தமிழகம் 700 கி.மீ. கடற்கரையையும், 13 மாவட்டங்களில் மீன்பிடிக்கும் தொழிலை செய்கிற மீனவர்கள் நிரம்பி வாழ்கிற சூழலில் உலக மீனவர்கள் தினம் மிகுந்த முக்கியத்துவத்தை பெறுகிறது. ஆனால் மீனவர்கள் நாள்தோறும் பல்வேறு பிரச்சினைககளை சந்திக்க வேண்டிய அவலநிலை தொடர்ந்து நீடித்து வருகிறது. இவர்களது பிரச்சினைகளுக்கு நாங்கள் ஆட்சிக்கு வந்த ஒருசில நாட்களிலேயே தீர்வு காணப்படும் என்று கூறி ஆட்சியில் அமர்ந்த பா.ஜ.க.வினர் இதுவரை தீர்வுகாண வழிமுறைகள் எதையும் காணவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் மீனவர் நலனை காப்பாற்றுவதற்காக மத்திய அமைச்சரவையில் மீனவர் துறைக்கென தனி அமைச்சரவையை உருவாக்குவோம் என்று ‘கடல் தாமரை மாநாடு” நடத்தி, வாக்குறுதி தந்த பா.ஜ.க.வினர் இதுவரை அதை நிறைவேற்றாததிலிருந்தே மீனவர்கள் நலனில் அவர்களுக்கு அக்கறை இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.

பருவநிலை மாறுதல் காரணமாக ஏற்படுகிற புயல், கடும் மழை ஆகியவற்றினால் தங்கள் வாழ்வாதாரத்தை பாதித்து கொள்கிற நிலைமை நிலவி வருகிறது. இயற்கையின் சீற்றத்திலிருந்து இவர்களை காப்பாற்றுவதற்கு மத்திய – மாநில அரசுகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேபோல இந்திய கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கும் போது இலங்கை ராணுவத்தினரால் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகி வருகிறார்கள். நீண்டகாலமாக இப்பிரச்சினை இருப்பதை கருத்தில் கொண்டு மத்திய காங்கிரஸ் அரசு அதனுடைய அடிப்படை தன்மையை உணர்ந்து அதற்கான தீர்வாக இருநாட்டு மீனவர்கள் நேரடி பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தது. இரண்டுமுறை நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் சுமூகத் தீர்வுகள் காண்பதற்கான அறிகுறிகள் தென்பட்டன. ஆனால் இப்பிரச்சினையை தீர்க்க வேண்டுமென்பதில் அக்கறையில்லாத ஜெயலலிதா அரசு பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைக்காமல் பல்வேறு முட்டுக்கட்டைகளை ஏற்படுத்தின. இதனால் இப்பிரச்சினை இன்றைக்கும் தீர்க்கப்படாமல் இருந்து வருகிறது.

தமிழக மீனவர்களின் அடிப்படை பிரச்சினை என்பது நமது கடல் பகுதியில் மீன்வளம் இல்லை என்பதும், இலங்கை கடற்பகுதியில்தான் மீன்வளம் மிகுதியாக இருக்கிறது என்பதையும் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ஏற்கனவே பேச்சுவார்த்தையின்போது மீன்பிடிக்கிற முறையில்தான் கருத்து வேறுபாடு ஏற்பட்டதேயொழிய மீன்பிடிக்கக் கூடாது என்பதில் அல்ல. இந்தப் பின்னணியில்தான் தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முடியும். எனவே, இதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தி, இப்பிரச்சினையை தீர்வுக்கு கொண்டுவர மத்திய – மாநில அரசுகள் முன்வர வேண்டும்.

இயற்கை சீற்றத்தின் காரணமாக கடலில் சென்று மீன்பிடிக்காத காலங்களில் நிவாரணத் தொகை வழங்கப்படுகிற அதேநேரத்தில் தற்போது கடும் மழையினால் ஏற்பட்டுள்ள பாதிப்பிற்கான நிவாரண உதவிகள் எதுவும் மீனவர்களுக்கு வழங்கப்படவில்லை. இதன்மூலம் மீனவர்கள் வஞ்சிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே, உடனடியாக பாதிப்புக்குள்ளான அனைத்து மீனவர்களுக்கும் போர்க்கால அடிப்படையில் நிவாரண உதவிகள் வழங்குவதன் மூலமாக உலக மீனவர் தினம் என்பது அர்த்தமுள்ளதாக இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்திலுள்ள லட்சக்கணக்கான மீனவர்கள் தங்களது உரிமைகளை மீண்டும் பெற்று வளமான வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டுமென்று உலக மீனவர் தினத்தில் வாழ்த்துகிறேன்.

TNCC President s Statement - 20.11.2015-page-001 TNCC President s Statement - 20.11.2015-page-002


Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *