தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 13.5.2016 அ.தி.மு.க. ஆட்சி அமைந்தது முதல் எங்கும் ஊழல், எதிலும் ஊழல், எதற்கும் ஊழல் என்று தொடர்கதையாக கடந்த ஐந்தாண்டுகளாக நடைபெற்று வருகிறது. அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துவிட்ட காரணத்தால் ஒட்டுமொத்த அ.தி.மு.க.வே ஒரு ஊழல் கட்சி என்ற களங்கத்தை பெற்றிருக்கிறது. இதுகுறித்து ஜெயலலிதா கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. ஏனெனில் அவரே ஊழல் வழக்கில் தண்டனை பெற்று முதலமைச்சர் பதவியை இழந்தவர் என்பதால் ஊழலை தடுக்கிற […]
