CLICK HERE FOR PRESS MEET VIDEO

கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, தருமபுரி, நீலகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு காரணமாக பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக வேண்டிய நிலை மக்களுக்கு ஏற்பட்டள்ளது. கடலூர், பண்ருட்டி பகுதிகளில் 20 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்ட வாழையும், கடலூர், சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் 1 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்ட சம்பா பயிரும் சேதமடைந்து விவசாயிகள் பெருத்த நட்டத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மழை வெள்ளத்தால் தமிழகத்தின் பல பகுதிகளில் பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் மட்டும் நேற்றுவரை 22 பேர் பலியாகி உள்ளார்கள். தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினர் உடல்களை மீட்பதற்கு முன்வராத நிலை உள்ளது. பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பிரதான நெடுஞ்சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து முக்கப்பட்டுள்ளது. பருவமழை காலத்தில் பெய்ய வேண்டிய மொத்த அளவை மிஞ்சுகிற வகையில் ஒரே நாளில் 48 செ.மீ. மழை பெய்ததால் கடலூர் மாவட்டமே வெள்ளத்தில் மிதந்து வருகிறது. நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கத்தில் வெள்ளம் புகுந்ததால் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இத்தகைய அசாதாரண வெள்ளச் சூழலை சந்திப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் எடுக்கப்படாத காரணத்தால் வரலாறு காணாத பாதிப்புகளை மக்கள் எதிர்நோக்க வேண்டிய நிலை உள்ளது. ஆறுகள், கால்வாய்கள், நதிகள் தூர் வாரப்படாத காரணத்தால் கனமழையை உள்வாங்க முடியாத நிiயில் வெள்ளம் பெருக்கெடுத்து விவசாயப் பயிர்களையும், குடியிருப்புகளையும் மிகப்பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே உரிய நேரத்தில் மழை பெய்யாத காரணத்தால் இன்னல்களை அனுபவித்த விவசாயிகள் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கினால் மேலும் துன்பம் பல மடங்காக கூடியுள்ளது.

தமிழகத்தின் பல மாவட்டங்கள் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் பல்வேறு பாதிப்புகளை சந்தித்த மக்களுக்கு ஆறுதல் கூறுவதற்கு இதுவரை ஜெயலலிதா எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. குளுகுளு ஊட்டியில் ஓய்வெடுத்து தற்போது திரும்பியுள்ள ஜெயலலிதா சாலை வழியாக பயணம் மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க முடியவில்லை என்றாலும் ஹெலிகாப்டர் மூலமாக பார்ப்பதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. இதையும் ஜெயலலிதா செய்யவில்லை என்று சொன்னால் பாதிக்கப்பட்ட மக்கள் மீது அவருக்கு எந்த அக்கறையும் இல்லை என்பதைத்தான் வெளிப்படுத்துகிறது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் செய்வதற்கு மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் மாநில அரசும் அதற்கான முயற்சிகளில் ஈடுபடாதது மிகுந்த கண்டனத்திற்குரியது. இதன்மூலம் மத்திய – மாநில அரசுகளின் மக்கள் விரோதப் போக்கு குறித்து மக்களிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை போர்க்கால அடிப்படையில் செய்வதற்கு தமிழக அரசு முற்றிலும் தவறிவிட்டது. கடலூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழக அமைச்சர்களையும், அதிகாரிகளையும் பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். இந்நிலையை தமிழக அரசு உணர்ந்து உடனடி நடவடிக்கைகளை எடுக்கவில்லையெனில் பாதிக்கப்பட்ட மக்கள் மிகப்பெரிய போராட்டத்தை நடத்த வேண்டிய நிலை ஏற்படும்.

TNCC President s Statement - 11.11.2015-page-001 TNCC President s Statement - 11.11.2015-page-002


Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *