






அமரர் ராஜீவ்காந்தி பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகள்
20.8.2016 – சனிக்கிழமை – சத்தியமூர்த்திபவனில் அமரர் ராஜீவ்காந்தி பிறந்தநாள் நிகழ்ச்சிகள் இரத்ததானம், ராஜீவ் காந்தி பற்றிய கருத்தரங்கு நடந்தது.

ராஜீவ் ஜோதி யாத்திரை
இன்று (9.8.2016) செவ்வாய் கிழமை காலை 9.30 மணியளவில் ஸ்ரீபெரும்புதூர், ராஜீவ் காந்தி நினைவாலயத்தில் அமரர் ராஜீவ் காந்தி அவர்களின் 72 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ராஜீவ் ஜோதி யாத்திரை துவக்கவிழா நடந்தது.

அமரர் ராஜீவ் காந்தியின் 25 வது நினைவு தினத்தை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள். பின்பு பயங்கரவாதத்திற்கு எதிராக உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.
இன்று (21.5.2016) சனிக்கிழமை அமரர் ராஜீவ் காந்தியின் 25 வது நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களின் தலைமையில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள். பின்பு பயங்கரவாதத்திற்கு எதிராக உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் கேரளா, கர்நாடக காங்கிரஸ் நிர்வாகிகளும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளரும், தமிழக மேலிடப் பொருப்பாளரும் திரு.முகுல் வாஸ்னிக் அவர்களும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

அமரர் ராஜீவ் காந்தியின் அவர்களின் 25 வது நினைவு தினம்.
இன்று (21.5.2016) சனிக்கிழமை அமரர் ராஜீவ்காந்தியின் 25 வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களின் தலைமையில், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அவருடைய திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள். இதில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு மேலிட பொறுப்பாளரும் திரு.முகுல் வாஸ்னிக் அவர்களும் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.