
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 17.10.2016 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்துள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மற்றும் ஆப்பரேட்டர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இக்கட்டணம் குறித்து போக்குவரத்து ஆணையர் முன்னிலையில் ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்தி, கட்டணம் நிர்ணயித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்படி சென்னையிலிருந்து சொகுசு பேருந்தில் மதுரை செல்வதற்கு ரூ.880, திருச்சிக்கு ரூ.650, கோவைக்கு ரூ.900, திருநெல்வேலிக்கு ரூ.1,000 மற்றும் ஏ.சி. பேருந்தாக இருந்தால் […]
விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் தலைவர் திரு.பி.கே.தெய்வசிகாமணி மற்றும் நிர்வாகிகள் இன்று நண்பகல் சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களை சந்தித்து காவிரி பிரச்சனையில் தமிழகத்தின் நலன்காக்க அனைத்து கட்சிகளும், இயக்கங்களும் ஒன்றுகூடி அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நாளை (6.10.2016) வியாழக்கிழமை சென்னை எழும்பூரில் காலை 11 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். அவர்களின் அழைப்பினை ஏற்று இக்கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக முன்னாள் நாடாளுமன்ற […]
தஞ்சை மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாவட்ட இலக்கிய அணி தலைவர் திரு.வி.கனகராஜ், மாவட்ட பிரச்சாரக்குழு தலைவர் திரு. பால குலோத்துங்கன், மாவட்ட செயலாளர் திரு.ஜி.லெட்சுமி நாராயணன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் திரு.ப.ஆண்டவர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட பொதுச்செயலாளர் திருமதி. இந்திரா முத்துவிஜயன் மற்றும் திரு.முத்து விஜயன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தமாகா நிர்வாகிகள் தொண்டர்கள் 01.10.2016 அக்கட்சியிலிருந்து விலகி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.திருநாவுக்கரசர் அவர்கள் முன்னிலையில் காங்கிரஸ் பேரியக்கத்தில் தங்களை இணைத்துக் […]
தேசப்பிதா அண்ணல் மகாத்மா காந்தியடிகள் பிறந்தநாள், முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி பிறந்தநாள் மற்றும் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் நினைவுநாள் நிகழ்ச்சிகள் இன்று சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தலைவர்களது திருவுருவப் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். முன்னதாக காலை 10.30 மணிக்கு கடற்கரை சாலையில் உள்ள அண்ணல் மகாத்மா காந்தி அவர்களின் திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் […]
ஆந்திர மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ரகு வீரா ரெட்டி அவர்கள், இன்று சத்தியமூர்த்தி பவனுக்கு வருகை புரிந்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசர் அவர்களுக்கு தனது வாழ்த்தினை தெரிவித்துக்கொண்டார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமையகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் முன்னணி தலைவர்கள் மற்றும் பொதுச்செயலாளர்கள் இக்கூட்டத்தில் கலந்துக்கொண்டனர்.
இன்று 16.09.2016 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் பதவியேற்பு விழா…