தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 04.11.2016

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 04.11.2016 

Thirunavukkarasar at Kamala Theatre Owner VN Chidambaram Ninaivu Anjali Photos

காவிரி நடுவர்மன்றம் இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டப் பிறகு காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக் குழு அமைக்க வேண்டுமென மத்திய பா.ஜ.க. அரசுக்கு உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. ஆனால் முதலில் அமைப்பதாக உறுதி கூறிய தலைமை வழக்கறிஞர் பிறகு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும்படி உத்தரவிட உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரமில்லை, நாடாளுமன்றத்திற்குத் தான் அதிகாரமிருக்கிறது என்று திடீரென மத்திய அரசு தனது நிலையை மாற்றிக் கொண்டது. இதன்மூலம் தமிழகம் மிகப்பெரிய அளவில் வஞ்சிக்கப்பட்டு, துரோகம் இழைக்கப்பட்டிருக்கிறது. இதை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஏற்கனவே உண்ணாவிரத அறப்போராட்டம் நடத்தப்பட்டது.
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்த மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து தமிழகம் தழுவிய மக்கள் சந்திப்பு பரப்புரை பயணத்தை கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் நாளை (5.11.2016) துவங்கி, சென்னை ஆளுநர் மாளிகை நோக்கி 11.11.2016 வரை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பரப்புரை பயணத்தை ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் திரு. பி.ஆர். பாண்டியன் அவர்கள் தலைமையேற்று நடத்துகிறார். இதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வாழ்த்தி வரவேற்கிறது.
தமிழக விவசாயிகளின் ஒருங்கிணைப்புக் குழு நடத்துகிற பரப்புரை பயணத்தில் வரும் விவசாயிகளை தங்களது மாவட்ட எல்லையில் வரவேற்று உரிய முறையில் ஒத்துழைப்பு வழங்கும்படி அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விவசாயிகளின் உரிமைகளை காப்பதற்காக நடைபெறும் இந்த பரப்புரை பயணத்திற்கு காங்கிரஸ் கட்சி முழு ஆதரவை வழங்கும் என தெரிவித்துக் கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *