தேர்தல் நேரத்தில் ஊழலை ஒழிப்பதாக வேடம் தரித்து ஆட்சிக்கு வந்த நரேந்திர மோடி, தகவல் அறியும் உரிமைச் சட்டம் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதில் நம்பிக்கை இல்லாதவராக இருக்கிறார். மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் பதவி பல மாதங்கள் காலியாக இருந்த நிலையில் கடும் விமர்சனங்கள் எழுந்த பிறகுதான் அப்பதவி நிரப்பப்பட்டன. அதேபோல லோக்பால் சட்டத்தை செயல்படுத்துவதிலே பா.ஜ.க. அரசுக்கு கடுகளவும் அக்கறை இல்லாமல் இருக்கிறது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 20.10.2015 காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சுதந்திர இந்தியாவில் அதுவரை நிறைவேற்றப்படாத புரட்சிகரமான தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை நிறைவேற்றி சாதனை படைத்தது. இதற்கு முன்னர் அரசின் செயல்பாடுகள் குறித்து நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே கேள்வி கேட்டு பதில் பெறுகிற உரிமை வழங்கப்பட்டிருந்தது. தற்போது அந்த உரிமையை சாதாரண குடிமக்கள் பெறுகிற வகையில் தகவல் அறியும் உரிமைச் […]