புதிய தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் பதவி ஏற்பு விழா

புதிய தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் பதவி ஏற்பு விழா

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் நாளை 16.09.2016 மாலை 04:00 மணியளவில் சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கு வருகை தந்து பொறுப்பேற்க இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் அனைவரையும் கலந்துக்கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

அமரர் ராஜீவ்காந்தி பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகள்

அமரர் ராஜீவ்காந்தி பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகள்

20.8.2016 – சனிக்கிழமை – சத்தியமூர்த்திபவனில் அமரர் ராஜீவ்காந்தி பிறந்தநாள் நிகழ்ச்சிகள் இரத்ததானம், ராஜீவ் காந்தி பற்றிய கருத்தரங்கு நடந்தது.

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75வது ஆண்டு விழா

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75வது ஆண்டு விழா

இந்திய விடுதலை போராட்டத்தின் இறுதி கட்டமாக நடைபெற்ற ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின் 75வது ஆண்டு விழா இன்று (09.08.2016) செவ்வாய் கிழமை சத்தியமூர்த்தி பவனில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் திரு. கே.ஆர். ராமசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொருளாளர் திரு. நாசே. ராமச்சந்திரன் மற்றும் சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளின தலைவர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

பெருந்தலைவர் காமராஜர் பிறந்ததின விழா

பெருந்தலைவர் காமராஜர் பிறந்ததின விழா

தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடத்திய பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 114 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் டாக்டர் திரு.ஜி.சின்னா ரெட்டி, திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு.கே.ஆர்.ராமசாமி, MLA ஆகியோர் முன்னிலையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்தது. இதில் அலங்கரித்து வைக்கப்பபட்ட பெருந்தலைவர் காமராஜர் திருவுருவப்படத்திற்கு திரு.ஜி.சின்னாரெட்டி, திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் மற்றும் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு.கே.ஆர்.ராமசாமி ஆகியோர் மலர்தூவி மரியாதை செய்தனர். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் முன்னிலையில் புதுச்சேரி முதல்வர் மாண்புமிகு.நாராயணசாமி அவர்கள் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் முன்னிலையில் புதுச்சேரி முதல்வர் மாண்புமிகு.நாராயணசாமி அவர்கள் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.

இன்று 24.06.2016 வெள்ளிக்கிழமை சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் முன்னிலையில் புதுச்சேரி முதல்வர் மாண்புமிகு.நாராயணசாமி அவர்கள் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். உடன் புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் மற்றும் அமைச்சர்கள் உடனிருந்தார்கள்.  

இளம் தலைவர் திரு.ராகுல் காந்தி அவர்களின் 47 ஆவது பிறந்தநாள் விழா…

இளம் தலைவர் திரு.ராகுல் காந்தி அவர்களின் 47 ஆவது பிறந்தநாள் விழா…

இன்று (19.6.2016) – ஞாயிற்றுக்கிழமை – அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் திரு.ராகுல் காந்தி அவர்களின் 47 ஆவது பிறந்த நாள் விழா சென்னை சத்தியமூர்த்தி பவனில் கேக் வெட்டி கோலகலமாகக் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளும் மற்றும் துணை அமைப்பான தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தொண்டர்களும் பெருமளவு கலந்து கொண்டு பிறந்தநாள் விழாவை சிறப்பித்தார்கள்.

இன்று 04.06.2016 சென்னை சத்தியமூர்த்தி பவனில் ‘சொன்னதை செய்யாத பா.ஜ.க.’ என்ற தலைப்பில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டண கருத்தரங்கம் நடைபெற்றுது.

இன்று 04.06.2016 சென்னை சத்தியமூர்த்தி பவனில் ‘சொன்னதை செய்யாத பா.ஜ.க.’ என்ற தலைப்பில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டண கருத்தரங்கம் நடைபெற்றுது.

இன்று 04.06.2016 சென்னை சத்தியமூர்த்தி பவனில் ‘சொன்னதை செய்யாத பா.ஜ.க.’ என்ற தலைப்பில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டண கருத்தரங்கம் நடைபெற்றுது. அதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களும், திரு. சா.பீட்டர் அல்போன்ஸ், டாக்டர் நாசே ஜெ. ராமச்சந்திரன், திரு. கு. செல்வப்பெருந்தகை, திரு. உ. பலராமன், திரு. ஏ.பி.சி.வீ. சண்முகம், திரு. ஆ. கோபண்ணா, திரு. எம். ஜோதி, திரு. குமரி மகாதேவன் ஆகியோர் கருத்துரை வழங்கி கொண்டிருக்கிறார்கள் மற்றும் ஏராளமான காங்கிரஸ் […]

அமரர் ராஜீவ் காந்தியின் அவர்களின் 25 வது நினைவு தினம்.

அமரர் ராஜீவ் காந்தியின் அவர்களின் 25 வது நினைவு தினம்.

இன்று (21.5.2016) சனிக்கிழமை அமரர் ராஜீவ்காந்தியின் 25 வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களின் தலைமையில், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அவருடைய திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள். இதில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு மேலிட பொறுப்பாளரும் திரு.முகுல் வாஸ்னிக் அவர்களும் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.