தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் இரங்கல் செய்தி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் இரங்கல் செய்தி

தூத்துக்குடி மாவட்ட தி.மு. கழகத்தின் மாவட்ட செயலாளராக தொடர்ந்து பணியாற்றி வந்த திரு. என். பெரியசாமி அவர்கள் உடல் நலக்குறைவால் இயற்கை அடைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைகிறேன். டாக்டர் கலைஞர் அவர்களால் முரட்டு பக்தன் என்று அழைக்கப்பட்;ட தூத்துக்குடி மாவட்டத்தில் வலிமைமிக்க தூணாக நின்று திராவிட முன்னேற்ற கழகத்தை காத்து வளர்த்தவர் திரு. பெரியசாமி, எல்லோரிடத்திலும் மிகுந்த அன்போடும், பாசத்தோடும் பழகக் கூடியவர். திராவிட முன்னேற்ற கழகத்தின் செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் இரங்கல் செய்தி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் இரங்கல் செய்தி

சினிமா பாடலாசிரியரும், தமிழக அரசின் முன்னாள் அரசவை கவிஞருமான, கலைமாமணி திரு. நா. காமராசன் அவர்கள் மரணம் அடைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைகிறேன். கவிஞர் நா. காமராசன் அவர்கள் சுமார் 600க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியவர். எழுத்துலகில் தனக்கென தனியொரு பாதை அமைத்து பல புது கவிதைகள் எழுதியவர். இவரது புதுக் கவிதைகளால் அனைவரின் மனதையும் வென்றவர். புது கவிதைகளால் பல விருதுகளைப் பெற்றவர். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் அரசவையில் அரசவை கவிஞராக […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் இரங்கல் செய்தி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் இரங்கல் செய்தி

  தமிழக காங்கிரசின் முன்னணித் தலைவரும், முன்னாள் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவருமான திருமதி.டி.யசோதா அவர்களின் சகோதரர் திரு.டி.எஸ்.முத்து அவர்கள் இன்று காலமானார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். திரு.டி.எஸ்.முத்து அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அன்னாரின் மறைவிற்கு காங்கிரஸ் கட்சி சார்பிலும், என் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அன்னாரை இழந்து வாடும் அவரது சகோதரி திருமதி.டி.யசோதா அவர்களுக்கும், அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்  திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் இரங்கல் செய்தி.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் இரங்கல் செய்தி.

தமிழகத்தின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான திரு.அசோகமித்திரன் அவர்களது மறைவு தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். 200-க்கும் மேற்பட்ட சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் என பல்வேறு படைப்புகளை படைத்து சாதனை படைத்தவர். சாகித்ய அகாடமி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றவர். தமது எழுத்துக்கள் மூலம் தமிழை வளர்த்த திரு.அசோகமித்திரன் அவர்களது மறைவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அவரது குடும்பத்தினருக்கும், எழுத்துலக நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் இரங்கல் செய்தி

தன் ஒப்பற்ற நடிப்புத் திறனால் தமிழ்ப் பெருமக்களின் அன்பிற்குரியவராக திகழும் உலக நாயகன் நடிகர் திரு.கமல்ஹாசன் அவர்களின் சகோதரர் திரு.சந்திரஹாசன் அவர்கள் லண்டனில் மாரடைப்பால் மரணமடைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைகிறேன். அன்னாரின் மறைவிற்கு காங்கிரஸ் கட்சி சார்பிலும் என் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு, அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் குறிப்பாக நடிகர் திரு.கமல்ஹாசன் மற்றும் அவரது குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் ஆகியோருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் இரங்கல் செய்தி:

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் இரங்கல் செய்தி:

இளமைப் பருவம் முதல் காங்கிரஸ் இயக்கத்தின் மீதும் பெருந்தலைவர் காமராஜர் தலைமையின் மீதும் அளப்பரிய பற்றுடன் இயக்கப் பணியாற்றி 5 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு பெற்று, மக்கள் தொண்டராக வாழ்ந்த திரு. பாலையா அவர்களின் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். குமரி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் ஒரு தூண் சாய்ந்து விட்டதாக வேதனைப்படுகிறேன். காங்கிரஸ் கட்சியின் அமைப்பிலும், சட்டமன்றத்திலும் எளிமை, நேர்மை, சேவை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தொண்டால் பொழுதளர்ந்த திரு. பாலையா […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு.திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் இரங்கல் செய்தி:

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு.திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் இரங்கல் செய்தி:

அறிவியல் தமிழின் தந்தை என அழைக்கப்பட்ட முனைவர் மனவை முஸ்தபா காலமான செய்தி கேட்டு மிக்க துயரமடைந்தேன். 30 மொழிகளில் வெளிவந்த யுனஸ்கோ கொரியரின் தமிழ் பதிப்பை 35 ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தி உலக அரங்கில் தமிழ் வளர்ச்சிக்காக அயராது பாடுபட்டவர். அறிவியல் தமிழின் செழுமைக்காக எட்டு அகராதிகளை பதிப்பித்து வெளியிட்டவர் மனவை முஸ்தபா. அவரது தமிழ் பணிக்கு சிகரம் வைத்தாற் போல் பிரிட்டானிக்கா கலைக் களஞ்சியத்தின் தமிழ்ப் பதிப்பு வெளிவர காரணமாக இருந்தவர். அவர் வெளியிட்ட […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் இரங்கல் செய்தி – 06.12.2016

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் இரங்கல் செய்தி – 06.12.2016

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் இரங்கல் செய்தி – 06.12.2016 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், தமிழக முதலமைச்சருமான செல்வி.ஜெயலலிதா அவர்கள் உடல்நலம் குன்றி அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உடல்நிலை மேலும் குன்றி நேற்றிரவு இயற்கை எய்திய செய்தி அறிந்து மிகுந்த துயரமும், வேதனையும் அடைகிறேன். அமரர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால், அடையாளம் காணப்பட்டு திரையுலகில் புரட்சி […]

இரங்கல் செய்தி – 22.10.2016

இரங்கல் செய்தி – 22.10.2016

இரங்கல் செய்தி – 22.10.2016 வ.உ.சி. பேரன் உலகநாதன் மறைவு இந்திய சுதந்திரப் போராட்ட தலைவரும், செக்கிழுத்த செம்மலுமான வ.உ.சி.அவர்களின் பேரன் திரு.உலகநாதன் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தாலூகா, சென்னூர் எனம் ஊரில் உடல் நலமின்றி இன்று இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைகிறேன். காங்கிரஸ் கட்சியில் சிறப்பாக பணியாற்றி வந்தவர் திரு.உலகநாதன் அவர்கள். அவரது மறைவு காங்கிரஸ் பேரிழப்பாகும். அன்னாரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு, அவரை இழந்து வாடும் […]

இரங்கல் செய்தி – 21.10.2016

இரங்கல் செய்தி – 21.10.2016

இரங்கல் செய்தி: திரு. பசுமலை ரவி மறைவு : மதுரை மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் திரு.பசுமலை ரவி அவர்கள் மாரடைப்பால் அகால மரணமடைந்தார் எனும் செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைகிறேன். மாவட்ட காங்கிரஸ் தலைவராகவும் மற்றும் பல்வேறு பொறுப்புக்களில் இருந்தும் காங்கிரஸ் பேரியக்கம் வளர தன்னை அர்ப்பணித்துக் கொண்டு பாடுபட்டவர் திரு.பசுமலை ரவி. இவர் பழகுவதற்கு இனிமையானவர், அன்பும் பண்பும் நிறைந்தவர். அவரது மறைவு காங்கிரஸ் பேரியக்கத்திற்கு பெரும் இழப்பாகும். அன்னாரின் மறைவிற்கு […]