தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 13.12.2015
சமீபத்தில் கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இருசக்கர வாகனங்களை இலவசமாக பழுது நீக்கி கொடுக்கும் முகாம்கள் சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் 200 க்கும் அதிகமான முகவர்கள் மூலம் சிறப்பு முகாம்கள் 10 நாட்களுக்கு நடத்தப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். நேற்று தொடங்கப்பட்ட இந்த முகாம்களில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் குவிந்துள்ளன. ஆனால், தேவையான சேவை கிடைக்காத காரணத்தால் வாகன உரிமையாளர்களுக்கும், முகாம் நிர்வாகிகளுக்கும் கடும் வாக்குவாதம், சச்சரவுகள் ஏற்பட்டு வருகின்றன.
இலவச பழுது நீக்க முகாம் என்று சொல்லிவிட்டு வெறும் தண்ணீர் மூலம் வாகனங்களை சுத்தம் செய்கிற சேவையைத் தவிர, பழுதான உதிரி பாகங்களை மாற்றுவதற்கு பணம் கேட்பதால் பல்வேறு பிரச்சனைகள் எழுகின்றன. இலவச முகாமில், சேவைதான் இலவசமே தவிர, உதிரி பாகங்கள், ஆயில் செலவு போன்றவற்றிற்கு பணம் கொடுத்தால்தான் செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான பாதிக்கப்பட்ட வாகனங்கள் பழுது பார்க்க முடியாமல் நாள்தோறும் தேங்கி வருகின்றன.
இலவச வாகன பழுது பார்க்கும் முகாம்களின் மூலமாக சரியான தீர்வு ஏற்படாத நிலையில், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பழுது அடைந்ததா? இல்லையா என்பதை வட்டார போக்குவரத்து அதிகாரி சான்றிதழ் அளிப்பதன் அடிப்படையில் இழப்பீடு கொடுக்கிற அளவை தமிழக அரசு முடிவு செய்ய வேண்டும். இதன்படி, முற்றிலும் பழுதடைந்த இருசக்கர வாகனங்களுக்கு ரூ.3000, நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.10,000, ஆட்டோ ரிக்ஷாக்களுக்கு ரூ.5000 என இழப்பீட்டு தொகையை வங்கிக் கணக்குகள் மூலமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும்.
குடியிருப்புப் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புக்கு அரசுதான் பொறுப்பே தவிர, மக்கள் எந்தத் தவறையும் செய்யவில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் வருமானத்தில் வாங்கிய வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தையும் இழந்துள்ளனர். இதை மீண்டும் விலை கொடுத்து வாங்குவதற்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக ரூ 1 இலட்சம் வட்டியில்லா கடன் வழங்க வேண்டும். இதில் 25 சதவிகிதம் மத்திய அரசு மான்யமாக வழங்க வேண்டும். ஏற்பட்ட இழப்புகளை அரசு தான் ஏற்கவேண்டுமே தவிர, மக்கள் மீது சுமையை ஏற்றுவது ஏற்றுக் கொள்ளமுடியாது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கல்வீடுகளில் வசிப்பவர்களுக்கு ரூ.5000, குடிசை வீடுகளில் வசிப்பவர்களுக்கு ரூ.10,000 என்று தமிழக அரசு முடிவு செய்திருப்பது மிக மிக குறைவானதாகும். இதை, முறையே ரூ.10,000 மற்றும் ரூ.20,000 என உயர்த்த வேண்டும். அதை போல தமிழகம் முழுவதும் விவசாய பெருங்குடி மக்கள் இயற்கையின் சீற்றத்தினால் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
நெல் சாகுபடி செய்யப்பட்டு, தண்ணீரில் மூழ்கிய பயிர்களுக்கு ஒரு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25,000, கரும்பு, வாழை பயிர்களுக்கு ரூ.50,000, தென்னை, முந்திரி போன்றவற்றிற்கு ரூ. 1 இலட்சம் என இழப்பீடு வழங்கப்பட வேண்டும். வெள்ளப் பெருக்கினால் மண்மேடாகி பாதிக்கப்பட்ட நிலங்களுக்கு சரிசெய்ய ஏக்கர் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் வழங்கினால்தான் விவசாயிகள் தங்கள் வாழ்க்கையை தொடங்க முடியும். பாதிக்;கப்பட்ட விவசாயிகளின் கடன் தொகை முழுமையும் தள்ளுபடி செய்யப்பட வேண்டும்.
கடந்த சில நாட்களாக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமை செயலகத்திற்கு வரவில்லை என்கிற செய்தி அதிர்ச்சியைத் தருகிறது. போர்க்கால அடிப்படையில் இரவு, பகல் பாராமல் நிர்வாகத்தை முடுக்கி விடவேண்டிய நேரத்தில் ஒரு முதலமைச்சர் செயல்படாமல் இருப்பது மிகுந்த வேதனையை தருகிறது. எனவே,
இச்சூழலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை உரிய முறையில் சென்றடைவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்கவில்லையென்றால் இயற்கை சீற்றத்தினால் ஏற்பட்ட பாதிப்பை விட, மக்கள் சீற்றத்தினால் ஏற்படுகிற பாதிப்பை எதிர்கொள்ளவே முடியாத நிலை ஏற்படும்.
Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in
/homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line
24
Related Articles
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை - 08.11.2016 இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனையாக, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் ஆற்றல்மிகுந்த தலைவராக, மத்திய அமைச்சராக, 16 ஆண்டுகாலம் இந்தியாவின் பிரதமராக என பல்வேறு பொறுப்புகளை...
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை - 12.10.2015 இந்தியாவில் விற்பனையாகும் 80 சதவீத பட்டாசுகளை உற்பத்தி செய்து "குட்டி ஜப்பான்" என்று அழைக்கப்படும் சிவகாசி நகரம் இன்றைக்கு மிகப்பெரிய சோதனையை சந்திக்க வேண்டிய...
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமையகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் அலங்கரிக்கப்பட்ட அவரது திருவுருவப்படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு காங்கிரஸ்...