காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு நிகழ்ச்சி மற்றும் பொதுக்கூட்டம்

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு நிகழ்ச்சி மற்றும் பொதுக்கூட்டம்

தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி காங்கிரஸ் தேர்தல் அறிக்கை நிகழ்ச்சி நாளை (27.4.2016) புதன்கிழமை காலை 11 மணியளவில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளர் திரு.முகல் வாஸ்னிக் அவர்கள் வெளியிட முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர் இ.எம்.சுதர்சன நாச்சியப்பன் அவர்கள் பெற்றுக் கொள்கிறார். இந்நிகழ்வில் தேசிய செய்தித் தொடர்பாளர் திருமதி. குஷ்பூ சுந்தர் […]

சொல்லின் செல்வர் திரு.ஈ.வெ.கி.சம்பத் அவர்களின் 91 ஆவது பிறந்த நாள் விழா

சொல்லின் செல்வர் திரு.ஈ.வெ.கி.சம்பத் அவர்களின் 91 ஆவது பிறந்த நாள் விழா

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமையகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று 5.3.2016 அன்று சொல்லின் செல்வர் திரு.ஈ.வெ.கி.சம்பத் அவர்களின் 91 ஆவது பிறந்த நாள் விழாவில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.