Picture1தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு..வெ.கி..இளங்கோவன் அவர்களின் யுகாதி வாழ்த்துச் செய்தி 

தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி பண்டிகை தெலுங்கு, கன்னடம் பேசும் மக்களால் மகிழ்ச்சியோடு கொண்டாடப்படுகிறது. மொழியாலும், நாகரீக கலாச்சார பண்பாட்டாலும் என்றென்றும் தமிழர்களோடு இணைபிரியா இணக்கமான தொடர்புடையவர்கள் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள்.

தாய்த் தமிழ் மொழியின் வழி வந்த அம் மொழிகளின் மேன்மையைப்பற்றி மகாகவி பாரதியார் வெகுவாக பாராட்டியுள்ளார். தமிழர்களோடு அவர்கள் பாசத்தால் ஒன்றிணைந்து சகோதர உணர்வோடு பழகி வரும் பாங்கு நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு எடுத்துக்காட்டு. பெருமைக்குரிய தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்களால் கொண்டாடப்படும் யுகாதி பண்டிகை புத்தாண்டு நன்நாளினை சாதி, மத, இன வேறுபாடுகள் மறைந்து அனைத்து மக்களிடையேயும் நல்லிணக்கம் உயர்ந்து நாட்டில் அமைதி, மகிழ்ச்சி, சகோதரத்துவம் மேம்பட வேண்டுமென்று உறுதிகொள்வோம்.

யுகாதி புத்தாண்டை கொண்டாடும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் எனது இனிய நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.


Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *