காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு நிகழ்ச்சி மற்றும் பொதுக்கூட்டம்

தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி காங்கிரஸ் தேர்தல் அறிக்கை நிகழ்ச்சி நாளை (27.4.2016) புதன்கிழமை காலை 11 மணியளவில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளர் திரு.முகல் வாஸ்னிக் அவர்கள் வெளியிட முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர் இ.எம்.சுதர்சன நாச்சியப்பன் அவர்கள் பெற்றுக் கொள்கிறார். இந்நிகழ்வில் தேசிய செய்தித் தொடர்பாளர் திருமதி. குஷ்பூ சுந்தர் மற்றும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு உறுப்பினர்கள் மற்றும் முன்னணித் தலைவர் பங்கேற்க இருக்கிறார்கள்.

தமிழக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நாளை (27.4.2016) மாலை 6 மணியளவில் வடசென்னை அஜிஸ் முகமது கௌஸ் தெரு டி.பி.கே.தெரு சந்திப்பில் (பாரத் தியேட்டர் ரவுண்டானா அருகில்) நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன், தேசிய செய்தித் தொடர்பாளர் திருமதி. குஷ்பூ சுந்தர், பொருளாளர் டாக்டர் நாசே ராமச்சந்திரன், திரு. உ.பலராமன், திரு.ஆ.கோபண்ணா, திரு. எம்.ஜோதி ஆகியோர் பங்கேற்க உள்ளார்கள். இக்கூட்டத்தில் ராயபுரம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திரு. ஆர். மனோ அவர்களை ஆதரித்து பிரச்சாரம் நடைபெற உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *