தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களின் மே தின வாழ்த்துச் செய்தி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களின் மே தின வாழ்த்துச் செய்தி

உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்று சிகாகோ நகரில் கடந்த 1886 ஆம் ஆண்டு தொழிலாளர்கள் எழுப்பிய பிரகடனம் உலகெங்கும் எதிரொலித்த நாள் மே 1. இந்திய திருநாட்டைப் பொறுத்தவரை தொழிலாளர் வர்க்கத்தின் தோளோடு தோள் நின்று அவர்களது வாழ்வுரிமைக்கு தொடக்க காலம்தொட்டு பாதுகாப்பு அரணாக இருந்து பணியாற்றி வருவது இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கம். அமைப்பு சார்ந்த தொழிலாளர்களுக்கு கிடைக்கப்பெறும் நலன்களைப் போலவே அமைப்பு சாரா அனைத்து தொழிலாளர்களின் குடும்பங்களுக்கும் காப்பீடு, மருத்துவவசதி, ஓய்வூதிய திட்டங்கள் மற்றும் […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிவிப்பு

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிவிப்பு

நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை நிலையமான சத்தியமூர்த்தி பவனிலிருந்து செயல்படுவதற்கு காங்கிரஸ் வழக்கறிஞர் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இக்குழுவில் செல்வி. சுதா ராமகிருஷ்ணன் திரு.வி.அருணாசலம் திரு.சிவ.ராஜசேகரன் திரு.சி.சந்தன் பாபு ஆகியோர் உறுப்பினர்களாக பணியாற்றுவார்கள். தமிழகத்தில் பல பகுதிகளிலிருந்து தேர்தல் சம்மந்தமாக எழுகிற பல்வேறு சட்டரீதியான பிரச்சனைகளுக்கு தீர்வு காணுகிற வகையில் இக்குழு செயல்படும்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை  வெளியீடு மற்றும் தமாவினர் இணையும் நிகழ்ச்சி

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு மற்றும் தமாவினர் இணையும் நிகழ்ச்சி

தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி காங்கிரஸ் தேர்தல் அறிக்கை நிகழ்ச்சி இன்று (27.4.2016) புதன்கிழமை காலை 11 மணியளவில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் தலைமையில் வெளியிடப்பட்டது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளர் திரு.முகல் வாஸ்னிக் அவர்கள் வெளியிட முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர் இ.எம்.சுதர்சன நாச்சியப்பன் அவர்கள் பெற்றுக் கொண்டார். பின்னர் தமாகவிலிருந்து முன்னாள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராணி அவர்களும் மற்றும் […]

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை – தமிழக சட்டமன்றத் தேர்தல் ‡ – 2016

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை – தமிழக சட்டமன்றத் தேர்தல் ‡ – 2016

முழு தேர்தல் அறிக்கையை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். இது அறிக்கை அல்ல, ஆவணம் ! ஈ.வெ.கி.ச.இளங்கோவன் தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தமிழகத்தில் நடைபெறவுள்ள 15வது சட்டப்பேரவை தேர்தலுக்குக் காங்கிரஸ் கட்சியின் சார்பாகத் தேர்தல் அறிக்கை தயாரிக்க நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் இ.எம்.சுதர்சன நாச்சியப்பன் தலைமையில் 14 உறுப்பினர்கள் கொண்ட குழுவை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் அன்னை சோனியா காந்தி அவர்களின் பரிந்துரையின் பேரில் அமைக்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள முன்னணி […]

தமிழ் மண்ணில் பா.ஜ.க. தனது தேர்தல் அறிக்கையின் மூலம் விதைத்திருக்கிற விஷ வித்துக்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இந்த பொறுப்பு தமிழகத்தில் சமூகநீதியில் அக்கறையுள்ள பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இருக்கிறது. வருகிற சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு உரிய பாடத்தை மக்கள் கற்பிப்பார்கள்- தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 22.4.2016

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தேர்தல் அறிக்கை வெளியிட ஜனநாயகத்தில் முழுமையான உரிமை இருக்கிறது. ஆனால் தமிழக பாரதிய ஜனதா கட்சி வெளியிட்டிருக்கிற தேர்தல் அறிக்கை தமிழகத்தில் காலம் காலமாக நிலவி வருகிற மத நல்லிணக்கத்தையும், சமூகநீதியையும் சீர்குலைத்து படுகுழியில் தள்ளுவதாக அமைந்திருக்கிறது. மத்தியில் ஆளுகிற கட்சியாக பா.ஜ.க. இருப்பதால் இதுகுறித்து எவரும் கவலைப்படாமல் இருக்க முடியாது. ஏறத்தாழ நூறு ஆண்டுகால போராட்டத்தின் காரணமாக பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீட்டு உரிமை பெறப்பட்டு நடைமுறையில் […]

இன்று (14.4.2016) – பாபாசாஹிப் அம்பேத்கரின் பிறந்த நாள்

இன்று (14.4.2016) – பாபாசாஹிப் அம்பேத்கரின் பிறந்த நாள்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் தலைமையில் பாபாசாஹிப் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவுப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார்கள். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகள், மூத்த தலைவர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டு பாபாசாஹிப் அம்பேத்கர் அவர்கள் பிறந்த தினத்தை இனிப்பு வழங்கி கொண்டாடினர்.  

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்களின் தமிழ் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்களின் தமிழ் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்களின் தமிழ் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி பன்னெடுங்காலமாக தமிழ் ஆண்டுகள் என நாம் கொண்டாடி வரும் 60 ஆண்டுகளில் 30 ஆவது ஆண்டாக தற்போது துன்முகி ஆண்டு பிறக்கிறது. துன்முகி ஆண்டில் நாட்டைப் பிடித்திருந்த துன்பங்கள் அகன்று நாட்டு மக்களுக்கு நன்மைகள் தரும் ஆண்டாக மலர்ந்திடும் என நம்பிக்கை கொள்வோம். இயற்கை சீற்றத்தால் இன்னல் கொடுத்த ஆண்டும் மாறி, ஆண்டு கொண்டிருக்கும் ஆட்சியும் மாறி மக்கள் மனங்களில் […]

தமிழகத்தில் நடைபெறவுள்ள 2016 சட்டமன்றத் தேர்தலுக்காக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியால் மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் இ.எம். சுதர்சன நாச்சியப்பன் தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு பட்டியலின் விவரம். 1. திரு.ஈ.எம்.சுதர்சன நாச்சியப்பன் 2. திரு.யு.பலராமன் 3. திரு.மாணிக் தாகூர் 4. திரு.ஆ.கோபண்ணா 5. திரு.சி.ஆர்.கேசவன் 6. திரு.சோலையப்பன் 7. திரு.கு.செல்வப்பெருந்தகை 8. திரு.சி.டி.மெய்யப்பன் 9. திரு.எஸ்.எம்.இதாயத்துல்லா 10. திரு.எம்.ஜோதி 11. திருமதி.எம்.ஜான்சி ராணி 12. திரு.எம்.எஸ்.திரவியம் 13. திரு.சூர்யமூர்த்தி 14. திரு.பெருமாள் சாமி 15. பேரா.இந்திரா காந்தி 16. திருமதி. இமயா கக்கன்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களின் யுகாதி வாழ்த்துச் செய்தி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களின் யுகாதி வாழ்த்துச் செய்தி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களின் யுகாதி வாழ்த்துச் செய்தி  தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி பண்டிகை தெலுங்கு, கன்னடம் பேசும் மக்களால் மகிழ்ச்சியோடு கொண்டாடப்படுகிறது. மொழியாலும், நாகரீக கலாச்சார பண்பாட்டாலும் என்றென்றும் தமிழர்களோடு இணைபிரியா இணக்கமான தொடர்புடையவர்கள் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள். தாய்த் தமிழ் மொழியின் வழி வந்த அம் மொழிகளின் மேன்மையைப்பற்றி மகாகவி பாரதியார் வெகுவாக பாராட்டியுள்ளார். தமிழர்களோடு அவர்கள் பாசத்தால் ஒன்றிணைந்து சகோதர உணர்வோடு பழகி வரும் பாங்கு நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு […]

மத்திய காங்கிரஸ் ஆட்சியில் ஒரு லிட்டர் பெட்ரோலில் கலால் வரி ரூ.5 மட்டுமே இருந்தது. அது தற்போது ரூ.20.48ஆக உயர்ந்திருக்கிறது. அதேபோல 1 லிட்டர் டீசலில் கலால் வரி ரூ.15.83ஆக உயர்ந்துள்ளது. கடந்த 20 மாதங்களில் கலால் வரி உயர்வு மூலம்  ரூபாய் 1 லட்சத்து 48 ஆயிரத்து 977 கோடி, நரேந்திர மோடி அரசு வருமானத்தை  பெருக்கி கஜானாவை நிரப்பிக்கொண்டுள்ளது. இந்த வருமானத்தின் மூலமாகத்தான் நிதிப்பற்றாக்குறை சரிசெய்யப்பட்டுவருகிறது. நியாயமாக மக்களுக்கு போய்ச் சேரவேண்டிய பயன்களை அபகரிக்கிற நரேந்திர மோடி அரசு மக்கள் நலன் சார்ந்த அரசா? மக்கள் விரோத அரசா?  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 5.4.2016

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 5.4.2016 சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மிகப்பெரிய அளவில் வீழ்ச்சி அடைந்துவரும் நிலையில் அதனுடைய பயன்களை மக்களுக்கு போய்ச் சேரவிடாமல் தடுக்கிற நோக்கத்தில் மத்திய பா.ஜ.க. அரசு தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை பலமுறை உயர்த்தி உள்ளது. நேற்றைய அறிவிப்பின்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.19ஆகவும், டீசல் விலை ரூ.1 ஆகவும், உயர்த்தியிருக்கிறது. இத்தகைய விலை உயர்வுகளால் ஏழை எளிய மக்கள் கடுமையாக […]