தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் முன்னாள் பாரத பிரதமர், பாரத ரத்னா அன்னை இந்திரா காந்தி அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் தொடக்க விழா நேற்று (19.11.2016) தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் திரு.என்.ரங்கபாஷ்யம், திரு.விஆர்.சிவராமன், திரு.பீ.ஜெம்ஸ், திரு.ஏ.ஜி.சிதம்பரம், திரு.ஆர்.சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் திரு.கராத்தே ஆர்.தியாகராஜன் வரவேற்புரை நிகழ்த்தினார்;. இவ்விழாவில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு.கே.ஆர்.ராமசாமி, முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் திரு.குமரி அனந்தன், திரு.கே.வீ.தங்கபாலு, திரு.எம்.கிருஷ்ணசாமி, முன்னாள் மத்திய அமைச்சர்; டாக்டர் இ.எம்.சுதர்சன நாச்சியப்பன், முன்னாள் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் திருமதி.டி.யசோதா, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
அன்னை இந்திரா காந்தி நூற்றாண்டு தொடக்க விழாவினையொட்டி ‘அன்னை இந்திரா காந்தியும் – இந்தியாவின் வளர்ச்சியும்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் திராவிட முன்னேற்ற கழக அமைபுச் செயலாளார் திரு.டி.கே.எஸ்.இளங்கோவன், MP, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தமிழ் மாநில தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், விடுதலைவச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு.தொல்.திருமாவளவன் ஆகியயோர் பங்கேற்றார்கள். வடசென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ராயபுரம் ஆர்.மனோ நன்றியுரை நிகழ்த்தினார்.
முன்னதாக சந்தோஷிகா அகாடமி பைன் ஆர்ட்ஸ் குழுவினரின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.