மிலாது நபி திருநாள் : தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் விடுக்கும் வாழ்த்துச் செய்தி – 23.12.2015

????????????????????????????????????????????????????????????

மக்களிடையே சகோதர உணர்வு, சமூக சீர்திருத்தம், சேவை மனப்பான்மை ஆகியவற்றை நிலைநாட்டி உண்மையின் மறுவடிவமாக விளங்கிய நபிகள் நாயகம் அவர்களின் பிறந்தநாள் விழாவை உலகத்தில் உள்ள இஸ்லாமிய மக்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு கொண்டாடுகிற நாளாகும். தமக்கு துன்பம் விளைவிப்பவர்களையும் மன்னிக்கும் பண்பு கொண்ட மனித சமுதாயம் உருவாக வேண்டும் என்கிற  நோக்கத்திற்காக வாழ்ந்தவர் நபிகள் நாயகம் அவர்கள்.

உலகத்தில் உள்ள இஸ்லாமியர்கள் பயங்கரவாத தாக்குதல் என்கிற போர்வையில் உலக வல்லரசுகளால் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகி வருகின்றனர். ஆனால் இந்திய நாட்டு மக்களிடையே காலம் காலமாக நிலவி வருகிற சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கிற வகையில் இந்துத்வா சக்திகள் கடுமையான தாக்குதலை சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக தொடுத்து வருகிறார்கள். இத்தகைய சக்திகளை வீழ்த்துகிற வல்லமையையும்இ ஆற்றலையும் இஸ்லாமிய பெருமக்கள் பெற வேண்டும் என்பதே நபிகள் நாயகம் பிறந்தநாளில் நாம் விடுக்கிற செய்தியாகும்.

இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *