ஊழல் குற்றச்சாட்டு – 1 : செயற்பொறியாளர் எஸ்.முத்துக்குமாரசாமி தற்கொலை

தமிழக வேளாண் பொறியியல் துறையின் திருநெல்வேலி மாவட்ட செயற்பொறியாளர் எஸ்.முத்துக்குமாரசாமி கடந்த 20.02.2015  அன்று தச்சநல்லூரில் ஓடும் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். நேர்மைக்கும் கடமைக்கும் பெயர்பெற்றவரான முத்துக்குமாரசாமியின் தற்கொலை முடிவில், தமிழக வேளாண்துறை  அமைச்சர் அக்ரி எஸ்.கிருஷ்ணமூர்த்தி சம்பந்தப்பட்டிருக்கிறார் என்ற தகவல் 23.02.2015  அன்றே வெளியிடப்பட்டது. திருநெல்வேலி மாவட்ட வேளாண் பொறியியல் துறைக்கு 7 ஓட்டுநர்களைப் பணிக்குத் தேர்வுசெய்ய மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலிருந்து மூப்பு பட்டியல்  பெற்று அதிலிருந்து தேர்வுசெய்து,  மாவட்ட  ஆட்சித்தலைவர் மூலமாகப் பணி […]

ஊழல் குற்றச்சாட்டு – 2 : மின் கொள்முதலில் ஊழல்

தமிழகத்தில் மின் உற்பத்தியை அதிகரிக்கவேண்டிய முதன்மைப் பொறுப்பு தமிழக அரசுக்கு இருக்கிறது. தமிழகத்தின் மொத்த மின்தேவை 13 ஆயிரம் மெகாவாட். தற்போது 10 ஆயிரத்து 500 மெகாவாட்தான் உற்பத்தி  செய்யப்படுகிறது. மே, ஜூன் மாதங்களில் மின் தேவை 15 ஆயிரம் மெகாவாட்டாக அதிகரிக்கக் கூடும். இதனால் பற்றாக்குறை 3,500 மெகாவாட்டாக அதிகரிக்கும். ‘‘நாங்கள் ஆட்சிக்கு  வந்தால்  ஆறே மாதங்களில் மின்வெட்டை நீக்குவோம்’’ என்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உரத்த குரலில் முழங்கியதை எவரும் மறந்திருக்க முடியாது.  ஆனால், […]

ஊழல் குற்றச்சாட்டு – 3 : கோகோ கோலா நிறுவனத்திற்கு நிலம் ஒதுக்கியதில் ஊழல்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை  சிப்காட் தொழில் வளாகத்தில்  பன்னாட்டு நிறுவனமான  கோகோ கோலா குளிர்பான  தயாரிப்புக்காக ரூ.500   கோடி முதலீட்டில் தொடங்குவதற்குத் தமிழக அரசு 72 ஏக்கர் நிலத்தை 99 ஆண்டுகால குத்தகைக்கு ஏக்கர்  ஒரு ரூபாய்க்குத் தாரைவார்த்தது.  ஒரு நாளைக்கு 40 லட்சம் லிட்டர் தண்ணீரைக் கீழ்பவானி ஆற்றின் மூலமாக வழங்குவதற்கும் ஒப்பந்தம் போடப்பட்டது.  இந்த   முடிவை எதிர்த்து அந்தப் பகுதியில் கடையடைப்புப்  போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று  வந்தன. இந்த   ஒப்பந்தம்  நிறைவேற்றப்பட்டால், 85 கிராமங்கள் […]

ஊழல் குற்றச்சாட்டு – 4 : உயர்கல்வித் துறையில் ஊழல்

அ.தி.மு.க. ஆட்சியில் கல்வித்துறையில் ஊழல் நீக்கமற  நிறைந்திருக்கிறது. எதில்  ஊழல் செய்தாலும், கல்வித்துறையில் ஊழல் செய்வதை  யாருமே மன்னிக்க மாட்டார்கள். பல்கலைக்கழக  துணைவேந்தர்  பதவிகள் ஆட்சியாளர்களால் ஏலம்போட்டு  விற்கப்படுகின்றன. துணைவேந்தர் பதவிக்கு ரூ.5 கோடி  முதல்  ரூ.20 கோடி  வரை லஞ்சம் பெறப்படுகிறது. பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் ரூ.20 லட்சம், துணைப் பேராசிரியர்கள் ரூ.10  லட்சம், விரிவுரையாளர்கள் ரூ.8 லட்சம் என லஞ்சக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு, வசூல்   வேட்டை நடத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகப்  பதவிகள் அனைத்தும் […]

ஊழல் குற்றச்சாட்டு – 5 : பள்ளிக்கல்வித் துறையில் ஊழல்

இந்தியாவிலேயே கல்வித்துறையில்  முன்னோடி மாநிலமாகத் தமிழகம் திகழ்ந்து வந்ததற்கு மிகப்பெரிய  பின்னடைவு தற்போதைய  ஆட்சியில் ஏற்பட்டு வருகிறது. தென்மாவட்டங்களில் சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளில் ஆசிரியர் நியமனங்களுக்குக் கல்வி  அதிகாரிகளிடம் முன்அனுமதி பெறவேண்டிய அவசியம் இல்லை. பணி நியமனம்  செய்துவிட்டு, மாவட்டக் கல்வி  அலுவலரிடம்  ஒப்புதல் பெற்றிடவேண்டும். இது காலந்தொட்டு நடக்கும் நடைமுறையாகும். தற்போது 62 ஆசிரியர் பணி  நியமன ஒப்புதலுக்காக இடைநிலை ஆசிரியர் பணிக்கு ரூ.3.5 லட்சம் கொடுத்தால்தான்  ஒப்புதல் வழங்கப்படும் என்று மாவட்டக் கல்வி  அலுவலர்கள் […]

ஊழல் குற்றச்சாட்டு – 6 : ஆவின் பால் கலப்பட ஊழல்

சென்னையிலுள்ள ஆவின் நிறுவனத்துக்கு விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலிருந்து டேங்கர் லாரிகள் மூலம் பால் கொண்டுவரப்படுவது வழக்கம். அப்படிக் கொண்டுவரப்படுகிற பால் திருடப்படுவது குறித்து வெள்ளிமேடுபேட்டை காவல்  நிலைய துணை ஆய்வாளர் கண்டுபிடித்தார். ஆவின் பால் எடுத்துச்செல்லும்  ஒப்பந்தத்தை தீபிகா டிரான்ஸ்போர்ட், சௌத் இந்தியா டிரான்ஸ்போர்ட் ஆகிய நிறுவனங்கள் பெற்றிருந்தன. இந்த  நிறுவனங்களின் உரிமையாளர் வைத்தியநாதனும் அவரது ஊழியர்களும்  பாலில்  கலப்படம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆவின் நிறுவனத்துக்குள் டேங்கர் லாரிகளில் பால் வரும்போது, தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் […]

ஊழல் குற்றச்சாட்டு – 7 : லேப்&டாப் ஊழல்

மாணவர்களுக்கு இலவச லேப்&டாப் வழங்கும் திட்டத்தை அ.தி.மு.க. அரசு செயல்படுத்தி  வருகிறது. லேப்&டாப் ஒன்றுக்கு ரூ.1,500   அதிகம் கொடுத்து வாங்கிக்கொண்டு வருகிறார்கள் என்று ஜிளிமி  கூறுகிறது. மாணவர்களுக்கு வழங்கக் கூடிய லேப்&டாப்பில்  அ.தி.மு.க.  அரசு ஊழல் செய்து வருகிறது. 3900 கோடி  ரூபாய் மடிக்கணினி ஊழல் அ.தி.மு.க.  ஆட்சியில் ரூ.3,900   கோடியில் கொள்முதல்  செய்யப்பட்ட மடிக்கணினிகள் விநியோகத்தில் பயனாளிகள்  பற்றிய விளக்கப்  பட்டியல் எதுவுமே இல்லாத நிலையில் அரசு நிர்வாகம் நடைபெற்றிருக்கிறது.  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் ‘தி  இந்து’   […]

ஊழல் குற்றச்சாட்டு – 8 : நெடுஞ்சாலைத்துறை ஊழல்

தமிழக நெடுஞ்சாலைத் துறையால் மொத்தம் 57,043 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில் முதல்  கட்டமாக, பொள்ளாச்சி கோட்டத்திற்கு உட்பட்ட  377 கிலோ மீட்டர் சாலையை ஐந்தாண்டுகளுக்குப் பராமரிக்க 275 கோடி  ரூபாய் ஒதுக்கப்பட்டு, அருப்புக்கோட்டையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் பணி ஒப்படைக்கப்பட்டுவிட்டது. இந்தப் பராமரிப்புப் பணிகளை இதுவரை சாலைப் பணியாளர்கள்தான்  செய்து வந்தார்கள். இவர்களே இந்தப் பணியைத் தொடர்ந்து செய்தால், ஏறத்தாழ 70 கோடி ரூபாய்தான் செலவாகும்.  இதனால் அரசுக்கு 200 கோடி  […]

ஊழல் குற்றச்சாட்டு – 9 : பாதாள சாக்கடை ஊழல்

நகரங்களில் மக்கள்தொகை நாளுக்கு நாள் அதிகரித்து  வருகிற சூழலில் அதை எதிர்கொள்ள 50க்கும் மேற்பட்ட நகரங்களில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், ஆட்சியாளர்கள்,  அந்தத் திட்டத்தை முறையாகச் செயல்பட விடுவார்களா? ஊழல் செய்தே பழக்கப்பட்ட அதிகாரவர்க்க அமைச்சர்களின் உதவியோடு கொள்ளையடிக்கத் திட்டம் தீட்டுவது தமிழகத்தில் நடந்துகொண்டிருக்கிற ஒன்றுதான். உதாரணமாக ஈரோடு மாநகராட்சியை  எடுத்துக்கொண்டால் 2008இல் பாதாள சாக்கடை திட்டம் கொண்டுவரப்பட்டது. ஈரோடு முழுவதும் தெருத்தெருவாக 500 சதுர கிலோ மீட்டர் சுற்றளவில் அமையும் இந்த   பாதாள […]

ஊழல் குற்றச்சாட்டு – 10 : ஊழலால் ரத்து செய்யப்பட்ட உடன்குடி மின் திட்டம்

உடன்குடி மின் உற்பத்தித் திட்டத்தைத் தொடங்கப் போவதாக அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா 24.02.2012  அன்று  அறிவிப்பு வெளியிட்டதோடு, அதற்காக டெண்டர் விடும் பணிகள் 2013ஆம் ஆண்டு ஏப்ரலில் தொடங்கப்பட்டு அக்டோபர்  மாதத்தில் தொழில் நுட்பப் புள்ளி ஒப்பந்தம் திறக்கப்பட்டு &    அதற்குப்பின் ஆறுமாத காலத்திற்குள் திறக்கப்படவேண்டிய விலைப்புள்ளி அவ்வாறு திறக்கப்படாமல், காலம்  தாழ்ந்து  2014ஆம் ஆண்டு நவம்பரில் திறக்கப்பட்டது. ஆனால், நான்கு மாதங்கள் கழித்து அந்த டெண்டரையே ரத்துசெய்து மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு வெளியிட்டார். […]