கி.மீ. உயர்மட்டச் சாலைத் திட்டத்தை மீண்டும் தொடங்க உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

  1. இயற்கை பேரிடர் மேலாண்மையை உறுதிசெய்வோம்

*          காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2005இல் நிறைவேற்றிய தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் அடிப்படையில் தமிழகத்தில் பேரிடர் மேலாண்மை ஆணையத்தை அமைக்க அ.தி.மு.க. அரசு தொடர்ந்து காலதாமதம் செய்தது.

*          பிறகு, மாநிலப் பேரிடர் மேலாண்மை அமைக்கப்பட்டாலும் அது செயலற்ற நிலையில் முடக்கப்பட்டு வந்தது. இந்நிலையிலிருந்து மாநிலப் பேரிடர் ஆணையத்தைச் செயலுக்குக் கொண்டுவந்து மாவட்ட, வட்டாரந்தோறும் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின்; பிரிவுகளைத் தொடங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

  1. கூட்டுறவு தேர்தல்

*          கூட்டுறவு தேர்தல்கள் பாரபட்சமுறையில் நேர்மையாக நடக்க உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

  1. பொது நூலகத்துறை

*          அனைத்து  மாநிலங்களுக்கும்  முன்னோடியாகத் திகழ்ந்த தமிழ்நாடு நூலகத்துறை கடந்த சில வருடங்களாகச் சீரழிந்து செயல்படாமல் முடங்கிக் கிடக்கின்றன. இதைச் சீரமைத்து செம்மையாகச் செயல்பட உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

*          அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தைச் செயல்படவிடாமல் முடக்கப்பட்ட நிலையிலிருந்து அதனை மீட்டு, சர்வதேச தரத்தில் சீரமைக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

  1. தமிழகத்தில் மீண்டும் மேலவை

*          தமிழகத்தில் மீண்டும் மேலவை கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க ஆவன செய்வோம். இதில் திருநங்கைகள் மற்றும் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கிப் பிரதிநிதித்துவம் வழங்கப்படும்.

முழு தேர்தல் அறிக்கையை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *