தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் விடுக்கும் இரங்கல் செய்தி

13418726_527560020764461_2358902974298012748_nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயற்குழு உறுப்பினரும், தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் தலைவருமான திரு. என். நஞ்சப்பன் அவர்கள் திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டதன் காரணமாக இன்று (16.06.2016) காலை மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். நீண்ட காலமாக தொழிற்சங்க இயக்கத்தில் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றி தொழிலாளர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர் நஞ்சப்பன்.

நேர்மை, இனிமை, தூய்மை ஆகியவற்றின் மறு வடிவமாக திகழ்ந்தவர். தொழிலாளர் தோழர்களுடன் இன்முகத்தோடு பழகக்கூடியவர். தமது தொழிற்சங்க பணி மூலம் காங்கரஸ் இயக்கத்தின் வளர்ச்சிக்காக தமது வாழ்நாள் முழுவதும் கடுமையாக உழைத்தவர். தொழிற்சங்கத் தலைவர் என். நஞ்சப்பன் அவர்களுடைய திடீர் மறைவு காங்கிரஸ் இயக்கத்திற்கும், தொழிற்சங்க அமைப்பிற்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

அவரது பிரிவால் வாடுகிற அவருடைய குடும்பத்தாருக்கும் தொழிற்சங்க நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

13428404_527560030764460_5344588207408292351_n

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *