தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களின் மே தின வாழ்த்துச் செய்தி

Chennai_LabourStatue_Closeupஉலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்று சிகாகோ நகரில் கடந்த 1886 ஆம் ஆண்டு தொழிலாளர்கள் எழுப்பிய பிரகடனம் உலகெங்கும் எதிரொலித்த நாள் மே 1.

இந்திய திருநாட்டைப் பொறுத்தவரை தொழிலாளர் வர்க்கத்தின் தோளோடு தோள் நின்று அவர்களது வாழ்வுரிமைக்கு தொடக்க காலம்தொட்டு பாதுகாப்பு அரணாக இருந்து பணியாற்றி வருவது இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கம்.

அமைப்பு சார்ந்த தொழிலாளர்களுக்கு கிடைக்கப்பெறும் நலன்களைப் போலவே அமைப்பு சாரா அனைத்து தொழிலாளர்களின் குடும்பங்களுக்கும் காப்பீடு, மருத்துவவசதி, ஓய்வூதிய திட்டங்கள் மற்றும் நடைபாதை வியாபாரிகளை பாதுகாக்கும் சட்டம், வேலை செய்யும் இடங்களில் பெண்களுக்கான பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்தி உழைக்கும் வர்க்கத்தின் பாதுகாப்பு அரணாக மத்திய காங்கிரஸ் அரசு செயல்பட்டு வந்தது.

தொழிலாளர்களின் உரிமைகளையும், நலன்களையும் மற்றும் அவர்களுக்கு பாதுகாப்பு தருகிற பல்வேறு சட்டங்களையும் காங்கிரஸ் அரசு சுதந்திர இந்தியாவில் உருவாக்கித் தந்திருக்கிறது .

மத்தியிலும் மாநிலத்திலும் தற்போது நடைபெற்று வருகிற தொழிலாளர் விரோத பா.ஜ.க., அ.தி.மு.க. ஆட்சிக்கு எதிராக மக்கள் கடும் துன்பத்தை அனுபவித்து வருகிறார்கள். இத்துன்பத்திலிருந்து விடுபட தொழிலாளர்களின் உரிமைகளை நசுக்குகிற அ.தி.மு.க. ஆட்சியை வருகிற சட்டமன்றத் தேர்தலில் அகற்றுவதே தொழிலாளர் வர்க்கம் மே 1 ஆம் நாளில் எடுக்கும் சூளுரையாக இருக்க வேண்டும் என்பதே தமிழக காங்கிரஸ் கட்சியின் மேதின செய்தியாகும்.

அனைத்து தொழிலாளர் சகோதர, சகோதரிகளுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் எனது மே தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *