தந்தை பெரியார் 138வது பிறந்தநாள்

தந்தை பெரியார் 138வது பிறந்தநாள்

தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணாசாலையில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கும், பெரியார் திடலிலுள்ள அவரது திருவுருவ சிலைக்கும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமையகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் அலங்கரிக்கப்பட்ட திருவுருவ படத்திற்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர், காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் திரு.கே.ஆர்.ராமசாமி, முன்னாள் மாநில தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன், திரு.கே.வி.தங்கபாலு, திரு.எம்.கிருஷ்ணசாமி, மாவட்ட தலைவர்கள், காங்கிரஸ் பேரியக்கத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.