ஆங்கிலப் புத்தாண்டு : தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. .வெ.கி.. இளங்கோவன் விடுக்கும் வாழ்த்துச் செய்தி – 31.12.2015 

12080320_441656299354834_2263921892679359983_oஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு விதமாக வேறுபட்டு அமைவது இயல்பானதாகும். ஆனால் கடந்த 2015 ஆம் ஆண்டில் பல்வேறு சோதனைகளையும், வேதனைகளையும் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. நடப்பு ஆண்டின் இறுதியில் பெய்த கடும் மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கை தமிழக அரசு அலட்சியப் போக்குடன்  கையாண்ட காரணத்தால் சென்னை மாநகரம் உள்ளிட்ட பல பகுதிகள் பேரழிவுக்கு உட்பட வேண்டிய அவலநிலை ஏற்பட்டது. இந்த அவலநிலையிலிருந்து மக்கள் தங்களை மீட்டுக் கொள்ள முடியாத சூழலில் தான் 2016 ஆம் ஆண்டு பிறக்கிறது.

2016 ஆம் ஆண்டைப் பொறுத்தவரை தமிழக மக்கள் கடந்த சில வருடங்களாக அனுபவித்து வருகிற பல்வேறு துன்பங்களிலிருந்து விடுபடுகிற ஆண்டாக நிச்சயம் அமையும் என்பதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துள்ளன. மாற்றத்திற்கான ஆண்டாகவும், முன்னேற்றத்திற்கான திறவுகோலாகவும் 2016 ஆம் ஆண்டு அமைய வேண்டுமென்று விரும்புகிறோம்.

எத்தகைய ஆட்சியை மக்கள் பெற வேண்டும் என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். அந்த வகையில் தமிழகத்தில் நடைபெற்று வருகிற மக்கள் விரோத ஆட்சியை அகற்றி, மக்கள் நலன்சார்ந்த நல்லாட்சி அமைந்திட மதச்சார்பற்ற சக்திகள் ஓரணியில் திரள வேண்டியது மிகமிக அவசியமாகும்.

தமிழக மக்கள் அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ ஆங்கிலப் புத்தாண்டில் வாழ்த்துகிறேன்.


Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *