தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 20.10.2016
thirunavukkarasar_11641eதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 20.10.2016
சிவகாசி பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பெண்கள் உட்பட 8 பேர் பலியாகினர் என்றும் அப்பட்டாசு கிடங்கு அருகில் இருந்த ஸ்கேன் மையத்திற்கும் தீ பரவி அங்கிருந்தவர்களில் 25க்கும் மேற்பட்டோரில் 15 பேர் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் செய்திகள் அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைகிறேன்.
இந்த தீ விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு, அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இத்தீ விபத்தில் பலியான குடும்பத்தினருக்கு இழப்பீடாக தலா ரூ.10 லட்சம் தமிழக அரசு வழங்க வேண்டுமென்றும், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி;க்கபட்டோருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிப்பதோடு நிதி உதவியும் வழங்கிட வேண்டுமென்றும் தமிழக அரசை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *