பெருந்தலைவர் காமராசர் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் கல்வி மேம்பாடு

education காமராஜர் தலைமையிலான சென்னை மாகாண காங்கிரஸ் அரசு, கல்வியில் முதலீடு செய்யும் நல்லரசாக உள்ளது.” பேராசிரியர். கால்ஃப்ராய்த் , அமெரிக்க தூதர்
  • வறுமையின் காரணமாக பள்ளிக்கு வருவதை தவிர்க்கக் கூடாது என்பதற்காக, இலவச மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்த பெருந்தலைவர் காமராஜரால், பள்ளிக்கு செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கை பன்மடங்கு உயர்ந்தது.
  • தாழ்த்தப்பட்டோர் குழந்தைகளுக்கு மட்டுமே இலவசக் கல்வி என்ற நிலையை மாற்றி, 100 ரூபாய் வரை சம்பளம் பெறும் பிற சமூகத்தை சேர்ந்த குழந்தைகளும் இலவசமாய் தொடக்கக் கல்வி கற்கும் சட்டத்தை கொண்டு வந்தவர் பெருந்தலைவர் காமராஜர்..
  • கிராமப் பகுதிகளில் ஒரு பள்ளிக்கும் இன்னொரு பள்ளிக்கும் தொலைதூர இடைவெளி இருப்பதை அறிந்த பெருந்தலைவர் காமராஜர், பள்ளி இல்லாத கிராமங்களில் ஓர் ஆசிரியர் பள்ளிகளை திறந்தார். படித்த , வேலையற்ற இளைஞர்களுக்கு அந்தப் பள்ளிகளில் ஆசிரியர் வேலையை வழங்கினார். பள்ளிகள் இருந்த கிராமங்களிலும் , பள்ளியை மேம்படுத்த கூடுதல் ஆசிரியர்களை நியமித்தார். இதனால் ஆயிரக்கணக்கான படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைத்தது.
  • பெருந்தலைவர் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் முதல் ஐந்தாண்டு திட்டக் காலத்தில் 4,267 தொடக்கப் பள்ளிகள் துவக்கப் பட்டு, 6,076 படித்த, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு பணி வழங்கப்பட்டது.
  • பெருந்தலைவர் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் முன்னூறு பேர் கொண்ட கிராமங்களில் எல்லாம் பள்ளிகள் துவங்கப்பட்டு லட்சக் கணக்கானோர் புதிதாக பள்ளிகளில் சேர்க்கப் பட்டு மாபெரும் கல்விப் புரட்சியே நடைபெற்றது.
  • இடைநிலை ஆசிரியர் பயிற்சியைப் பெற்றவர்களுக்கும் பயிற்சி பெறாத , பள்ளி இறுதித் தேர்வை முடித்தவர்களுக்கும் பட்டதாரி இளைஞர்களுக்கும் பள்ளிகளில் வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டது.
  • பெருந்தலைவர் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் பள்ளி மாணவர்களுக்கு இலவசை சீருடை வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது.
  • பெருந்தலைவர் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கல்லூரிகளில் தமிழ் வழிக் கல்வி அறிமுகப் படுத்தப்பட்டது. கோவை அரசு கல்லூரியில் முதலில் அறிமுகப் படுத்தப்பட்டது.
  • 1957-ல் இருந்த 15,800 தொடக்கப் பள்ளிகள் 1962ல் 29000 ஆக உயர்ந்தன. 19 லட்சமாக இருந்த மாணவர்களின் எண்ணிக்கை 40 லட்சமாக உயர்ந்தது. 1955ல் 814 ஆக இருந்த உயர் நிலைப் பள்ளிகள் 1962ல் 1996 ஆக உயர்ந்தன.
  • பள்ளி செல்லும் பிள்ளைகளின் எண்ணிக்கை 1965ல் 4,36,000 ஆக இருந்தது. 1962ல் 9,00,000 லட்சமாக உயர்ந்தது.
  • 1951 ல் ஆண்களுக்கு 27 ஆகவும் பெண்களுக்கு 9 ஆகவும் இருந்த கலைக் கல்லூரிகளின் எண்ணிக்கை, பெருந்தலைவர் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் முறையே 44 மற்றும் 16 ஆக உயர்த்தப் பட்டது.
  • பெருந்தலைவர் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 10ஆக உயர்த்தப்பட்டது. மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 6 ஆக உயர்த்தப்பட்டது. IIT  கல்வி நிறுவனங்களும் துவக்கப்பட்டன.

பெருந்தலைவர் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கல்விக்காக செலவிடப் பட்ட தொகை..

ஆண்டு தொகை ( லட்சங்களில் )
1954 – 55 921.67
1955 – 56 1095.85
1956 – 57 1029.73
1957 – 58 1118.93
1958 – 59 1236.52
1959 – 60 1331.82
1960 – 61 1553.00
1961 – 62 1872.00
1962 – 63 2726.00