EVKS-Ilangovanஇந்திய தேசிய காங்கிரஸ் கட்சித் தலைவர் அன்னை சோனியா காந்தி மற்றும் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட திரு.E.V.K.S. இளங்கோவன் அவர்கள் 02.11.2014 , ஞாயிறு அன்று பொறுப்பேற்றுக் கொண்டார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர்களும் மாநில, மாவட்ட நிர்வாகிகளும், தொண்டர்களும் பெருந்திரளாகக் கலந்துக் கொண்டு தலைவரை வாழ்த்தினார்கள். இந்நிகழ்ச்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் திரு.ஆர். பிரபு , முன்னாள் மாநிலத் தலைவர்கள் திரு.குமரி அனந்தன் மற்றும் திரு. கிருஷ்ணசாமி, காங்கிரஸ் தேசிய செயலாளர்கள் திரு. சு. திருநாவுக்கரசர் மற்றும் டாக்டர் திரு. செல்லக்குமார், முன்னாள் மத்திய அமைச்சர்கள் திரு. ப.சிதம்பரம், திருமதி, ஜெயந்தி நடராஜன், மாணவர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் திரு. T.A. நவீன், மகளிர் காங்கிரஸ் தேசிய செயலாளர் செல்வி. ஜோதிமணி, இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தேசிய பொது செயலாளர் திரு. மகேந்திரன், தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் திருமதி. விஜயதாரணி ஆகியோர் கலந்துக் கொண்டு தலைவரை வாழ்த்தினர்.