பெருந்தலைவர் காமராசர் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் தொழில்துறை வளர்ச்சி

bhel

தமிழ்நாடு, விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட மாநிலமாக இருந்ததால், தொழில் துறையில் பின் தங்கியே இருந்தது. 1955 வரை பெரும் தொழிற்சாலைகள் எதுவும் இல்லை. இயற்கை வள ஆதாரம் பெரும் குறையாகவும் போக்குவரத்து வசதிகள் போதுமான அளவு இல்லாத்துமாக தமிழ்நாடு இருந்தது. போதிய அளவில் மின்சாரமும் இல்லை. இதன் காரணமாக, உரிமம் பெற்ற தொழிற்சாலைகள் கூட எந்தவித முன்னேற்றமும் காண முடியவில்லை.

 பெருந்தலைவர் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டில் செயல்படுத்தப் பட்ட மத்திய அரசு திட்டங்கள்..

 • பெருந்தலைவர் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் சென்னை பெரம்பூரில் ரயில் பெட்டித் தயாரிப்புத் தொழிற்சாலை அமைக்கப்பட்டது. இதில் 7000 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைத்தது.
 • பெருந்தலைவர் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் தானாக அச்சுப் பொறுத்தி செய்தி ஏற்கும் கருவி, டெலி பிரிண்டர் பொறி தொழிற்சாலை கிண்டியில் அமைக்கப்பட்டது.
 • பெருந்தலைவர் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் சினிமா, எக்ஸ்ரே, புகைப்படங்களுக்கான ஃபிலிம்கள் தயாரிப்பதற்கு இந்துஸ்தான் போட்டோ ஃபிலிம் தொழிற்சாலை ஊட்டியில் அமைக்கப்பட்டது.
 • அறுவை சிகிச்சைக்கான கருவிகள் தயாரிக்கும் ஆலை கிண்டியில் தொடங்கப்பட்டது.
 • 750 ஏக்கர் பட்டா நிலத்தையும் 2400 ஏக்கர் புறம்போக்கு நிலத்தையும் அளித்து திருச்சியில் பாரத் மிகுமின் நிறுவனம் ( பெல் ) அமைக்கப்பட்டது. இதன் மூலம் ஆயிரக் கணக்கானோர்க்கு வேலை வாய்ப்பளிக்கப்பட்டது. தொழில் வளர்ச்சியும் பெருகியது.
 • பெருந்தலைவர் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் ஆவடியில் பீரங்கித் தொழிற்சாலை அமைக்கப்பட்டது.
 • சேலத்தில் இரும்பு எஃகுத் தொழிற்சாலை துவங்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

 பெருந்தலைவர் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் தமிழ்நாட்டில் துவங்கப் பட்ட சில முக்கியமான தனியார் தொழிற்சாலைகள்..

 • ஸ்டாண்டர்ட் மோட்டார்ஸ், சென்னை. ஆண்டொன்றுக்கு 6000 கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.
 • அசோக் லேலண்ட், சென்னை. ஆண்டொன்றிற்கு 5400 சேசிஸ் தயாரிக்கும் திறன் கொண்டது.
 • டி.ஐ சைக்கிள்ஸ் ஆஃப் இந்தியா, சென்னை. ஆண்டொன்றிற்கு சுமார் 30 லட்சம் சைக்கிள்களை உற்பத்தி செய்தது.
 • பெருந்தலைவர் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் சிம்சன்ஸ், இந்தியா பிஸ்டன்ஸ், டி.வி.எஸ் மற்றும் திருச்சித் துப்பாக்கித் தொழிற்சாலை போன்ற முக்கிய தொழிற்சாலைகளும் அமைக்கப் பட்டன.
 • 1962ல் சவுத் இந்தியா விஸ்கோஸ் என்ற கூட்டுறவு ஆலை கோவை சிறுமுகையில் நிறுவப்பட்டது.
 • காமராஜர் ஆட்சிக்கு முன் 3 ஆக இருந்த சர்க்கரை ஆலைகளின் எண்ணிக்கை 8 ஆக உயர்த்தப்பட்டது.
 • பல்வேறு இடங்களில் தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட்டன.