தலைவர் இளங்கோவனுடன் தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சந்திப்பு

தலைவர் இளங்கோவனுடன் தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சந்திப்பு

           தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் கே.வி.ராஜ்குமார் மற்றும் நிர்வாகிகள் எஸ்.வெங்கடேசன், எஸ்.பி.சுப்பிரமணியம், வழக்கறிஞர் பாண்டியன், டி.ராமமூர்த்தி, தனபால், வி.வெங்கடபதி, ப.சென்னியப்பன், தர்மலிங்கம், நல்லசிவம், பொன்.செல்வகுமார், காந்தி, கே.நடராஜன், ரவிகுமார் ஆகியோர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களை இன்று (07.05.2015) பகல் 11 மணியளவில் சத்தியமூர்த்தி பவனில் சந்தித்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர். அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

கருத்து சுதந்திர ஒடுக்குமுறைகளுக்கு எதிரான கண்டனக் கூட்டம்

கருத்து சுதந்திர ஒடுக்குமுறைகளுக்கு எதிரான கண்டனக் கூட்டம்

மார்ச் 29, 2015 அன்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம், சென்னை பத்திரிகையாளர்கள் சங்கம், அனைத்து ஊடகவியலாளர் சங்கங்கள் இனைந்து கருத்து சுதந்திர ஒடுக்குமுறைகளுக்கு எதிரான கண்டனக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த கண்டன கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். திமுக பொருளாளர் திரு. மு.க. ஸ்டாலின், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் திரு.ஜி. ராமகிருஷ்ணன், பத்திரிக்கையாளர் திரு. இந்து என். ராம் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.